கோபியை வீட்டில் இருக்க சொன்ன ஈஸ்வரி..வெளியே கிளம்பும் பாக்யா.. கடுப்பான ராதிகா எடுத்த முடிவு
சென்னை: கோபியை தன்னுடைய வீட்டிலேயே இருக்க சொல்லி ஈஸ்வரி வற்புறுத்துகிறார்.
கோபியின் வீட்டில் ராதிகாவும் சென்று இருக்க சொல்லி ராதிகாவின் அம்மா கூறுகிறார்.
கோபி இங்கே இருந்தால் நான் என்ன செய்ய வேண்டும் என்று பாக்கியா கேள்வி கேட்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 18ம் தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் ஈஸ்வரி இனி கோபி இந்த வீட்டில் தான் இருப்பான் என்று முடிவு எடுத்து இருக்கும் நிலையில் அப்படி என்றால் நான் என்ன பண்ணனும் என்பதை நீங்களே சொல்லுங்க என்று பாக்கியா கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
மேலும் அவருக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லாம ஆயிடுச்சு அப்படி இருக்கும் போது அவர் இந்த வீட்டில் இருப்பார் என்றால் நான் வெளியே போகட்டுமா? என கேட்க, நீ எதுக்கு வெளியே போகணும் என எல்லோரும் பாக்கியாவை கேட்கின்றனர். அதற்கு ஈஸ்வரி ஆமா நீ எதுக்கு வெளியே போகணும்? அவனும் இந்த வீட்டில் இருக்கட்டும். நீ இந்த வீட்டிலேயே இரு என்று சொல்கிறார்.

அது எப்படி முடியும் அத்தை என்று பாக்கியா கேட்க, உங்க முடிவு இதுதான் என்றால் நான் எனக்கான முடிவை எடுத்துக்கலாமா? என கேட்க, என்ன மிரட்டுகிறாயா? என்று ஈஸ்வரி கேட்க அதற்கு பாக்யா சத்தியமா இல்லை என்று சொல்கிறார். பிறகு அப்படி என்றால் நான் வெளியே போறேன் என்று பாக்கியா சொல்ல அதற்கு எழில் நீ எதுக்கு அம்மா வெளியே போகணும் அவர்தான் வெளியே போகணும் என்ன சப்போர்ட் செய்கிறார்.
ஜெனியும் பாக்கியாவிற்கு ஆதரவாக பேச, ஈஸ்வரி கொஞ்ச நேரம் எல்லாரும் அமைதியா இருக்கீங்களா? யாரும் எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்கிறார். அதே சமயம் இந்த வீட்டில் கோபி இருப்பார் என்று சொல்ல, எழில் சரிவாமா நம்ம இந்த வீட்டை விட்டு கிளம்பலாம் என்று கூப்பிட, ராமமூர்த்தி தடுத்து நிறுத்தி கோபி இந்த வீட்ல இருக்கேன்னு சொன்னானா அவன் போதை தெளிஞ்சு எழுந்ததும் பொண்டாட்டியை தேடி பூனை மாதிரி போயிட்டே இருப்பான் என்று சொல்லி தடுத்து நிறுத்துகிறார்.
அடுத்ததாக கோபி போதை தெளிந்து எழுந்து தனது வீட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கம் ராதிகா கோபி இன்னும் வரல அவ்வளவுதான் என்னுடைய வாழ்க்கை என சொல்ல, அவருடைய அம்மா அவர் அங்க தான் இருப்பாரோ நீயும் அங்கதான் இருக்கணும் கிளம்பி போ மயூவை நான் பாத்துக்குறேன் என்று சொல்லி ஏத்தி விடுகிறார்.
மறுபக்கம் கோபி போனை பார்த்து ராதிகா 108 மிஸ்டுகால் கொடுத்திருந்ததை பார்த்ததும் ஷாக் ஆகிறார். இன்னிக்கு உனக்கு சங்கு தான் இந்த வீட்ல வேற தங்கி இருக்க, இனி என்ன நடக்க போகுதோ என்று கோபி புலம்ப அப்போது இனியா உள்ளே வந்து இங்கேயே இருங்க டாடி என்று சொல்ல, அது எப்படி முடியும் என கோபி கேட்டு, அதெல்லாம் எனக்கு தெரியாது நீங்க இங்கேயே இருங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இனியாவை சமாளித்துக் கொண்டு கோபி கீழே எழுந்து வர, ஈஸ்வரி கூப்பிட்டு உட்கார வைத்து அம்மா சொல்றது கேட்ப தான என்று சொல்லி, நீ இனி இந்த வீட்டிலேயே இருந்து விடு என்று சொல்கிறார். இதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications