தற்கொலை செய்யத் துணிந்த ராதிகா.. சப்போர்ட்டுக்கு வந்த அம்மா.. ஈஸ்வரி கேள்வியால் தவிக்கும் பாக்கியா
சென்னை: கோபியிடமும் மொத்த குடும்பத்திடமும் நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என்று ராதிகா பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.
ராதிகாவுக்கு சப்போட்டாக அவருடைய அம்மாவும் வீட்டிற்க்கே வந்து அனைவரையும் போலீஸில் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 21ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஈஸ்வரி என்ன கோபி அவ வெளியே போறா தானே என்று கேட்க, அதற்கு ராதிகா நான் எதுக்கு வெளியே போகணும். நான் இங்கே தான் இருப்பேன். நான் இருக்கிறது பிடிக்கவில்லை என்றால் நீங்க போங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் ராதிகாவுக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கின்றனர். ஈஸ்வரி நீ வெளியே போய் தான் ஆகணும் என சொல்ல, போகலைன்னா என்ன பண்ணுவீங்க இன்று ராதிகா கேட்க, அதற்கு ஈஸ்வரி கொலை பண்ணுவேன் என்று ராதிகாவை மிரட்டுகிறார். அப்போது சரியாக ராதிகாவின் அம்மா வீட்டிற்குள் வந்து, ஏமாந்தா நீங்க அதையும் பண்ணுவீங்க இனிமே என் பொண்ணு இந்த வீட்டில் தான் இருப்பா அதை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்கிறார்.

அதே மீறி ராதிகாவை வெளியே போகணும் என்றே இல்ல அவளை ஏதாவது கொடுமை படுத்தணும்னு நினைச்சீங்கன்னா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து மொத்த பேரையும் உள்ளே தள்ளிடுவேன். என் பையனுக்கு நிறைய போலீஸ் தெரியும். நான் இங்கேதான் எதிர் வீட்டில் இருப்பேன். என் பொண்ணுக்கு நடக்கிறது எல்லாத்தையும் பார்த்துட்டு இருப்பேன் என மிரட்டிக்கொண்டு ராதிகா, நீ உள்ளே போ என்று சொல்ல அவர் பேக்கை எடுத்துக்கொண்டு கோபி உங்க ரூம் மேல தானே இருக்கு என்று கேட்டபடியே மேலே போகிறார்.

பிறகு அனைவரும் கோபத்தில் கோபியை திட்டுகின்றனர். அதனால் நான் சமாளிக்கிறேன் என்று கோபி கூறி கொண்டு, ராதிகாவிடம் பேச ரூம்பிற்கு வருகிறார். மேலே வந்த கோபி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய அதற்கு அவர் நான் இங்கேதான் இருப்பேன் என்று உறுதியாக கூறுகிறார். அதற்கு நான், நீ, மயூ மட்டும் வீட்ல சந்தோசமாக இருக்கலாம் என சொல்ல, என்ன கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போனீங்கன்னா நான் தற்கொலை பண்ணிப்பேன். என்னுடைய தற்கொலைக்கு உங்க குடும்பம் தான் காரணம் என்று எழுதி வைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
நான் செத்துப் போனா அப்புறம் நீங்க குடும்பத்தோட ஜெயிலுக்கு போக வேண்டியதுதான் என்று சொல்ல, கோபி அதிர்ச்சியாகி இருக்கிறார். மேலும் ராதிகாவிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்பதை தெரிந்து கொண்டு திருதிருவென முடித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications