கோபியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய எழில்.. ராதிகாவின் ஆட்டம்.. பாக்யாவின் பதிலடி
சென்னை: கோபியிடம் ராதிகா தான் தற்கொலை செய்து கொள்வேன், இந்த வீட்டை விட்டுப் போக சொன்னால் என்று மிரட்டுகிறார்.
அதனால் கோபி ராதிகா இங்கே தான் இருப்பார் என்று அனைவர் முன்னிலையிலும் சொல்கிறார்.

கோபியை கழுத்தை பிடித்து எழில் தள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 22ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபி ராதிகாவை வீட்டை விட்டு போக சொல்ல, அதற்கு ராதிகா என்னை நீங்கள் வற்புறுத்துனீங்க என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன். உங்கள் எல்லாருடைய பெயரையும் எழுதி வைத்து விடுவேன். நீங்கள் எல்லோரும் ஜெயிலுக்கு போக வேண்டும் என்று மிரட்டுகிறார்.

கீழே போய் ராதிகா இங்கே தான் இருப்பார் என்று சொல்லுங்க என்று சொல்லி அனுப்ப, கீழே வந்த கோபியிடம் அனைவரும் என்ன ராதிகா கிளம்புறேன் சொல்லிட்டா தானே என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ராதிகா பின்னாடி வந்து, ராதிகா இங்கே தான் இருப்பார் என்று சொல்லுங்க கோபி என சொல்ல அனைவரும் மீண்டும் அதிர்சியடைகின்றனர்.
ராதிகா இனி இங்கேதான் இருப்பாள். நானும் ராதிகாவும் இங்கே தான் இருக்கப் போகிறோம் என்று கோபி சொல்ல, அதிர்ச்சியான எழில் நீங்க இந்த வீட்டில் முதலில் இருக்கக் கூடாது என்று கோபியை கழுத்தை பிடித்து வெளியே தள்ள, ராதிகா என்னுடைய புருஷன் மேல கை வைக்க இங்க யாருக்கும் உரிமை கிடையாது என்று கூறுகிறார். பெரிய புருஷன் ஊரில் இல்லாத புருஷன் என்று எழில் திட்டுகிறார்.
பிறகு பாக்கியா இந்த வீட்டுக்கு பணம் வேண்டும் என்று கேட்டது நீங்க தானே? இது வீட்டிற்கு பணம் மாதம் நான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் 18 லட்சம் தான் கொடுக்க வேண்டியது இருக்கிறது. அப்புறம் எப்படி இது உங்க வீடாக இருக்க முடியும் என்று கேட்க, நான் இந்த வீட்டை யாருடைய பெயருக்கு மாற்றி எழுதி தரவில்லை. அதனால் இது என்னுடைய வீடு தான் என்று கூற, உன்னை பாவம் பார்த்து இங்க இருக்க சொன்னதுக்கு நீ என்ன வேலை பண்ணிக்கிட்டு இருக்க என்று ஈஸ்வரி கோபியை திட்டுகிறார்.

பிறகு மீண்டும் வாக்குவாதம் நடந்து கொண்டே இருக்க ராதிகா கோபியை கூட்டிக்கொண்டு ரூமிற்கு மேலே சென்று விடுகிறார். பிறகு பாக்கியா இப்பவாவது சொல்லுங்க அத்தை நான் என்ன பண்ணட்டும். நான் இந்த வீட்டை விட்டு வெளியே போக போறேன் என்று சொல்ல, அனைவரும் இது நீங்க இருக்க வேண்டிய இடம் உங்கள் உரிமையை நீங்க விட்டுக் கொடுக்க கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
ஈஸ்வரியும் என்னைக்கா இருந்தாலும் நீ தான் எங்க மருமக, இவங்க தான் எங்களுடைய பேரப்பிள்ளைங்க. நீ இங்கே தான் இருக்கணும். இது என் மேல சத்தியம் என்று பாக்கியாவிடம் சத்தியம் வாங்கிவிட்டு, இங்கேயே இருக்க சொல்லி மொத்த குடும்பமும் வற்புறுத்திக் கொண்டிருக்கின்றனர். பாக்கியாவும் அனைவரோடு சேர்ந்து அழுது கொண்டிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications