இனியா சொன்ன வார்த்தையை கேட்டு கதறி அழும் கோபி... ராதிகா செய்த செயல்.. பீல் பண்ணி தவிக்கும் மயூ
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா பாக்யாவோடு செல்கிறார்.
இனியாவின் செயலை பார்த்து ராதிகா கோபியின் கோபத்தை ஏத்தி விடுகிறார்.
ராமமூர்த்தி வீட்டிற்கு வந்து இனி நான் இங்கே வர மாட்டேன் என்று பொருட்களை எடுத்து செல்கிறார்.

இனியாவின் பதில்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 5ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் இனியாவின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு போகலாம் என கோபி கூப்பிட இனியா கோபியின் கையை உதறி தள்ளி பாக்யாவின் கையைப் பிடிக்க இதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார். மேலும் இனியா நான் அம்மாவோட போறேன் என சொல்ல, கோபி உனக்கு அப்பா தானே உயிர், என் கூட வந்துரு, நான் உன்னை நல்லா பாத்துக்குறேன் என சொல்ல, சாரி டாடி நான் இனிமேல் அந்த வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்லி இனியா அதிர்ச்சி கொடுக்கிறார்.

ஏத்தி விடும் ராதிகா
இனியாவின் பதிலுக்கு கோபி மனதை மாற்ற முயற்சி செய்ய, எழில் நீங்க எதற்கு இனியாவை போஸ்ர் பண்ணுறீங்க. நாங்க டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு கூட்டிப் போய் விடுகிறோம் என்று சொல்லி இனியாவை கூட்டிக்கொண்டு கிளம்ப, கோபி தன்னோடு வந்துவிடு என்று இனியாவிடம் அழைக்க பாய் டாடி என்று சொல்லி இனியா பாக்யாயோடு கிளம்பி போகிறார். கோபி கண்ணீரோடு நிற்கிறார். அவர்கள் எல்லோரும் ஒன்று நீங்கதான் தனி ஆளு. இனியா உங்களை எப்படி தூக்கி போட்டுட்டு போறா பாருங்க என்று சொல்லி ஏத்தி விடுகிறார்.

ராதிகாவிற்கு ஏமாற்றம்தான்
அடுத்து இனியா வீட்டிற்கு வந்ததும் அவருக்கு ஆரத்தி எடுத்து அழைத்து சென்று ஆளாளுக்கு அறிவுரை சொல்கிறார்கள். பிறகு எல்லோரும் இனியாவோடு வீட்டில் சந்தோஷமாக இருக்க மறுபக்கம் கோபி வருத்தமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ராதிகா கோபியை சமாதானம் செய்ய பிறகு இருவரும் வாக்குவாதம் ஏற்படுகிறது. எல்லாத்துக்கும் நான் தான் காரணம் என நினைக்கிறீங்களா? என்று அதிகா கேட்க கோபி நீ இன்னும் கொஞ்சம் சாப்டாக டீல் பண்ணி இருக்கலாம் என சொல்ல ராதிகா கோபம் அடைகிறார்.

பீல் பண்ணும் மயூ
அப்போது வீட்டுக்கு வரும் ராமமூர்த்தி இனியா மற்றும் அவருடைய துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்ப கோபி நீங்களாவது என்கூட இருக்க, நீங்க இங்க இருந்தா இனியா இங்க வருவா என சொல்ல, இனியாவே இந்த வீட்ல இல்ல. நான் அவளுக்காகத்தான் இந்த வீட்டுக்கே வந்தேன். இனி நான் எனக்கு இங்கே இருக்கணும் என்று சொல்லி கிளம்புகிறார். அப்போது மயூ தாத்தா நீங்களும் இங்கே இருந்து கிளம்பிடுவீங்களா? எனக்கு கஷ்டமா இருக்கிறது. நீங்க இருந்தா தானே எனக்கு கதை எல்லாம் சொல்லுவீங்க என்று கேட்க, நீ நல்லா படிக்கணும் என்று மயூவிற்க்கு அறிவுரை கூறிவிட்டு தாத்தா கிளம்புகிறார்.

குடித்து பீல் பண்ணும் கோபி
அடுத்து பாக்யாவின் வீட்டில் இனியா எழில் அமிர்தா மற்றும் ஜெனி என நால்வரும் சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கின்றனர். மறுபக்கம் கோபி ஒயின்ஷாப்பில் ஹாஸ்பிடலில் நடந்த விஷயங்களை நினைத்து நினைத்து பார்த்துக் கொண்டு குடித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications