கோபியின் கையைப் பிடித்து வீட்டிற்க்கே வரும் பாக்கியா.. இனி ராதிகா முடிவு என்ன.. பரபரப்பான திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 5 முதல் 8ஆம் தேதி வரை காண ப்ரோமோ வெளியேறி இருக்கிறது.
கோபி குடித்து விட்டு தெருவில் விழுந்து கிடப்பதாக பாக்யாவிற்கு செய்தி வருகிறது.
கோபியை வீட்டுக்கு அழைத்து சென்ற பாக்யாவை ராதிகா அவமானப்படுத்த, பாக்கியா ராதிகாவிற்கு பதிலடி கொடுக்கிறார்.

கோபியின் தவிப்பு: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் இனியா யாரோடு வீட்டுக்கு செல்ல போகிறார் என்று பெரும் பரபரப்பாக இருந்தது. கோபி ஒரு பக்கம் இனி நான் உன்னை திட்ட மாட்டேன் நம்ம வீட்டுக்கே வந்துவிடு என்று கூறிக்கொண்டு இருந்தார். கோபி ஒரு நல்ல புருஷனாக இல்லாமல் இருந்தாலும் ஒரு நல்ல அப்பாவாகத்தான் ஒவ்வொரு இடத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இனியா மீது பாசமாக இருந்த கோபி இனியா தன்னை விட்டு பாக்யாவோடு சென்றுவிட்டதை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

குடிக்கும் கோபி: ஏற்கனவே ஒவ்வொரு நாளும் இனியா போய்விடுவாளோ என்று பயத்தில்தான் கோபி இனியாவை பாக்கியா வீட்டிற்கு அனுப்பாமல் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் ராதிகா திட்டி விட்டதால் கோபத்தில் தற்கொலை முயற்சி செய்த இனியா மீண்டும் நான் தன்னுடைய அம்மாவோடு சென்று விடுவதாக கூறிவிட்டு பாக்யாவின் கையை பிடித்து பாக்கியா வீட்டிற்கு சென்று விட்டார். இதை தாங்க முடியாத கோபி பாரில் உட்கார்ந்து அளவுக்கு அதிகமாக குடித்துக் கொண்டிருக்கிறார்.
பாக்கியா தான் மனைவி: இனியாவை நினைத்து புலம்பியப்படியே காரை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்த கோபி நடுத்தெருவில் இருந்த கல்லில் மோதி காரில் இருந்து கீழே விழுந்து கிடக்கிறார். அந்த பக்கமாக சென்றவர்கள் கோபியை பார்த்து அவருடைய கையில் இருந்த போனிலிருந்து வைஃப் என்கிற நம்பருக்கு கால் செய்தனர். அதில் பாக்யாவிற்கு போகிறது. பாக்யாவிற்கு விஷயம் தெரிந்ததும் எழிலோடு அந்த இடத்திற்கு வந்து கோபியை தானே காரை ஓட்டிக்கொண்டு கூப்பிட்டு வீட்டிற்கு வருகிறார்.

ராதிகா முடிவு: கோபியை கையைப் பிடித்து பாக்கியா கூட்டி கொண்டு வருவதை பார்த்த ராதிகா அதிர்ச்சியாக, ரோட்டில் விழுந்து கிடக்கிறாருனு எனக்கு போன் வந்துச்சு. மனசு கேட்கல என்று பாக்கியா சொல்ல, அதற்கு ராதிகா இவர் யாரு உங்களுக்கு? என்று கோபத்தில் கேட்க, இவர் எனக்கு யாரும் இல்லை தான். ஆனா பிரண்டோட ஹஸ்பெண்ட் இப்படி ரோட்டில் கிடக்கும் போது பார்த்துகிட்டு வர முடியுமா? ரொம்ப குடிச்சி இருக்காரு, பார்த்துக்கோங்க என்று பதிலடி கொடுத்துவிட்டு கிளம்புகிறார். அதிர்ச்சியில் ராதிகா உறைந்து நிற்கிறார். இனி ராதிகா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்கிற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் கோபியோடு சேர்ந்து வாழ்வாரா? அல்லது கோபி வேண்டாம் கோபியால் தான் என்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது என்று பிரிந்து போக இருக்கிறாரா? என்ற எதிர்பார்ப்பு வந்து இருக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications