பழசை நினைத்து பீல் பண்ணும் பாக்யா..சண்டையிட்டு வீட்டை விட்டுக் கிளம்பும் ராதிகா.. கோபி எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியாவும் எழிலும் கோபி முன்பு எப்படி இருந்தார் என்று பேசி ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

கோபி குடித்துவிட்டு பிரச்சனை செய்ததால் ராதிகா வீட்டை விட்டு மயூவோடு கிளம்புகிறார்.

நடுத்தெருவில் கோபி ராதிகாவின் காலில் விழுந்து கெஞ்சுவதை பார்த்து கோபியின் குடும்பம் அதிர்ச்சி அடைகின்றனர்.

Baakiyalakshmi Serial 2023 April 8th promo and Episode Highlights

பீல் பண்ணும் பாக்கியா: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 8ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில், பாக்கியா எழிலிடம் கோபியை அந்த மாதிரி நிலையின் பார்த்தது உனக்கு கஷ்டமா இல்லையா? என்று கேட்டுக் கொண்டிருக்க கஷ்டமா தான் இருந்ததும்மா. அவரை நான் கெத்தான ஒரு கேரக்டரில் பார்த்திருந்தேன். ஆனால் இப்போ அவர் நம்மளை விட்டு போனது என்னால ஏற்றுக்கொள்ள முடியாது அவர் இப்ப ரொம்பவே மாறிவிட்டார் என்று சொல்லிக்கொண்டு ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

வீட்டை விட்டு கிளம்பும் ராதிகா: அடுத்த நாள் காலையில் ராதிகா வீட்டில் தூங்கி முழித்த கோபி நேற்று இரவு என்ன நடந்தது என்பதை யோசித்துப் பார்க்கிறார். தலைவலியில் தவித்துக் கொண்டிருக்கும் போது ராதிகா மயூவோடு வீட்டை விட்டு கிளம்ப பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார். மையூ வீட்டை விட்டுப் போக வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்தாலும் ராதிகா வா நம்ம வீட்டுக்கு போய்விடலாம் என்று கூறிக்கொண்டு கிளம்புகிறார்.

Baakiyalakshmi Serial 2023 April 8th promo and Episode Highlights

இதை எதிர்பார்க்கலை: கோபி ராதிகாவை சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தாலும் ராதிகா கேட்கவில்லை. தெருவிற்கு வந்து கேப்பிக்காக வெய்ட்டிங்கில் இருக்கும்போது நடுத்தெருவில் வைத்து ராதிகாவிடம் கோபி கெஞ்சி கொண்டிருக்க ராதிகா சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். அந்தப் பக்கமாக செல்வியோடு வந்த பாக்யா இதை பார்த்து அதிர்ச்சியாகி பின்பு ஒன்னும் சொல்லாமல் வீட்டிற்கு சென்று விடுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 April 8th promo and Episode Highlights

காலில் விழுந்த கோபி: வீட்டிற்கு சென்ற செல்வி வெளியே நடக்கும் பிரச்சனையை போட்டு கொடுக்க, வீட்டில் இருந்த மொத்த குடும்பமும் ஓடி வந்து வெளியே பார்க்கின்றனர். வெளியே கோபி ராதிகா விடும் கெஞ்சி கொண்டிருக்க, ராதிகா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் காரில் ஏற கோபியின் காலில் விழுந்து கெஞ்சுகிறார். இனியா,ஈஸ்வரி, ராமமூர்த்தி, செழியன் என மொத்த குடும்பமும் கோபியின் செயலை பார்த்து அதிர்ச்சியாக அவர்கள் நிற்பதை பார்த்து கோபியும் அதிர்ச்சியில் நிற்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+