பாக்யாவுக்கு எதிராக கோபி சபதம்.. ராதிகா செய்த செயல்.. காலேஜில் இனியாவுக்கு கிடைத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் பாக்யாவுக்கு சப்போர்ட் செய்வதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத கோபி ராதிகாவிடம் சவால் விடுகிறார்.

அதைத் தொடர்ந்து காலேஜில் இனியாவுக்கு அதிர்ச்சி கிடைக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் கோபி பாக்கியாவை நினைத்து ராதிகாவிடம் புலம்பி கொண்டு இருக்கிறார். அதோடு வீட்டில் எல்லோரும் பாக்யாவுக்கே சப்போர்ட் செய்கிறார்கள். அவள் என்ன செய்தாலும் அவளை யாரும் ஒன்றும் சொல்வதில்லை. நான் பாக்கியா விசயத்தில் செய்த செயல் எல்லாம் இத்தனை நாளும் எப்படி இருந்ததுன்னு தெரியாது. இதுவரைக்கும் நான் அவளை பழி வாங்கணும் என்று நினைத்ததில்லை.
ஆனால் அந்த இடியட்டை இனி நான் சும்மா விடமாட்டேன். அவ எதுக்கு என்னை வில்லன் மாதிரி எல்லாரிடமும் காட்டிக் கொள்கிறார். மொத்த குடும்பத்திலிருந்தும் கண்டிப்பா அவளை நான் பிரித்துக் காட்டுவேன் என்று ராதிகாவிடம் கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக பாக்யாவின் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஒன்பதாவது மாதம் வருவதால் வளைகாப்பு பண்ண வேண்டும் என்று பாக்கியா சொல்ல, செழியன் வீட்டிலேயே சிம்பலாக பண்ணிடலாம். குழந்தைக்கு பெயர் வைக்கிற பங்ஷனை மட்டும் கிராண்டா பண்ணலாம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து பாக்கியா வீட்டில் உள்ள வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இங்கிலீஷ் கிளாஸ்க்கு செல்கிறார். அங்கே பழனிச்சாமி மற்றும் மீதமுள்ள தோழிகளோடு காபி சாப்பிடுகின்றனர். இதை அங்கு காரில் வந்த கோபியும் அவருடைய நண்பரும் பார்க்கின்றனர். அப்போது பாக்கியா பழனிச்சாமியுடன் சிரித்து சிரித்து பேசுவதை பார்த்து நக்கல் அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்ததாக பாக்கியா காலேஜுக்கு வருகிறார். அங்கு இனியாவையும், அவருடைய நண்பர்களையும் பார்த்து பேசுகிறார். அவர்களுக்கு தான் கொண்டு வந்த ஸ்னாக்ஸை பாக்கியா கொடுக்க, அவர்கள் எல்லோரும் இனியாவிற்கு இவ்வளவு நல்ல அம்மா கிடைச்சிருக்காங்களே என்று சொல்ல, இனியா அதிர்ச்சி அடைந்து கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications