பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பு.. ராதிகாவிடம் சண்டை போடும் அமிர்தா.. கோபிக்கு கிடைத்த அதிர்ச்சி
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் ராதிகா பாக்கியாவை பழிவாங்க வேண்டும் என்று கேண்டினில் புது பிரச்சனையை ஏற்படுத்துகிறார்.

அதோடு கோபி, பாக்யா படிக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் சேர்ந்து பாக்யா மற்றும் பழனிச்சாமியை அவமானப்படுத்துகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் கேண்டினில் செல்வி அமிர்தா மற்ற நபர்களோடு சமையல் செய்து அங்கு இருப்பவர்களுக்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ராதிகா பாக்யாவை எங்கே என்று கேட்டு பிரச்சனை செய்கிறார். அதற்கு அமிர்தா அவர் வந்துவிடுவார் என்று கூறுகிறார்.
வந்துவிடுவார் என்றால் எப்ப வருவார் கேண்டின் ஆர்டர் எடுக்க மட்டும் தெரிந்தது. அதற்கு பிறகு அதைப் ப்ராப்பரா மெயின்டைன் பண்ண தெரியாதா? நான் இப்போ அவங்க கிட்ட பேசணும் அப்போ என்ன பண்ண என்று கேட்க, நீங்க என்கிட்ட சொல்லுங்க நான் அம்மாட்ட பேசிட்டு உங்க கிட்ட சொல்றேன் என்று அமிர்தா சொல்ல, இரண்டு நாளில் மீட்டிங் இருக்கு 80 பேருக்கு சமைக்கணும் என்று மெனு லிஸ்ட் ராதிகா கொடுக்க, எல்லாத்தையும் எங்களால சமாளிக்க முடியும் என்று அமிர்தா எதிர்த்து பேசி அனுப்பி வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வரும் பாக்யா டயர்டாக இருப்பதை பார்த்து ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் பாக்கியா இவ்வளவு வேலைகளை செய்து கொண்டிருப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பிடிக்கிறது என்பதற்காக நீ என்ன வேணாலும் செய் என்று நாங்கள் சொல்லிவிட்டோம். ஆனால் உன்னுடைய உடலை கவனிச்சிக்க. இவ்வளவு வேலை பார்க்கிறது ரொம்ப கஷ்டம் என்று பாக்யாவிடம் அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அப்போ எழில் வந்து காபி போட்டுக் கொடுக்கவா என்று கேட்க வேண்டாம் என்று பாக்கியா ஜெனியை கவனித்துக் கொள்ள கிளம்பி விடுகிறார்.
மீண்டும் பாக்யா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும்போது பாக்கியாவிடம் பேசிக்கொண்டு எழில் காய்கறி வெட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கேண்டினில் இருந்து செல்வியும் அமிர்தாவும் வந்து ராதிகா தங்களிடம் பிரச்சனை செய்தது குறித்தும் இரண்டு நாளில் இருக்கும் மீட்டிங் குறித்தும் பேசிக்கொண்டு மெனு லிஸ்ட்டை கொடுக்கின்றனர் பாக்கியா இதை நான் செய்து விடுவேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் 3:00 மணிக்கு எழுந்து பாக்கியா சமையல் வேலைகளை செய்து கொண்டிருக்க, அப்போது ஈஸ்வரி எழுந்து வந்து நான் கிச்சனில் ஏதோ சத்தம் கேட்டதும் வந்தேன். நீ இவ்வளவு சீக்கிரமே எழுந்து சமைக்க வேண்டுமா? என்று கேட்க, சீக்கிரமாக வேலை முடிக்கணும் அத்தை என்று பாக்கியா சொல்லிக் கொண்டு பிறகு ஈஸ்வரி அனுப்பி வைத்து விடுகிறார். அதை தொடர்ந்து அமிர்தாவும் வந்து நான் ஏதாவது உதவி செய்யணுமா? என்று கேட்க, பாக்கியா எதுவும் வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று அமிர்தாவையும் அனுப்பி வைக்கிறார்.
அடுத்ததாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு போகும் பாக்கியா, பழனிச்சாமி மற்றும் லோவிட்டாவிடம் ராதிகா கேண்டினில் சொன்ன பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு நான் இதை சமாளித்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, பழனிச்சாமி, நீங்கே காலேஜ் போறதை பத்தி சொல்லவே இல்லையே என்று சொல்ல, நான் இப்போதான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் என்று பாக்கியா சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு வரும் கோபி பாக்கியா இப்பதான் சந்தோஷமா இருக்கியா என்று அப்போ உன் பொண்ணு அதிகமா மார்க் வாங்கும்போது சந்தோஷப்படலையா? செழியன் குழந்தைக்கு நீ பாட்டியாக போற அதை நினைச்சு உனக்கு சந்தோஷம் இல்லையா? என்று கோபப்பட்டு தனியாக பேசி கொண்டிருக்க, அந்த நேரத்தில் அங்கு வரும் ஸ்போக்கன் இங்கிலீஷ் மிஸ் எங்கே வந்தீங்க என்று விசாரிக்கையில் கோபி திணறிக் கொண்டிருக்க இப்போ அட்மிஷன் போடவா என்று கோபிக்கு அட்மிஷன் போட்டு விடுகிறார்கள்.
பிறகு அங்கிருந்து வெளியே வரும்போது பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசிக் கொண்டிருக்கும் பக்கத்தில் வந்து கோபி நின்று இப்பதான் நீ சந்தோஷமா இருக்கியா? நீ இந்த ஆளு கூட அடிக்கிற லூட்டிய நான் பார்த்துகிட்டு தான் இருக்கேன் என்று பேசிக்கொண்டே போக கோபத்தில் பாக்யா முறைத்தபடி நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications