பாக்யாவிற்கு பறிபோன கேண்டீன் ஆர்டர்.. பழனிச்சாமி கேட்ட வார்த்தை.. கடும் கோபத்தில் ராதிகா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் பெரும் போராட்டத்திற்கு இடையில் கிடைத்த பாக்யாவின் கேண்டீன் ஆர்டர் செல்வி செய்த சொதப்பலால் பறிபோகிறது.

அதே நேரத்தில் ராதிகா தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பாக்கியாவை அவமானப்படுத்தி அழ வைக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் காலேஜில் பாக்கியா இனியாவின் பிரண்ட்ஸ்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பொண்ணு மட்டும் தனியாக சோகமாக யோசித்துக் கொண்டிருக்க அதை பார்த்த பாக்யா என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார். அப்போது அந்த பொண்ணு நான் காலேஜில் படிக்கும் போது என் கூட படிச்ச பிரண்டு ஒருத்தன் இப்ப வேற காலேஜுக்கு போயிட்டான்.

அதனால நானும் அவனும் அடிக்கடி பார்க்க முடியல. அவன் இப்போ என்ன லவ் பண்றேன்னு சொல்றான் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா நீங்க ரெண்டு பேரும் இப்போ திடீரென்று பிரிஞ்சு போய் படிக்கிறதால அவன் உன்ன ரொம்ப மிஸ் பண்றான். அதனால் லவ் என்று சொல்கிறேன். நீ அவன்கிட்ட பேசி புரிய வை அப்படி புரிஞ்சுக்கலைன்னா நீ விலகி நடந்துக்கோ என்று அட்வைஸ் கொடுக்கிறார். இதைப் பார்த்து இனியா பாக்கியாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடரில் கேண்டினில் செல்வி இருக்கும்போது அவருக்கு போன் வருகிறது. குடித்துவிட்டு அவருடைய கணவர் மகனை அடிப்பதால் போனில் கணவரை செல்வி திட்டிக் கொண்டிருக்கிறார். அங்கு இருப்பவர்கள் என்ன ஆச்சு என்று விசாரிக்க செல்வி வீட்டில் நடந்ததை பற்றி சொன்னதும் அதையே பேசிக்கொண்டே சமையலில் சொதப்புகின்றனர். செல்வி சாப்பாட்டிற்கு உப்பு போட்டது தெரியாமல் மேலும் உப்பு போட்டு வைத்து விடுகிறார். அப்போது அங்க வந்த ராதிகாவும் பங்க்ஷன் முடிந்து விட்டது சாப்பாட்டை எடுத்துட்டு வாங்க என்று சொல்கிறார்.

அந்த நேரத்தில் பாக்யாவின் தோழி நோவிட்டா பாக்கியாவுக்கு போன் செய்ய, எனக்கு பழனிச்சாமி சார் நோட்ஸ் அனுப்பிட்டார் என்று பாக்யா போனில் பேசியபடி வெளியே வர அங்கே பழனிச்சாமியும் நோவிட்டாவும் நிற்கின்றனர். பிறகு அவர்களிடம் பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியாவிற்கு செல்வி போன் போட்டு உடனே கேண்டின்கு வர சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விடுகிறார். பாக்யா அவசரமாக கேண்டினுக்கு வர வர அங்கே ராதிகா செல்வி மற்றும் அங்கிருக்கும் சமையல் செய்பவர்களிடம் கத்திக் கொண்டிருக்கிறார்.
அப்போது உங்க சாப்பாட சாப்பிட்டவங்க காரி துப்பிட்டு போறாங்க. அவ்வளவு உப்பு சாப்பிடவே முடியல என்ன பண்ணி வச்சிருக்கீங்க? உங்ககிட்ட கொடுத்ததுனால இப்படி ஆயிடுச்சு. இனிமேல் உங்களுக்கு இங்க இடம் இல்ல. நாங்க வேற யாரையாவது போட்டுக் கொள்கிறோம் என்று சொல்ல பாக்கியா அப்படியெல்லாம் செஞ்சிடாதீங்க என்று ராதிகாவிடம் கெஞ்சுகிறார்.

ஆனாலும் இதை எல்லாம் கேட்காத ராதிகா பாக்யாவை திட்டி விட்டு கிளம்பி விடுகிறார். அதைத் தொடர்ந்து பாக்யா செல்வியை திட்டுகிறார். இந்த கேண்டீன் ஆர்டர் வாங்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் அதெல்லாம் போச்சு. நான் இங்கு இருந்திருக்கணும் என்று புலம்புகிறார். அதற்கு பழனிச்சாமி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications