இனியா விஷயத்தில் கோபியின் செயல்.. கோபத்தில் ராதிகாவின் அம்மா.. அதிர்ச்சி கொடுத்த ஈஸ்வரி
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா மொத்த குடும்பத்தையும் எதிர்த்து கோபியின் வார்த்தைகளை கேட்டு கோபி பின்னாடியே போகிறார்.
காலேஜுக்கு போன இடத்தில் இனியாவின் தோழிகளிடம் பாக்யா சொன்ன வார்த்தையை கேட்டு இனியா கோபப்படுகிறார்.

இந்த நிலையில் காசிக்கு போயிருந்த ஈஸ்வரி மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை எபிசோடின் ஆரம்பத்தில், இனியா வீட்டை விட்டு காலேஜுக்கு போவதற்காக கிளம்பி வெளியே வர அங்க கோபி இனியாவை கூட்டிட்டு போவதற்காக காரில் காத்திருக்கிறார். இனியா நான் அண்ணன் கூட பைக்கில் போகிறேன் என்று சொல்ல , நம்ம காரில் போகலாம் என்று இனியாவின் மனதை மாற்றி அனைவருடைய கருத்துக்களையும் கேட்காமல் கோபி இனியாவை கூட்டிட்டு போகிறார்.
அதைத்தொடர்ந்து ராதிகா வீட்டில் கேப் புக் பண்ணி ஆபிஸுக்கு கிளம்ப, அதற்கு அவருடைய அம்மா ஏன் கோபி எங்க போனார் என்று கேட்க, இனியா காலேஜுக்கு ஃபர்ஸ்ட் நாள் என்பதால் இனியாவே கூட்டிட்டு போயிருக்கிறார் என்று சொல்ல, இதுவரைக்கும் மயூவை கூட்டிட்டு போயிருக்கிறாரா? இப்படியே நீ விட்டுட்டா அந்த பக்கமா மறுபடியும் போயிருவார் என்று ராதிகாவிடம் பிரச்சனையே பெரிது பண்ணி போட்டுக் கொடுக்க, ராதிகா அப்படியெல்லாம் நடக்காது என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி போகிறார்.
அதைத்தொடர்ந்து கேண்டினில் செல்வியோடு வேலை செய்பவர்கள் எல்லோரும் பாக்கியா காலேஜுக்கு போவதை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் பாக்கியா நான் காலேஜுக்கு போயிட்டால் கேண்டினை நீங்க தான் பாத்துக்கணும் என்று சொல்ல, நான் தான் மேனேஜர் இருக்கேனே என்று செல்வி சொல்ல, பிறகு அவர்களிடம் ஜாலியாக பேசிக்கொண்டு பாக்கியா அங்கிருந்து கிளம்பி காலேஜுக்கு போகிறார்.
அந்த நேரத்தில் முதல் நாள் காலேஜ் முடிந்து தன்னுடைய தோழிகளோடு இனியா பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பாக்யாவும் எழிலும் இனியா விடம் பேசுகின்றனர். இனியாவின் தோழிகளிடம் நான்தான் பாக்கியா இனியாவின் அம்மா, இந்த காலேஜில் தான் படிக்கிறேன் என்று பாக்கியா அறிமுகம் செய்ய அவர்கள் எல்லோரும் சிரிப்பதை பார்த்து இனியா கடுப்பாகிறார். அப்போது அங்கு வரும் கோபி இனியாவை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டில் ராமமூர்த்தி அவள் வருவாளே என்று பாட்டு பாடி கொண்டு ஜாலியாக இருக்க, அப்போது அங்கு வரும் ஜெனி ராமமூர்த்தி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வரும் எழில் பாட்டி வரமாட்டேன் என்று சொல்லிட்டாங்க என்று சொல்ல, ராமமூர்த்தி ரொம்பவே சோகமாகிறார். பிறகு வீட்டிற்கு வெளியே வந்து பாருங்க என்று சொல்ல, அங்கு கையில் ருத்ராட்ச மாலையோடு காவி உடையில் ஈஸ்வரி வந்து நிற்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications