காலேஜில் பாக்கியா செய்த கிறுக்குத்தனம்.. அதிர்ச்சி கொடுத்த பழனிச்சாமி.. ஈஸ்வரி எடுக்கப் போகும் முடிவு?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் காசிக்கு போயிருந்த ஈஸ்வரி மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அதே நேரத்தில் காலேஜில் முதல் நாளில் பாக்கியா அங்கிருக்கும் மாணவர்களிடமும் நன்றாக பழகி அவர்களுக்கு சமையல் செய்து எடுத்து வருவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பாக்கியா காலேஜுக்கு போவது தெரிந்தால் இனி ஈஸ்வரி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். அந்த வகையில் சாமியார் கெட்டப்பில் வீட்டு வாசலில் நின்று இருந்த ஈஸ்வரியை பார்த்த ராமமூர்த்தி, ஜெனி இருவரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். அதோடு ஈஸ்வரி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பதோடு அவருடைய பேச்சும் மாறி இருக்கிறது.
இருந்தாலும் இருவரும் ஈஸ்வரியை வீட்டுக்குள் அழைத்து செல்கின்றனர். வீட்டுக்குள் வந்து ஈஸ்வரியை பார்த்ததும் அமிர்தாவும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு அமிர்தா காபி வேணுமா? என்று கேட்க, வேண்டாம் என்று சொல்லி துளசி போட்ட நீரை வாங்கி குடிக்கும் ஈஸ்வரியின் நடவடிக்கைகளை பார்த்து அனைவரும் வியப்பில் இருக்கின்றனர். இந்த நிலையில் அதைத்தொடர்ந்து பாக்யா காலேஜில் தன்னுடைய கிளாஸ் ரூமுக்குள் செல்கிறார்.

அங்கிருக்கும் மாணவர்கள் எல்லோரும் பாக்கியாவை வித்தியாசமாக பார்க்க, பாக்கியா எதையும் கண்டு கொல்லாமல் அவர்களோடு போய் உட்கார்ந்து இருக்க பிறகு மிஸ் வந்ததும் எல்லோரிடம் சேர்ந்து தன்னையும் அறிமுகம் செய்து கொள்கிறார். அதே நேரத்தில் கேண்டினில் சாப்பிட வரும் ராதிகா எனக்கு தோசை வேண்டும் என்று கேட்க, செல்வி தோசையை கொண்டு வர போகும்போது அவரோடு வேலை செய்பவர்கள் அங்கு கேஸ் தீர்ந்து போச்சு என்று சொல்ல, செல்வி திட்டிக்கொண்டு பிறகு லேட்டாக தோசை எடுத்துக் கொண்டு வருகிறார்.
இதனால் கோபமான ராதிகா ஆர்டர் பண்ணி 15 நிமிஷம் ஆச்சு எங்க உங்க பாக்கியா மேடம் என்று கேட்க, செல்வி ஓனர் வெளியில போயிட்டாங்க மேடம் என்று சொல்ல, ராதிகா காண்ட்ராக்ட் கிடைக்கும் வரைக்கும் அதை செய்வேன், இதை செய்வேன் என்று சொல்ல வேண்டியது. பிறகு காண்ட்ராக்ட் கிடைத்தது ஓனராகிட்டாங்களா? என்று நக்கலாக திட்டுகிறார்.
அடுத்ததாக பாக்கியா தன்னுடைய கிளாஸில் இருக்கும் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒவ்வொருவருடைய பெயரை சொல்லி அவர்களோடு அறிமுகம் ஆகிவிட்டு ஒரு நாள் எல்லோருக்கும் சேர்த்து சாப்பாடு செய்து கொண்டு வருகிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியாவை பார்ப்பதற்காக பழனிச்சாமியும் அவருடைய அம்மாவும் வந்து நிற்கின்றனர். பாக்யா கிளாஸிலிருந்து வந்து இவர்கள் இருவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து வீட்டில் ஈஸ்வரியின் நடவடிக்கையை பற்றி எழிலும், இனியாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எழில் அம்மா வந்தாங்க என்றால் பாட்டியை பார்த்து அதிர்ச்சி அடைய போறாங்க என்று சொல்ல, இனியா பாட்டிக்கு தான் அம்மா காலேஜ் போறது தெரியாதே என்று சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications