பாக்கியலட்சுமி சீரியலில் டுவிஸ்ட்.. பத்திர ஆபீஸில் தெரிய வரும் உண்மை.. ராதிகாவோடு நடு ரோட்டில் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத டுவிஸ்ட் இருக்கும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதுவரைக்கும் வீடு பாக்கியா பெயருக்கு மாறுவது தெரியாமல் இருந்த கோபிக்கு கடைசி நேரத்தில் அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

பத்திர ஆஃபீஸில் கையெழுத்து போட போன கோபியை ராமமூர்த்தி அவமானப்படுத்த பாக்கியா எதிர்பாராத பதிலடி கொடுக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா மொத்த பணம் 20 லட்சத்தையும் கொடுத்து விட்டதால் கோபியும் ராதிகாவும் வீட்டை விட்டு வெளியே வந்திருந்தனர். மீண்டும் ராதிகாவோடு இருந்த பழைய வீட்டிற்க்கே கோபி வந்திருந்த நிலையில் பழையபடி குடிக்க தொடங்கி இருக்கிறார்.

ஏற்கனவே குடித்து பட்ட பாடு போதாது என்று, இப்போது ராதிகா உடன் மீண்டும் பழைய வீட்டிற்கு வந்திருந்த போதும் அங்கேயும் குடித்துவிட்டு வந்து ராதிகாவிடம் நான் பாக்கியாவை இனி பழி வாங்குவேன். என்னை என் குடும்பத்திடம் இருந்து பிரித்த பாக்யாவை அவளிடம் இருந்து என் குழந்தைகளை பிரித்து அவளை தனி மரமா ஆக்குவேன் என்று சபதம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் பத்திர ஆபீசுக்கு கோபி வருகிறார். அதே நேரத்தில் பாக்யா, ராமமூர்த்தி, எழில் மூவரும் வருகின்றனர். அனைவரும் இரண்டு பக்கமும் நிற்க கோபி மற்றும் பாக்யாவிடம் ஆதார் கார்டு பான் கார்டு எல்லாம் பத்திர ஆபிஸர் கேட்கிறார். பிறகு கோபியிடம் இதில் கையெழுத்து போடுங்க என்று பத்திரத்தை ஆபிஸர் கொடுக்கிறார். பத்திரத்தை படித்து பார்த்த கோபி அதிர்ச்சி அடைகிறார்.

ஏற்கனவே 20 லட்சம் பணம் தந்தால் நான் இந்த வீட்டை விட்டு வெளியே போவேன் ஆனால் வீடு என்னுடைய அப்பா அல்லது அம்மா பெயருக்கு தான் மாத்தி கொடுப்பேன் என்று கோபி கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது பாக்கியா பெயரில் வீடு மாறுவதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைய, அதற்கு ராமமூர்த்தி அதுதான் பணத்தை எல்லாம் தந்தாச்சிலா இனி கையெழுத்து போடு என்று மிரட்டுகிறார்.
இதனால் கோபமான கோபி கையெழுத்தை போட்டு கொடுக்கிறார். பிறகு எல்லோரும் வெளியே வரும்போது கோபி தனியாக நிற்க, அவரிடம் எழில் இந்தா பாருங்க இனி உங்களுக்கும் அந்த வீட்டுக்கும் உறவு எல்லாம் முடிஞ்சு போச்சு. அதனால இனி தயவு செய்து அந்த வீட்டு பக்கம் வந்துராதிங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

அதைத்தொடர்ந்து கோபியும் ராதிகாவும் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். கோபி நடந்ததை எல்லாம் சொல்லி புலம்பி கொண்டிருக்கும்போது பாக்யா வீட்டின் சுவற்றில் பாக்கியலட்சுமி இல்லம் என்ற போர்டை எழில் மாட்டி விட்டு கோபியை பார்த்து நக்கலாக சிரிக்க கோபி அதிர்ச்சி அடைந்து அந்த போர்டையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இனி கோபி என்ன செய்யப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications