பாக்யாவை சந்தேகப்படும் கோபி.. பழனிச்சாமி கொடுக்கும் பதிலடி.. பரபரப்பின் உச்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பழனிச்சாமியை பாண்டிச்சேரியில் பார்த்ததும் அதிர்ச்சி அடைய அதைத்தொடர்ந்து பாக்யாவும் இங்கு தான் வந்திருக்கிறார் என்பதை தெரிந்து கோபமாகிறார்.

பாக்கியா பின்னாடியே நீங்க எங்க வேணாலும் வந்துருவீங்களா என்று பழனிச்சாமி இடம் கோபி கோபமாக பேச பழனிசாமியின் நண்பர் சுதாகர் அதிர்ச்சி அடைகிறார்.

 Baakiyalakshmi Serial 2023 July 1th promo and Episode full update

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை ஒன்றாம் தேதிக்கான எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் பாக்யா கிட்சனில் ஒவ்வொரு உணவு பொருட்களாக ரெடியாகிவிட்டதா என்று உதவியாளர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது பழனிசாமி கிச்சனுக்கு வர அவரிடம் இனிப்பு உணவுகளை கொடுக்க அவர் அனைத்தையும் சாப்பிட்டு பார்த்து விட்டு பாராட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து சாப்பாடு எல்லோருக்கும் பரிமாறப்படுகிறது. அதை சாப்பிட்டு பார்த்த பழனிச்சாமியின் நண்பர் சுதாகர் பாக்கியாவிடம் சாப்பாடு பிரமாதம், இதுவரைக்கும் நான் இப்படி ஸ்வீட்டை எங்கேயுமே சாப்பிட்டது கிடையாது என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார். அவருடைய மனைவியும் பாக்கியாவின் சாப்பாட்டை பாராட்டி நாளைக்கு சமைக்க வேண்டிய உணவு லிஸ்ட்டை கொடுக்கிறார்.

மறுபக்கத்தில் கோபி நாலு நாளைக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாமல் ஜாலியா ராதிகா கூட இருக்கலாம் என்று சந்தோஷத்தில் இருக்கும்போது ராதிகா மயூ உடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா செல்வியை பொருள் ஒன்றை எடுத்துட்டு வர அனுப்பி வைக்க அதை பார்த்த ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

அதுபோல செல்வியும் ராதிகாவை பார்த்து அதிர்ச்சி அடைந்து பாக்யாவிடம் சென்று ராதிகா இந்த கல்யாணத்துக்கு வந்திருக்கிற விஷயத்தை சொல்ல, அதற்கு பாக்கியா கூலாக சரி விடு பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டு வேலையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அதை நேரத்தில் ராதிகா ரூம்பிற்கு வந்து கோபியிடம் கோபமாக உங்க வீட்டு வேலைக்காரியை நான் பார்த்தேன் என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

அந்தலாம் போஸ்ட் பழனிச்சாமி இங்க இருக்கான். செல்வி இங்க இருக்கா, ரெண்டு பேருக்கும் பொதுவான ஆளு பாக்கியா தான். அப்ப அவளும் இங்க தான் இருக்காளா? என்று நெஞ்சை பிடித்து உட்கார ராதிகா என்ன ஹார்ட் அட்டாக் வந்துட்டா என்று பதறியபடி என்று கேட்க, போற பார்க்க பார்த்தா வந்துடும் போல என்று புலம்புகிறார். பிறகு இதை கன்ஃபார்ம் செய்வதற்காக கோபி இனியாவுக்கு போன் பண்ணி நலம் விசாரிப்பது போல பேசி பாக்கியா எங்கே என கேட்க இனியா பாக்கியா பாண்டிச்சேரிக்கு வந்திருக்கும் விஷயத்தை சொல்கிறார்.

இதைக் கேட்டு இன்னும் அதிர்ச்சி அடைந்த கோபி நம்மள எங்க போனாலும் நிம்மதியா இருக்க கூடாதுன்னு இப்படி பிளான் பண்ணி பண்றாங்களா? என்று புலம்பி கொண்டிருக்கிறார். அடுத்ததாக பழனிச்சாமி கிச்சனுக்குள் உட்கார்ந்து எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்க செல்வி தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதைக் கேட்டு தன்னுடைய அம்மாவும் தங்களை வளர்த்தது பற்றி ஞாபகம் வந்து விட்டதாக சொல்லி பழனிச்சாமி பீல் பண்ணுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து வெளியான பிரமோவில் பழனிச்சாமியும் அவர் நண்பர் சுதாகரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபமாக கோபி அவரிடம் சென்று நீங்க பாக்கியா பின்னாடி வந்துருவீங்களா? என்று கேள்வி கேட்க சுதாகர் அதிர்ச்சி அடைகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+