இனியாவை தொடர்ந்து பிரச்சனை செய்யும் அமிர்தா.. மனம் மாறும் ராதிகா.. கோபிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியா தன்னுடைய பாராட்டு விழாவுக்கு வரவில்லை என்று இனியா கோபப்பட்டு யாரிடமும் பேசாமல் பிரச்சனை செய்கிறார்.

பிறகு பாக்யாவின் நிலைமையை தெரிந்து மனம் மாறி இருக்கும் நிலையில் அமிர்தா அடுத்த பிரச்சனையை தொடங்குகிறார்.

Baakiyalakshmi Serial 2023 July 24th Episode full update

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 24ஆம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் மேடையில் இருந்து கீழே இறங்கிய இனியா வீட்டிற்கு வந்ததும் யாரிடமும் பேசாமல் அழுது கொண்டு தன்னுடைய அறைக்கு ஓடிப்போய் கதவை பூட்டி கொள்கிறார். எல்லோரும் கதவை தட்டியும் இனியா கதவை திறக்காமல் யாரிடமும் எனக்கு பேச விருப்பமில்லை குறிப்பா அம்மா கூட பேசவே மாட்டேன் என்று கூறுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 July 24th Episode full update

இதைக் கேட்டு பாக்கியா அழுது கொண்டு இருக்க, எழில் அம்மா அழறாங்க பாரு இனியா என்று சொல்ல, பிறகு இனியா கதவை திறக்கிறார். அப்போது உள்ளே வந்த பாக்கியா இனியாவிடம் மன்னிப்பு கேட்டு மண்டபத்தில் நடந்த பிரச்சனைகளை பற்றி சொல்ல, ராமமூர்த்தி நானும் பழனிச்சாமியும் போன பிறகுதான் அங்கு பிரச்சனை முடிந்தது என்று எல்லா விஷயத்தையும் சொல்லி முடித்ததும் இனியா சமாதானம் ஆகிறார்.

அதைத்தொடர்ந்து கோபியும் ராதிகாவும் வீட்டிற்கு வர, ராதிகாவின் அம்மா ராதிகாவிடம் பங்க்ஷனில் ஏதாவது பிரச்சனை நடந்துச்சா? என்று விசாரிக்க அங்கே என்னை யாரும் திட்டலை. ஆனால் பாக்கியா தான் வரல என்று சொல்ல கோபி கோபமடைந்து அவளுக்கு இப்போ என் குடும்பத்தை விட சமையல் என்று சொல்லிட்டு அந்த பழனிச்சாமியோடு ஊர் சுற்றுவது தான் முக்கியமாகிட்டு என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 July 24th Episode full update

அப்போது ராதிகாவின் அம்மா யார் அந்த பழனிச்சாமி என்று கேட்க, ராதிகா அது பாக்கியாவுடன் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு போறவர் கோபி சொல்ற மாதிரி எதுவும் இருக்காது. அப்படியே ஒருவேளை இருந்தாலும் நமக்கு என்னம்மா என்று சொல்கிறார். அதற்கு ராதிகாவின் அம்மா இருந்தாலும் யாரையும் நம்ப முடியாது என்று சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து வீட்டில் எழில் மற்றும் பாக்கியாவிற்க்கு தொடர்ந்து போன் வந்து கொண்டே இருக்கிறது. எல்லோரும் இனியாவை பற்றி கேட்டுக் கொண்டிருக்க, அனைவரும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு அமிர்தா எழிலிடம் நாம இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்க, அதற்கு எழில் எனக்கு நிலா பாப்பா மட்டும் போதும். இன்னொரு குழந்தை பிறந்தால் வீட்டில் உள்ளவங்க நிலாவை ஒதுக்கி வைத்து விடக்கூடாது என்று கூறுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 July 24th Episode full update

அதனால் அமிர்தா கோபத்தோடு இருக்க, எழில் ஒரு வழியாக சமாதானம் செய்கிறார். ஆனாலும் மனதிற்குள்ளே அமிர்தா யோசித்துக் கொண்டே இருக்கிறார். அப்போது பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இனியாவை பாராட்டியபடி உனக்கு என்ன பிடிக்குதோ அதை படி, நீ பெரிய உச்சத்துக்கு போகணும். இதுதான் என்னுடைய ஆசை என்று சொல்லி சந்தோஷத்தோடு முத்தமிட்டு கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+