பாக்கியாவிடம் கல்யாணத்தை பற்றி பேசும் இனியா.. வேதனையில் தவிக்கும் ராமமூர்த்தி.. செழியனின் வேண்டுகோள்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா காலேஜில் சேர்ந்ததை தொடர்ந்து பாக்யாவிற்கும் காலேஜில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
தன்னுடைய ஆசையை இனியாவிடம் தெரிவித்த பாக்கியாவிற்கு இனியா எதிர்பாராத பதிலடி கொடுக்கிறார்.

இந்த நிலையில் ஜூலை 29ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், பாக்கியா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கே வரும் செழியன் பாக்யாவிடம் ஜெனிக்கு வளைகாப்பு பண்ணுவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வளைகாப்பு முடிஞ்சதும் ஜெனி அவங்க வீட்டுக்கே கூட்டிட்டு போயிடுவேன்னு சொல்றாங்க என்று ஃபீல் பண்ணி பேசுகிறார்.

அதற்கு பாக்கியாவும்," ஆமா அவங்க அம்மாவுக்கும் ஆசை இருக்க தானே செய்யும். அவங்க பொண்ணை பக்கத்தில் வச்சு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று" என சொல்ல செழியன் ஜெனியை அங்கெல்லாம் அனுப்ப முடியாது. நீ போய் அவங்க கிட்ட பேசி பார்க்கிறியா அம்மா? ஜெனியை பிரிந்து என்னால இருக்க முடியாது என்று சொல்ல, அதற்கு பாக்யாவும் நான் பேசிப் பார்க்கிறேன் என்று சொல்கிறார்.
அப்போது ராமமூர்த்தி ஈஸ்வரி ஈஸ்வரி என்று கத்துகிறார். அதனால் பாக்யாவும் செழியனும் ஓடி வந்து அவரை எழுப்பி என்னாச்சு என்று கேட்க, ராமமூர்த்தி ஈஸ்வரியை பார்க்கணும் என்று சொல்கிறார். அதற்கு செழியன் இந்த நேரம் எப்படி தாத்தா பார்க்க முடியும்? அவங்க வந்துடுவாங்க என்று ஆறுதல் சொல்கிறார்.

பாக்கியா ராமமூர்த்திக்கு மாத்திரைகளை கொடுத்து தூங்க வைக்கின்றார். பிறகு காலையில் விடிந்ததும் கேண்டினுக்கு செல்லும் பாக்யா செல்வியை கூட்டிக்கொண்டு லோன் வாங்குவதற்காக பேங்குக்கு போகிறார். அங்கே எல்லா டாக்குமெண்ட்டும் இருக்கிறது ஆனால் நீங்கள் டிகிரி படிச்ச டாக்குமெண்ட் மட்டும் இல்லை என்று சொல்ல, பாக்கியா நான் டிகிரி படிக்கவில்லை என்று சொன்னதும். இங்கே டிகிரி படித்தவங்களுக்கு மட்டும்தான் சுய தொழில் செய்வதற்கு லோன் கொடுக்கிறோம் என்று சொல்கின்றனர்.
இதைத்தொடர்ந்து சோகமாக பாக்யா வீட்டிற்கு வர வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும், லோன் விஷயம் என்னாச்சு என்று விசாரிக்க அதற்கு பாக்கியா டிகிரி படித்திருந்தால் மட்டும் தான் லோன் தருவாங்களாம் என்று சொல்ல, அப்போ ராமமூர்த்தி அமிர்தா அல்லது ஜெனி முடிச்சு இருக்காங்களே அவங்க பேர்ல எடுக்க வேண்டியதுதானே என்று சொல்ல பாக்யா இது நல்ல ஐடியா என்று சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது பாக்கியா இனியாவை எழுப்பி நானும் காலேஜுக்கு போக போறேன் என்று சொல்ல, இனியா சும்மா காமெடி பண்ணாதம்மா. நீ என்ன பண்ணாலும் நான் கேட்கிறேனா? நான் ஏதும் பண்ணினால் மட்டும் எதுக்கு நீ குறுக்க வந்து நிற்கிறா..? நான் காலேஜ் முடிச்சுட்டு வேற கல்யாணம் பண்ணிப்பேன். நீயும் பண்ணிப்பியா..? இதுக்கு மேல ஏதாவது பேசினா நான் ஹாலில் போய் தூங்கிடுவேன் என்று மிரட்டுகிறார்.
இதனால் வருத்தமடையும் பாக்கியா அப்படியே பேசாமல் தூங்கி விடுகிறார். அடுத்த நாள் காலையில் செழியன் ஈஸ்வரிக்கு வீடியோ கால் பண்ணி ராமமூர்த்தியிடம் பேச வைக்கிறார். வீடியோ காலில் இருவரும் வீட்டில் நடப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications