ராதிகா சொன்ன சொல்.. அதிர்ச்சியில் சரிந்த ஈஸ்வரி.. கேள்வி கேட்டு தெறிக்கவிடும் பாக்யா
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ஈஸ்வரியை மரியாதை இல்லாமல் பேசியதை கேட்டு பாக்யா கடும் கோபத்தில் திட்டுகிறார்.
ராதிகாவுக்கு ஆதரவாக அவருடைய அம்மாவும் அண்ணனும் மீண்டும் பிரச்சனையை பெரிது பண்ணுகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 23ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ராதிகாவிடம் ஈஸ்வரி சத்தம் போட்டுக் கொண்டிருக்க அங்க வந்த ராதிகாவின் அம்மா என்ன சத்தம் ஓவரா இருக்கு போலீஸ் வந்துட்டு போனது நான் ஞாபகம் இல்லையா? நான் இப்போ போன் பண்ணவா? என்று மிரட்டுகிறார்.
அதனால் கோபமான ஈஸ்வரி, ராதிகா அம்மாவிடம் சண்டைக்கு போகிறார். பிறகு பக்கத்தில் இருந்த ராதிகாவின் அண்ணனிடம் உனக்கெல்லாம் வெக்கமா இல்லையா? உன் தங்கச்சி தப்பு பண்ணா நீ பண்றது தப்புன்னு எடுத்து சொல்லணும். அதை விட்டுட்டு கல்யாணம் பண்ணி வச்சிருக்க, நீ எல்லாம் ஒரு அண்ணனா என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.
முதலில் ராதிகா வந்தா பிறகு அவ பொண்ணு வந்தா இப்போ நீங்க எல்லாரும் வந்து இருக்கீங்க என்று ஈஸ்வரி கோபப்பட நாங்க வருவோம் எத்தனை பேர் எத்தனை நாள் வேணும்னாலும் இருப்போம் அதையெல்லாம் நீங்க கேட்கக்கூடாது என்று ராதிகாவின் அம்மா பதிலுக்கு சண்டை போட இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகிறது.
ஒரு கட்டத்தில் இவ, இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கும்போது இவ்வளவு ஆட்டம் போடுறா, இன்னும் ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு வந்திருந்தா... என்று ஈஸ்வரி சொல்ல, அப்போது ராதிகா ஏய்... என்று சத்தம் போட்டு அவ்வளவு தான் மரியாதை, என்னை பகைச்சுக்கிட்டு யாரும் இந்த வீட்டில் இருக்க முடியாது. அமைதியா இருக்கிறதா இருந்தா இரு, இல்ல கிளம்பி போயிட்டே இரு என்று மரியாதை இல்லாமல் பேச ஈஸ்வரி உடைந்து போய் உட்கார எல்லாரும் பதறுகின்றனர்.
அப்போது பாக்கியா என்னாச்சு அத்தை என்று ஓடி வர, நான் இன்னும் ஆளை காணும் என்று பார்த்தேன். பர்பாமன்ஸ் பண்ண வந்துட்டீங்களா? என்று ராதிகா கேட்க ராதிகா கேள்விக்கு பாக்கியா பதிலடி கொடுக்கிறார். பிறகு நீங்க அத்தை கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று கேட்க, அப்போது அவங்க அம்மா நீ மன்னிப்பெல்லாம் கேட்காத ராதிகா என்று ஏற்றி விடுகிறார்.
ராதிகாவின் அண்ணனும் அண்ணியும் நாம இங்க இருந்தா பிரச்சனை அதிகமாகும். இது ராதிகா புகுந்த வீடு அவ நல்லபடியா வாழணும் என்று சொல்லி அம்மாவை கூட்டிக்கொண்டு கிளம்பிவிடுகின்றனர். ராதிகா கோபமாகி என் குடும்பத்தோட கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சேன். ஆனா நீங்க அதையும் சண்டை போட்டு கெடுத்துட்டீங்க என்று திட்டி விட்டு மேலே போகிறார்.
பிறகு வீட்டிற்கு வரும் கோபி இடம் ராதிகா ஈஸ்வரி பேசியதை எல்லாம் சொல்லிக் கொடுக்க, அங்கு வரும் பாக்கியா, நீங்க அத்தையை பேசினதையும் சொல்லுங்க என்று சொல்ல, அதைக் கேட்பதற்கு நீ யாரு என்று கோபி பாக்யாவை திட்டுகிறார். நீங்க கேக்கணும் நீங்க கேட்கல, உங்க அம்மாவை ராதிகா மரியாதை இல்லாம பேசுறாங்க, வீட்டை விட்டு போக சொல்றாங்க நீங்க பேசல எனக்கு உரிமை இருக்கு, நான் பேசுறேன் என்று பாக்யா பதிலடி கொடுக்கிறார்.
அப்போது ராதிகா உங்களுக்கு இந்த வீட்ல இருக்குறதுக்கே உரிமை இல்லை என்று சொல்ல, யாருக்கு உரிமை இல்லை? உங்க புருஷன் இந்த வீட்டை இருபது லட்சத்துக்கு விற்று இருக்காரு. நான் ரெண்டு லட்சம் கொடுத்து இருக்கேன் என்று சொல்ல, கோபி இன்னும் 18 லட்சம் தரவில்லையே என்று கேட்கிறார். இனி ஒரு மாசத்துக்குள்ள நான் தந்திடுவேன். தந்தால் நீங்க இந்த வீட்டை விட்டு வெளியே போயிறணும் என்று பாக்கியா அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications