செழியனுக்கு மாலினி கொடுக்கும் பிரச்சனை.. அதிர்ச்சியில் கோபி எடுத்த முடிவு.. இனி நடக்கப் போவது?
சென்னை: பாக்யலட்சுமி சீரியலில் செழியனிடம் பேசாததால் மாலினி செழியனின் உயர் அதிகாரிக்கு ஃபோன் போட்டு கொடுக்கிறார்.
அதே நேரத்தில் கோபி இனியாவிற்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக செய்ய இனியா கோபப்பட்டு கோபியை திட்டுகிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஆரம்பத்தில் பாக்கியா தன்னுடன் வேலை செய்பவர்களை அழைத்து பெரிய ஆர்டர் பற்றி பேச அவர்கள் ஆரம்பத்தில் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பிறகு பாக்கியா கொடுத்த மோட்டிவேஷன் பார்த்து ஒவ்வொருத்தராக இந்த ஆர்டரை எடுத்து செய்யலாம் என்று ஒத்துக் கொள்கின்றனர்.

அதைத்தொடர்ந்து பாக்யா இந்த மாதம் சம்பளத்தை நான் எப்போதும் போல உங்களுக்கு தந்து விடுவேன். ஆனால் இந்த ஆர்டர் பணத்தை நான் உடனே கொடுக்க முடியாது என்று சொல்கிறார். அதற்கு அவர்கள் பாண்டிச்சேரி வர வந்து சமைக்கணும்னு சொல்ற ஆனா சம்பளம் இல்லை என்றால் எப்படி என்று கேட்க, சம்பளம் இல்லை என்று சொன்னேனா உடனே கொடுக்க முடியாது கொஞ்சம் டைம் எடுப்பேன் என்று சொன்னேன். இரண்டு மூன்று தவணையாக கொடுத்து விடுவேன் என்று சொல்ல பிறகு எல்லோரும் யோசித்து சரி என்று சொல்கின்றனர்.
அதைத் தொடர்ந்து இனியா எக்ஸாம் முடிந்து கோபியோடு வீட்டிற்கு வரும்போது கோபி இனியாவிடம் பேசிக் கொண்டே வர அதற்கு பதில் சொல்லாமல் இனியா இருக்க, என்ன ஆச்சு என்று கோபி கேட்க வீட்ல உங்களால நடக்குற பிரச்சனையால் வருத்தமா இருக்கு என்று சொல்ல, எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம் என்பது எனக்கு தெரியும் என்று சொல்லி கோபி மன்னிப்பு கேட்கிறார்.
அதுமட்டுமில்லாம இனி வீட்டில் எந்த பிரச்சனையும் நடக்காது அதுக்கு நான் கேரண்டி என்று இனியாவுக்கு சத்தியம் செய்து கொடுக்கிறார். மறுபக்கம் எழில் எப்படியாவது பணத்தை ரெடி பண்ண வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க, அப்போது செழியன் நானும் என்னால் முடிந்த அளவிற்கு பணத்தை ரெடி பண்ணி தாரேன் என சொல்லிக் கொண்டிருக்க, மாலினி விடாமல் போன் செய்து கொண்டே இருக்கிறார். செழியன் போனை எடுக்காததால் மேனேஜருக்கு போன் செய்து கம்ப்ளைன்ட் செய்ய மேனேஜர் செழியனுக்கு போன் செய்து கோபப்படுகிறார்.
அடுத்ததாக பாக்கியா ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஐயாயிரம் பேருக்கு சமைக்கனும் என்று ஆர்டர் குறித்து பேச, நீ எங்களுக்காக தான் இவ்வளவு கஷ்டப்படுறேன்னு வருத்தப்படுகிறார்கள். பிறகு ஈஸ்வரி பெத்த பிள்ளையே வீட்டில் இருப்பதற்கு பணம் கேட்கிறேன். ஆனால் எங்களுடைய மருமகள் சொந்த மகன் மாதிரி எங்களுக்காக கஷ்டப்படுறா. இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி வேற வழியில் எப்படியாவது பார்க்கலாம் என்று சொல்லி கொண்டிருக்கின்றனர். அதற்கு பாக்யா நல்லபடியா நம்ம வீட்டை மீட்டு எடுப்போம் என்று கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து செழியன் மாலினியை சென்று சந்திக்க அவர் நேத்து உங்களை புடிச்சி இருக்குன்னு சொன்னதும் நீங்க கிளம்பி போயிட்டீங்க. போன் கூட எடுக்க மாட்டீங்க. அதனால்தான் மேனேஜர் கிட்ட சொல்லி உங்களை வர வைத்தேன். என்னை சுற்றி நிறைய பேர் இருக்காங்க. ஆனா உங்க கிட்ட பேசும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று வழிந்தபடியே பேசிக் கொண்டு இன்றும் செழியனுக்கு குடிப்பதற்காக அரேஞ்ச் செய்ய அத வேண்டாம் என்று செழியன் மறுக்கிறார்
ஆனாலும் விடாமல் மாலினி இதுதான் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று கூறிக்கொண்டு, இனி நீங்க என்னை பத்தி என்ன நினைச்சாலும் கவலை இல்லை. இதுக்கு அப்புறம் சந்திக்க முடியாமல கூட போகலாம். இன்னைக்கு நான் என் மனசுல இருக்குறத உங்க கிட்ட பேச போறேன் என்று சொல்ல, செழியன் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications