இனியா முன்னாடியே கோபியை அடித்த ராதிகா..பாக்கியா பற்றி மயூ சொன்ன வார்த்தை..எதிர்பாராத திருப்பம்
சென்னை: கோபி இனியாவுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ராதிகா சூழ்ச்சி செய்கிறார்.
இனியா முன்னாடியே கோபியை அடித்து தன்னுடைய பழியை ராதிகா தீர்த்துக் கொள்கிறார்.
இன்னொரு பக்கம் பாக்கியாவின் பாசத்தை பார்த்து மயூ மனம் மாறுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி விடும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 2ஆம் தேதியிலிருந்து 4ஆம் தேதிக்காண பிரமோ வெளியாகி இருக்கிறது. இதில் மயூ கோபி பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்த நிலையில் அதற்கு போட்டியாக இனியாவும் எனக்கு டவுட் இருக்கிறது என்று கோபி அறையில் வந்து இருந்து கொள்கிறார்.

கோபியும் வழக்கம்போல ராதிகா பக்கம் பேசவா? அல்லது இனியா பக்கம் பேசவா? என்று தெரியாமல் இனியாவிற்க்கு பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டு இருக்க, அங்கே வரும் ராதிகா லேட்டாகிவிட்டது நாங்க தூங்கணும் என்று சொல்ல, இங்கே இடமிருந்து இங்கே தூங்குங்க என்று கோபி ராதிகாவின் பிளானை புரிந்து கொள்ளாமல் வெகுளியாக சொல்கிறார்.
இதைப் பார்த்து கடுப்பாகும் ராதிகா லைட் எரிந்து கொண்டிருக்கிறது எப்படி நாங்க தூங்க முடியும் என்று கேட்க, இனியாவுக்கு முக்கியமான பாடத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால நீங்கள் கண்ண மூடிட்டு தூங்குங்க நாங்க லைட் ஆஃப் பண்ண முடியாது என்று மறுத்து விட ,இதை கேட்டு இனியா நக்கலாக ராதிகாவை பார்த்து சிரிக்கிறார்.
இனியா மீது இருக்கும் கோபத்தில் ராதிகா தூங்குவது போல நடித்து கோபியை வேகமாக அடித்து விடுகிறார். திடீரென்று விழுந்து அடியால் கோபியும் ஐயோ அம்மா என்ற அலர தெரியாமல் கைப்பட்டு விட்டது என்று ராதிகா சமாளித்தபடி இருக்க, கோபிக்கு உண்மை புரிந்து விடுகிறது. ராதிகா நம்ம மேல இருக்கும் கோபத்தில் தான் இப்படி செய்கிறா இனி என்ன செய்ய? என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் மயூவிடம் ராதிகா பாக்யாவிடம் பேசக்கூடாது என்று சொல்லி இருக்கும் நிலையிலும் பாக்கியா தனக்காக செய்யும் செயல்களை பார்த்து மயூ நீங்க ரொம்ப நல்லவங்க என்று பாக்யாவை பாராட்டுகிறார். ராதிகா வீட்டில் இல்லாத நேரங்களில் மயூக்கு சாப்பாடு கொடுத்து தேவையானதை செய்து கொண்டிருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக மயூ பாக்கியா பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறார். இதனால் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications