ராதிகாவிற்காக சண்டை போடும் பாக்கியா.. போலீஸ் கேட்ட கேள்வி..கோபி எடுத்த திடீர் முடிவு
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவை ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியே தள்ளியதால் ராதிகா கோபிக்கு போன் பண்ணி சொல்கிறார்.
ராதிகாவுக்கு ஆதரவாக பாக்கியா ஈஸ்வரியிடம் சண்டை போடுகிறார்.
ராதிகா அம்மா போலீஸ் உடன் வந்து ஈஸ்வரியையும் மொத்த குடும்பத்தையும் மிரட்டுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 7ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகாவின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டதால் நடுத்தெருவில் நின்று ராதிகா அழுதபடி நிற்பதை எல்லோரும் வேடிக்கை பார்க்கின்றனர்.
இதனால் அழுது கொண்டே ராதிகா கோபிக்கு போன் செய்து கோபியை உடனடியாக வீட்டுக்கு வரும்படி சொல்லி போனை கட் பண்ணி விடுகிறார். அதே நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஈஸ்வரி இடம் நீங்க பண்ணறது ரொம்ப தப்பு என்று அட்வைஸ் பண்ண அதைக் கேட்காத ஈஸ்வரி என்னால இனிமே பொறுமையா இருக்க முடியாது. இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும் யாரும் எதுவும் பேசக்கூடாது என்று திட்டுகிறார்.
அந்த நேரம் பார்த்து ராதிகாவின் அம்மா கடைக்கு போயிட்டு வருகிறார். அப்போ ராதிகாவை பார்த்து அதிர்ச்சி ஆகி என்ன நடந்ததுன்னு கேட்க, இதுக்கெல்லாம் காரணம் நீதான். நீதானே என்னை இந்த வீட்டுக்கு போக சொல்லி சொன்னா? என ராதிகா கோவப்பட்டு திட்டிக்கொண்டு பிறகு நடந்த விஷயத்தை சொல்ல, கொஞ்சம் பொறுமையா இரு இதுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என ராதிகா அம்மா அங்கிருந்து வேகமாக போகிறார்.
அதே நேரத்தில் கோபி அங்கே வர ராதிகா என்னை கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளிட்டாங்க என சொல்ல, யார் உன்னை இப்படி வெளியே அனுப்புனது என்று கேட்க, உங்க அம்மா தான் என்று ராதிகா சொல்ல, கோபி அதிர்ச்சி அடைகிறார்.வா நான் என்னன்னு கேட்கிறேன் என்று ராதிகாவை கூப்பிட்டுக் கொண்டு உள்ளே போக, ஈஸ்வரி வெளியே நின்னுடா என்று திட்டியபடி வாசலுக்கு வருகிறார்.

இனி ஒன்னு இந்த வீட்டில இவா இருக்கணும் இல்லனா நான் இருக்கணும் என்று ஈஸ்வரி சொல்ல, கோபி என்னம்மா இப்படி பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க என்று கேட்க, இவா என்ன எல்லாம் பேசுனானு தெரியுமா? என்ன கையை நீட்டி நீட்டி பேசுறா? வீட்டை விட்டு வெளியே போக சொல்ற? என்று சொல்ல கோபி யார் பக்கம் பேச என்று தெரியாமல் தவிச்சிட்டு இருக்காரு.
பிறகு ராதிகாவிடம் நாம இங்க வந்ததிலிருந்து ஒரே பிரச்சனையாக இருக்கு வா நம்ம வீட்டுக்கு போயிடலாம் என்று கூப்பிட ,ராதிகா நீங்க எல்லாம் ஒரு மனுசனா? என்று கோபமாக திட்ட, அதைக் கேட்டு ஈஸ்வரி இதுதான் புருஷனுக்கு கொடுக்கிற மரியாதையா? இதுக்கு தான் இவ்வளவு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணுனியா? என்று கேள்வி கேட்கிறார்.
இவர்கள் இப்படி சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்போது சரியா அந்த இடத்திற்கு ராதிகாவின் அம்மா போலீஸோடு வர, எல்லோரும் அதிர்ச்சி ஆகின்றனர். ராதிகா அம்மா இவங்க எல்லாரும் சேர்ந்து என் பொண்ணை கழுத்த புடிச்சு வெளியே தள்ளிட்டாங்க. வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமை, முதல் மனைவி கொடுமை என எல்லாத்தையும் பண்றாங்க. இவங்கள புடிச்சு ஜெயில்ல போடுங்க என்று கோபமாக பேசுகிறார்.
அதற்கு ஈஸ்வரியும் பதில் பேச ராதிகாவின் அம்மாவும் எதிர்த்து பேச போலீஸ் முன்னாடியே இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பான போலீஸ் இருவரையும் திட்டுகிறார். பிறகு ஈஸ்வரியிடம் நீங்க எதுக்கு மருமகளை வெளியே வீட்டை விட்டு வெளியே அனுப்புனீங்கன்னு கேட்க, யார் யாருக்கு மருமக? தெருவுல போற யாரோ என் வீட்டில் வந்து உட்கார்ந்துகிட்டு மருமகள் ஆகிடுவாங்களா?
எங்களுக்கு எப்பவும் பாக்கியா மட்டும் தான் மருமகள் என்று போலீஸிடம் ஈஸ்வரி எதிர்த்து பேசுகிறார்.இதனால் கோபமான போலீஸ் கோபியிடம் நீங்களே சொல்லுங்க உங்க மனைவி யாருன்னு கேட்க? கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications