பழனிச்சாமியால் வயிறு எரியும் கோபி.. ஈஸ்வரிக்கு தெரிய வந்த உண்மை.. அடுத்த பிரச்சனை ஸ்டார்ட் ஆகியாச்சு
பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு படிக்க செல்வது ஈஸ்வரிக்கு தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 11 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசுவதை பார்த்து கோபி பொறாமையில் தவிக்கிறார்.
பாக்கியா புதியதாக படிக்கும் விஷயம் தனக்கு சொல்லவில்லையே என்று ஈஸ்வரி கோபத்தில் அங்கிருந்து கிளம்புகிறார்.

பாக்கியாவிற்கு வெற்றி தான்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கதையின் நாயகியாக இருக்கும் பாக்கியா அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று கொண்டே இருக்கிறார். கோபி தன்னை வேண்டாம் என்று விட்டுவிட்டு இன்னொரு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில், நான் எதற்காக பீல் பண்ணி கொண்டு வாழ்க்கையில் சோர்ந்து இருக்க வேண்டும் என்று இந்த சீரியல் பார்க்கும் பெண்களுக்கும் உத்வேகம் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து பாக்கியா புது புது முயற்சிகளை செய்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார்.

வயிறு எரியும் கோபி
தற்போது கூட ராதிகாவின் சூழ்ச்சியால் அவருடைய ஆபீஸ் கேட்டரிங் ஆர்டர் பாக்யாவுக்கு கிடைக்காமல் தட்டி கழிக்கப்பட்டு பாக்கியா கடனாளியாக ஆன பிறகு மீண்டும் முயற்சி செய்து பாக்கியா அதே ஆபீஸில் கேட்டரிங் சர்வீஸ் ஆர்டரை எடுத்து இன்று திறப்பு விழாவும் வெகு விமர்சனமாக கொண்டாடி இருக்கிறார். திறப்பு விழாவிற்கு வந்த ராதிகா பொறாமையில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் கோபியும் அடுத்தடுத்து பாக்கியா பெரும் வெற்றிகளை பார்த்து வயிறு எரிந்து கொண்டிருக்கிறார்.

இது பொறாமை கோபி
இந்த நிலையில் பாக்யா, தன்னை ராதிகா இங்கிலீஷ் தெரியாமல் அவமானப்படுத்தி இருந்ததால் புதியதாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்சில் சேர்ந்திருக்கும் விஷயத்தை வீட்டில் ஈஸ்வரி இடம் கூறாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய கேட்டரிங் திறப்பு விழாவிற்கு தன்னுடன் படிக்கும் நண்பர்கள் அனைவரையும் அழைத்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக பழனிச்சாமி திறப்பு விழாவிற்கு வந்து உங்களுக்கு வயசு என்ன இப்போ 30 வயசு இருக்குமா? என்றெல்லாம் கேட்டு கொண்டிருக்கிறார். இதை பார்த்து அங்கு வரும் கோபி அதிர்ச்சி ஆகிறார்.

மீண்டும் கோபத்தில் ஈஸ்வரி
உங்களுக்கு வயசே தெரியவில்லையே என்றும், நீங்க இவ்ளோ இளமையாக இருக்கிறீங்க என்று பசுபதி பாராட்ட அதற்கு பாக்கியா வெட்கப்படுகிறார். இதை பார்த்து கோபி பொறாமையில் துடிக்கிறார். அதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து ஈஸ்வரி, பாக்யா யார் இவங்க என்று கேட்க? அப்போது இனியா, அம்மா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போறாங்கல்ல, இவங்க எல்லாம் அம்மா கூட படிக்கிறவங்க என்று சொல்ல, என்னது இங்கிலீஷ் கிளாசா? என்று கோபப்பட்டு அங்கிருந்து ஈஸ்வரி கிளம்பி செல்கிறார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பெரும் எதிர்பார்ப்போடு இந்த பிரமோ வெளியாகி இருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications