பாக்கியாவிடம் திருமணத்தை பற்றி பேசிய பழனிச்சாமி.. அதிர்ச்சியில் எழில்.. ஈஸ்வரியின் எதிர்பாராத செயல்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமி தன்னுடைய திருமணத்தைப் பற்றி பாக்கியாவிடம் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நிலா பாப்பாவின் பிறந்தநாளுக்கு பாக்கியாவின் நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர்.
எழில் மற்றும் அமிர்தா இருவரும் வீட்டினர் செய்து வைத்த செயலை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

அட நம்புங்க பாஸ்
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 25ஆம் தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் பாக்யா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் அனைவரையும் நிலா பாப்பாவின் பிறந்தநாளுக்கு வர சொல்லி கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு இருப்பவர்கள் மீண்டும் மீண்டும் பாக்யாவிடம் உண்மையில் உங்களுக்கு பேத்தி வரைக்கும் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். பிறகு பாக்யாவிற்கு எப்போது திருமணம் நடந்தது. இப்போது எத்தனை வயது என்று பாக்கியாவின் தோழி கேட்டுக் கொண்டிருக்க, பழனிசாமி பாக்யாவிடம் ரகசியமாக உண்மையை சொல்லுங்கள், அந்த ரெண்டு வளந்த பசங்களும் உங்க குழந்தைகள் தானா? என்று கேட்கின்றார். அதற்கு ஆமாம் என்று பாக்கியா கூறுகிறார்.

சர்ப்ரைஸ் வேலை
பிறகு தன்னுடைய திருமண விஷயத்தைப் பற்றி பாக்யாவிடம் பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்க, அங்கிருக்கும் அனைவரும் சிரிக்கின்றனர். பிறகு அனைவரும் பிறந்தநாளுக்கு வந்து விடுவதாக கூறுகின்றனர். அடுத்ததாக பாக்கியா வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்க, அங்கே வரும் செல்வி பர்த்டே பங்க்ஷனுக்கான ஏற்பாடு எதுவும் செய்யவில்லையா? என்று கேட்க எழில் மற்றும் அமிர்தா இருவரும் நிலா பாப்பாவை கூட்டிக்கொண்டு கோயிலுக்கு சென்று இருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் எல்லா ஏற்பாடுகளும் செய்து இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அவர்கள் வேலைகளில் இறங்குகின்றனர். அப்போது ஈஸ்வரி அங்கு வருகிறார்.

கோபப்படும் ஈஸ்வரி
பிறகு இவர்கள் செய்து கொண்டிருப்பதை பார்த்து என்ன என்று கேட்க, இன்று நிலா பாப்பாவின் பிறந்தநாள் என சொல்கின்றனர். மேலும் நம்ம வீட்டுக்கு நிலா வந்து கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் சிறப்பாக கொண்டாடலாம் என்று ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறுகின்றனர். என்னிடம் நீங்கள் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்று ஈஸ்வரி கோபப்பட உங்களிடம் சொன்னால் நீங்கள் வேலை எல்லாம் நானும் செய்கிறேன் என்று சொல்வீங்க, அதனால் தான் உங்களிடம் சொல்லலை என பாக்கியா சமாளிக்கிறார்.

பாட்டியும் மனம் மாறியாச்சி
பிறகு ஈஸ்வரி பலூன் ஊதி கொடுக்கிறார். அடுத்து ராமமூர்த்தி மற்றும் இனியா இருவரும் அங்கு வர எல்லோருக்கும் தெரிந்திருக்கு எனக்கு மட்டும் சொல்லலையா என்று மீண்டும் ஈஸ்வரி கோபப்படுகிறார். அடுத்து அமிர்தாவின் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் வருகின்றனர். அவர்கள் வந்ததும் நிலா பாப்பாவை எங்கே என்று கேட்க எழில் மற்றும் அமிர்தா இருவரும் கோவிலுக்கு கூட்டிட்டு போயிருக்கிறார்கள் என்று பாக்கியா சொல்கிறார். அவங்களுக்கு தெரியாம தான் நாங்க இந்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்

பிறந்தநாள் கொண்டாட்டம்
அடுத்ததாக நிலா பாப்பா, எழில் மற்றும் அமிர்தாவும் வீட்டுக்கு வர அங்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை பார்த்து அமிர்தா ஷாக் ஆகி இருக்கிறார். பிறகு அப்பா, அம்மா வந்திருப்பதையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். அதன் பிறகு பாக்யாவின் கூட படித்தவர்கள் வீட்டிற்கு வந்து அனைவரும் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடுகின்றனர்.

பழனிச்சாமியின் கதை
அடுத்ததாக எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது பழனிச்சாமி இடம் ஈஸ்வரி உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கேட்க, அதற்கு எழில் இவருக்கு 25 வயசு தான் ஆகுது என்று சொல்ல, என்ன தம்பி எனக்கு அஞ்சு வயசு கூட்டி சொல்லிட்டீங்க என்று பழனிச்சாமி நக்கல் அடிக்கிறார். பிறகு தனக்கு கல்யாணம் ஆகாத விஷயத்தையும் அதற்கான காரணத்தையும் சொல்ல ஈஸ்வரியின் நான் உங்களுக்கு பொண்ணு பாக்கவா என கேட்க, சரி பாருங்க என்று பழனிசாமியும் சொல்கிறார். அனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications