பாக்யாவிற்கு டாஸ்க் கொடுத்த ராதிகா.. தோள் கொடுத்து பழனிச்சாமி செய்யும் செயல்... கடுப்பாகும் கோபி
சென்னை: இதுவரைக்கும் அமிர்தாவின் அப்பா அம்மாவை திட்டி வந்த ஈஸ்வரி தற்போது மனம் மாறி அவர்களிடம் நல்ல விதமாக பேசிக் கொள்கிறார்.
ராதிகா பாக்யாவிற்கு கேண்டினில் புதியதாக கேக் செய்து வைக்க வேண்டும் அதுவும் நீங்கள் தான் செய்ய வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கிறார்.
பாக்கியாவிற்கு உதவியாக பழனிச்சாமி களம் இறங்குகிறார்.

மனசு மாறிய ஈஸ்வரி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மார்ச் 29 ஆம் தேதிக்கான இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில், அமிர்தாவின் அப்பாவும் அம்மாவும் ஊருக்கு கிளம்பும் போது ஈஸ்வரியிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று ஈஸ்வரியை பார்க்க ரூம்முக்குள் வருகின்றனர். அப்போது ஈஸ்வரி நிலா பாப்பாவோடு விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து சந்தோஷப்படுகின்றனர். பிறகு தாங்கள் ஊருக்கு கிளம்புவதாக சொல்லி அமிர்தாவையும், நிலா பாப்பாவையும் நன்றாக பார்த்துக் கொள்வதற்காக நன்றி கூறுகின்றனர்.

சாப்பாடு பிரச்சனை
பிறகு வெளியே அவர்கள் வரும்போது அங்கே வரும் ராமமூர்த்தி இது நம்ம ஊரு பலகாரம் என சொல்லி ஊருக்கு எடுத்துப் போக சொல்லிக் கொடுக்கிறார். அடுத்ததாக இனியா ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டு இருக்க லஞ்ச் பாக்ஸ் ரெடியா என்று ராதிகாவிடம் கேட்க, நான் உனக்கு என்ன அம்மாவா? நான் எதுக்கு உனக்கு லஞ்ச் பாக்ஸ் கட்டி தரணும். இதெல்லாம் மட்டும் நான் தேவையா? எனக் கேட்க இனியா எனக்கு நீங்க லஞ்ச் கட்டி தர வேண்டாம் என்று கோபத்தோடு சொல்கிறார். பிறகு கோபி லஞ்ச் எடுத்துட்டு போக சொல்ல, ராதிகா சொன்னதை சொல்லி இனிமே அவங்க எனக்கு லன்ச் கொடுக்க வேண்டாம். எனக்கு நீங்க காசு கொடுத்துடுங்க நான் கேண்டில்ல சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு நான் தாத்தாவோட போறேன் என்று சொல்லி கிளம்புகிறார்.

ராதிகாவின் கட்டளை
பிறகு கோபி ராதிகாவிடம் அவ சின்ன குழந்தை அவகிட்ட எதுக்கு காலையில் சண்டை போட்டா என்று கேட்க, ராதிகா அவ எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கணும். இந்த ஒரு விஷயத்தில் மட்டுமல்ல அவா எப்பவும் என்ன ஒரு அம்மாவாக நினைப்பதற்கு நீங்கதான் வழி செய்யணும் என்று கூறி, இனியா வேண்டாம் என்று கூறிவிட்டு சென்ற சாப்பாடு பேக்கை கோபியின் கையில் கொடுத்து இனியா இதை தான் சாப்பிட வைக்கணும் நீங்க என்று கட்டளை இடுகிறார்.

அடுத்த டாஸ்க்
அடுத்ததாக பாக்கியா கேண்டினில் இருந்து கிளாசுக்கு கிளம்ப அங்கு வரும் ராதிகா இன்னும் இரண்டு நாள்ல பேக்கரி ஐட்டம் எல்லாம் இங்கே இருக்க வேண்டும் என சொல்ல, பாக்கியா அதற்கும் சரி என்று சொல்கிறார். அதற்கு எப்படி கடையில் இருந்து வாங்கி வந்து வைப்பீங்களா? என்று ராதிகா கேட்க, ஆமாம் நல்ல கடையாக பார்த்து வாங்குவோம் என்று பாக்கியா சொல்ல, அப்படி எல்லாம் நீங்க வெளியில் எதுவும் வாங்கக்கூடாது. எதுவாக இருந்தாலும் நீங்க தான் சமைக்கணும் என்று சொல்லி பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். மேலும் இதுதான் நான் உங்களுக்கு கொடுக்கிற அடுத்த டாஸ்க் என்று சொல்லி கெத்தாக அங்கிருந்து கிளம்புகிறார்.

உதவி செய்யும் பழனிச்சாமி
பிறகு கிளாசுக்கு வந்த பாக்கியா ராதிகா சொன்னதை நினைத்து என்ன செய்வது என்று யோசனையில் உட்கார்ந்திருக்க, பழனிச்சாமி பாக்யாவின் நடவடிக்கையில் தெரியும் மாற்றத்தை பார்த்து என்ன நீங்க கிளாசஸ் சரியாகவே கவனிக்கவில்லையே என்று கேட்க, பாக்யா நடந்ததை சொல்கிறார். அவர் கேக் செய்றதெல்லாம் ரொம்ப ஈஸியான விஷயம். ஒன்று பேக்கிங் கிளாஸ் போங்க அப்படி இல்லன்னா நான் உங்களுக்கு சொல்லி தரேன் என்று கூறுகிறார். மேலும் எல்லாத்தையும் நீங்களே தான் செஞ்சு வைக்கணும்னு எந்த கேண்டிலையும் சொல்ல மாட்டாங்க? இங்க மட்டும் இப்படி சொல்றாங்க என்று கேட்க, பாக்கியா, ராதிகா வேற யாரும் இல்லை, என்னுடைய முன்னாள் கணவரின் இன்னாள் மனைவி என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications