ராதிகாவிடம் அடுத்தடுத்து பிரச்சினை செய்த ஈஸ்வரி..கடுப்பாகி பேசிய கோபி.. தொடங்கிய புது பிரச்சனை
சென்னை: ஈஸ்வரி ராதிகாவிடம் பிரச்சனை செய்து வீட்டை விட்டு வெளியேற்றி விடுவதாக சபதம் போடுகிறார்.
பாக்யா தன்னுடைய தோழியிடம் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி கடுப்பாகிறார்.
இந்த வீட்டில் பாக்கியா நடிச்சுக்கிட்டு இருக்கா என்று கோபி ராதிகாவிடம் சொல்ல ராதிகா கோபியை திட்டி விடுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 11ஆம் தேதிக்கான எபிசொட்டில் அமிர்தாவும் செல்வியும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகா கீழே இறங்கி வந்து இவர்கள் இருவரும் கிச்சனில் இருப்பதை பார்த்து டிவி பார்க்க செல்கிறார்.
ராதிகா சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து அப்போது கிச்சனுக்கு வரும் ஈஸ்வரி செல்வியிடம் வெண்ணீர் கேட்டுவிட்டு ராதிகா டிவி பார்ப்பதை பார்த்து ஹாலுக்கு சென்று ரிமோட்டை எடுத்து மாற்றி அவர் இஷ்டத்துக்கு டிவி பார்க்கிறார். இதனால் ராதிகா நான் தானே டிவி பாத்துட்டு இருக்கேன். நீங்க அப்புறம் பார்க்கலாம் அல்லவா என்று கேட்க, இது என் வீடு என் டிவி நான் எப்ப வேணாலும் பார்ப்பேன். புடிக்கலனா நிறுத்தி வைப்பேன் அதை கேட்க நீ யாரு என்று சண்டையிடுகிறார்.

பிறகு ராதிகா சமைக்க கிச்சனுக்கு வர, செல்வி வெந்நீர் எடுத்து வந்து ஈஸ்வரிக்கு கொடுக்க எனக்கு அப்படியே ஒரு காபி என்று கேட்கிறார். உடனே செல்வி இப்போதைக்கு காபி கிடைக்காது இரண்டு அடுப்பும் பிஸியா இருக்கு என சொல்லி ராதிகா சமைக்கும் விஷயத்தை சொல்கிறார். அதனால் கடுப்பாகி கிச்சனுக்கு வரும் ஈஸ்வரி அந்த ரெண்டையும் இறக்கி வைத்துவிட்டு ஒரு பக்கம் டிகாஷன் ஒரு பக்கம் பால் காய்ச்சி எனக்கு காபி கொடு என்று சொல்ல செல்வி ராதிகாவிடம் கோபப்படுகிறார்.
பிறகு ராதிகாவும் ஈஸ்வரியும் சண்டை போடுகின்றனர். அப்போது உன்னை கோபியிடம் இருந்து பிரித்து அவனிடம் விவாகரத்து வாங்கி விட்டு இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புறேன் என்று சவால் விடுகிறார். பிறகு ராதிகா நான் தான் உங்க மருமகள் உங்க வாயால சொல்ல வைக்கிறேன் என்று சவால் விடுகிறார். அதற்கு ஈஸ்வரி அப்படி ஒரு நிலைமை வந்தால் என் நாக்கை அறுத்து எறிஞ்சிடுவேன் என்று சொல்கிறார்.

செழியன் கிளைன்டை பார்க்க போக, அந்த பெண் செழியனிடம் உரிமையாக பேசுகிறார். ஆனால் செழியன் எதுவும் புரியாதது போல முழித்துக் கொண்டிருக்கிறார். பிறகு கோபி வீட்டுக்கு வர பாக்யா தன்னுடைய தோழியிடம் ஃபோனில் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து கோபி பழனிச்சாமியிடம்தான் பேசுவதாக நினைத்து முதலில் கிளாசில் பேசினா,அப்புறம் வீட்டுக்குள் போய் பேசினா, இப்ப போன்ல வேற பேசுறா என்று புலம்புகிறார்.
பிறகு ரூமுக்கு வர ராதிகா கடுப்பாக உட்கார்ந்து இருக்க என்ன ஆச்சு என கேட்க, ஈஸ்வரி விட்ட சவாலை பற்றி சொல்ல அந்த பாக்கியா நல்லவ மாதிரி நாடகமாடிட்டு இருக்கா, குடும்ப குத்து விளக்கு மாதிரி நடிக்கிறா என கோபப்பட இதை எல்லாம் என்கிட்ட எதுக்கு சொல்லுரீங்க, போயி உங்க வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்லுங்க என்று ராதிகா கோபியை திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications