கோபிக்காக பாக்யா செய்த செயல்.. ராதிகாவின் அதிரடி.. இனியா செய்த பிரச்சனை.. பரபரப்பான திருப்பம்
சென்னை: கோபி கெஞ்சி கேட்டதால் பாக்கியா அவருக்கு காபி போட்டு கொடுக்கிறார்.
அதே நேரத்தில் அங்கு வரும் ராதிகாவை பார்த்து கோபி பயந்து ஓடி விடுகிறார்.
பிறகு ராதிகா பாக்யாவை அவமானப்படுத்த கடைசியில் பல்பு வாங்குகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 29ஆம் தேதிக்காண எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபி பாக்யாவிடம் ரொம்ப தலைவலிக்குது ஒரு காபி கிடைக்குமா என்று கெஞ்சி கேட்டு பிறகு வேண்டாம் என்று சொல்கிறார்.
அதைப் பார்த்து ராமமூர்த்தி ரொம்ப பாவமா இருக்கு நீ வீட்ல இருக்கவங்களுக்கு கொடுக்குற மாதிரி கொடுக்க வேண்டாம். தெருவுல போறவங்களுக்கு கொடுக்குற மாதிரி ஒரு காபி போட்டு கொடு. அதுவும் உன்னுடைய விருப்பம்.. இல்லன்னா வேண்டாம் என்று பாக்யாவிடம் சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

அப்போது பாக்கியா காபி போட்டு எடுத்து வந்து கோபியின் அருகில் வைக்க, அதே நேரத்தில் ராதிகாவும் கிச்சனுக்குள் வந்துவிட கோபி நான் ஒன்றும் காபி கேட்கல என்று ராதிகாவை பார்த்து அலறியபடி பயந்து அங்கிருந்து ஓடுகிறார். பிறகு ராதிகா எனக்கும் அவருக்கும் சண்டை ஆக இருக்கும் போது காபி கொடுத்து இம்ப்ரஸ் பண்ண பாக்குறீங்களா? என்று பாக்யாவிடம் கேள்வி கேட்கிறார்.
நான் அவரோட வாழும் போது இம்ப்ரஸ் பண்ண ஒன்னும் பண்ணல. விவாகரத்து கொடுத்த பிறகு அவரை இம்ப்ரஸ் பண்ணி என்ன ஆகப்போகிறது என்று பதிலடி கொடுக்க, செல்வி இதோட முடிஞ்சிடுமா? இல்லை இன்னும் ஏதாவது இருக்கா? நீங்க பல்பு வாங்குவதை பார்க்க ஆசையா இருக்கு என்று நக்கல் செய்கிறார்.
அப்போது இனியா ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டு இருக்க செழியன் திடீரென்று மீட்டிங் இருக்கிறது என்று சொன்னதால் கோபி நான் கூட்டிட்டு போறேன் என்று இனியாவை கூட்டிட்டு போகிறார் இதை ராதிகாவிடம் சொல்லக்கூடாது என்று ஈஸ்வரி செல்வியிடம் சொல்கிறார்.
கொஞ்ச நேரம் கழித்து ராதிகா அங்கே வந்து ஜெனி இடம் கோபி எங்கே என்று கேட்க எனக்கு தெரியாது என்று ஜெனி சொல்ல, செல்வி ஒரு நிமிடம் என்று சொல்லி கிச்சனில் இருக்கும் கபோர்டுகளை திறந்து பார்த்து எங்கேயும் இல்லையே என்று நக்கல் அடிக்கிறார். இதைப் பார்த்து கோபமான ராதிகாவை பார்த்து ஈஸ்வரி உனக்கெல்லாம் பதில் சொல்றதே பெரிய விஷயம் என்று திட்டுகிறார்.
பிறகு ராதிகா நீங்க சொல்லலனா எனக்கு தெரியாதா? அவருடைய கார் இல்ல அப்ப ஆபீஸ்க்கு தானே போயிருக்காரு என்று கேட்க, ஈஸ்வரி அவன் ஆபீசுக்கு போகல இனியாவை ஸ்கூலில் விட போயிருக்கான் என்று சொல்ல, ராதிகா அதிர்ச்சி அடைகிறார். என்கிட்ட ஒரு வார்த்தையாவது சொல்லிட்டு போயிருக்கலாம் என்று சொல்ல, உன்கிட்ட அவன் எதுக்கு சொல்லணும். அவன் பொண்ண அவன் ஸ்கூலுக்கு கொண்டு போய் விட போய் இருக்கான் என்று ஈஸ்வரி பதிலடி கொடுக்கிறார்.
அதே நேரத்தில் இனியாவும் கோபியும் காரில் சென்று கொண்டிருக்கும் போது இனியா ஏன் அமைதியா வர முன்ன மாதிரி நீ இல்ல ரொம்ப மாறிட்ட என்று கோபி கேட்க, ஏன் நீங்க மாறலையா? நீங்க மாறும்போது நான் மாறக்கூடாதா என்று இனியா கேள்வி கேட்கிறார். எதுக்கு டாடி குடிக்கிறீங்க எனக்கு சுத்தமா பிடிக்கல என்று சொல்ல டாடிக்கு டென்ஷன் என்று கோபி சமாளிக்கிறார்.

அந்த ராதிகா ஆன்ட்டி தானே ப்ராப்ளம் நீங்க அவங்கள கல்யாணம் பண்ணி இருக்க கூடாது என இனியா சொல்ல, கோபி அவசரப்பட்டுட்டேன் என்று சொல்கிறார். அப்பா அவங்கள விட்டுட்டு வந்துருங்க என்று இனியா சொல்ல அதற்கு அப்படி விட்டுட்டு வர முடியாது நான் ப்ராமிஸ் பண்ணி இருக்கேன் என்று சொல்ல, அம்மாக்கு தான் ப்ராமிஸ் பண்ணினீங்க ஆனா விட்டுட்டு போகலையா? என்று இனியா கேள்வி கேட்கிறார்.
அதற்கு உங்க அம்மா என்ன கஷ்டப்பட்டுட்டா இருக்கா? ரொம்ப சந்தோஷமா தானே இருக்கா என்று சொல்ல, ஆமா நீங்க போனதுக்கு அப்புறம் அம்மா ரொம்ப சந்தோசமா இருக்காங்க. நீங்க அப்போ அம்மாவை அவ்வளவு டார்ச்சர் பண்ணி இருக்கீங்களா? என்று கேட்க கோபி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
அப்படியே இனி நீங்க குடிக்க கூடாது என கோபியிடம் சத்தியம் வாங்கியபடி இனிமேல் நீங்க அந்த வீட்டுக்கு போக கூடாது என்று இனியா சொல்ல கோபி என்ன செய்வது என்று தெரிவிக்காமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications