அமிர்தாவால் கணேசன் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எழிலின் எதிர்பாராத வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் வரும் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 14ஆம் தேதி எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் கணேசன் குறித்து அமிர்தா கணேசனின் பெற்றோருக்கு போன் பண்ணி பேச அந்த இடத்திற்கு கணேசன் வந்து விடுகிறார்.

அதே நேரத்தில் கணேசன் குறித்து எழில் கணேசனின் பெற்றோரிடம் எதிர்பாராத பதிலை எழில் சொல்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா ஹோட்டலில் விதவிதமாக உணவுகளை ஆர்டர் செய்து கொண்டிருப்பதை ஈஸ்வரி ஆச்சரியமாக பார்த்து பாராட்டுகிறார். அதற்கு நான் ஒரு செஃப் என்பது தெரியுமா? என்று பாக்கியா கிண்டல் செய்து கொண்டு பிறகு எல்லோரும் அங்கு சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து கணேசனின் வீட்டில் அவரை காணவில்லை என்று அவருடைய பெற்றோர் தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அமிர்தா போன் பண்ணி கணேசனின் அம்மாவிடம் பேசுகிறார். அப்போது கணேசன் தன்னுடைய கனவில் வந்து தன்னை துரத்திய விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது அங்கு வரும் எழில் போனை வாங்கி பேசுகிறார். அவர் கணேஷ் எதற்காக அமிர்தாவை துரத்தனும் அதை சொன்னால் இவங்க கவலைப்பட்டுட்டே இருக்காங்க. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று போனை கட் பண்ணுகிறார்.

அங்கே வரும் கணேஷ் யார் கிட்ட பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க அதற்கு நாங்கள் அமிர்தாவை பற்றி தெரிந்தவர் ஒருவரிடம் விசாரித்துக் கொண்டு இருக்கிறோம் என்று அம்மாவும், அப்பாவும் சமாளிக்கின்றனர். பிறகு, நீ இவ்வளவு நேரமா எங்கு போய் இருந்தாய் என்று கேள்வி கேட்க, அதற்கு நான் அமிர்தாவை தேடி அவருடைய வீட்டுக்கு போனேன் என்று கணேசன் சொன்னதை கேட்டதும் அவருடைய பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து செழியனுக்கு போன் பண்ணும் பாக்கியா செழியன் எங்க இருக்கிறாய் என்று விசாரிக்கிறார். பிறகு நான் போன் செய்தால் நீ ஏன் எடுக்கவில்லை என்று திட்டி விட்டு நீ ஜெனியை போய் பார்க்கவே இல்லையாமே, மரியாதையா இப்பவே போய் பாரு. நான் வீட்டுக்கு வந்து பேசுகிறேன் என்று மிரட்டிக் கொண்டிருக்க, அதற்கு செழியன் நான் இப்பவே போறேன் என்று சொல்கிறார்.
பிறகு பாக்யா எதுக்காக செழியன் இடம் சண்டை போட்டாய் என்று ஈஸ்வரி கேட்க, அதற்கு அவன் ஜெனியை போய் பார்க்கவே இல்லை. அதான் திட்டி அனுப்பி விட்டு வருகிறேன் என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி அவன் ஜெனி வீட்டுல போய் தங்குனா நல்லா இருக்குமா? என்று கேட்க அவனை ஜெனியை போய் பார்க்க தான் சொன்னேன் என்று பாக்கியா சமாதானப்படுத்துகிறார்.
அதை தொடர்ந்து அடுத்த நாள் காலையில் சீக்கிரமாக கிளம்பனும் என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் ஜெனியை பார்க்க செழியன் வந்ததும் ஜெனி வழக்கம்போல நக்கலாக பேசுகிறார். இதை நாள் செழியன் கோபப்படுகிறார். பிறகு செழியன் இடம் ஜெனி இன்னைக்கி நீ என்கூட தங்குவியா என்று கேட்க, முதலில் நோ சொன்ன செழியன் பிறகு சரி என்று சொல்கிறார். அந்த நேரத்தில் மாலினி போன் செய்து கொண்டே இருக்கிறார்.

பிறகு விடிந்தது எல்லோரும் கிளம்பி கொண்டிருக்க அப்போது கோபி ஈஸ்வரிக்கு போன் பண்ணி பேசுகிறார். எல்லாம் சரியாக எடுத்து வைத்து விட்டீர்களா? என்று விசாரித்துக் கொண்டு இனியாவிடமோ போன் பண்ணி உனக்கு ஏதாவது பிரச்சனைனா? உடனே எனக்கு போன் அடி என்று சொல்கிறார். அப்போது கோபி பாக்கியாவிடம் போனை கொடுக்க சொல்ல, பாக்கியா என்னவென்று கேட்க, என்னுடைய அம்மாவையும் பொண்ணையும் பத்திரமாக கொண்டு சேர்க்கவில்லை என்றால் நடக்கிறதே வேற என்று கோபி மிரட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications