ராதிகாவிற்கு தெரியாமல் பாக்யாவிடம் பேசும் கோபி.. பயத்தில் நடுங்கும் ஈஸ்வரி.. இனியா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் இரண்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் ட்ரிப்புக்கு போய்க் கொண்டிருக்கும் பாக்கியாவிற்க்கு போன் செய்து கோபி அவமானப்படுகிறார்.
அதே நேரத்தில் பாக்கியாவை பார்த்த ஈஸ்வரி மிரண்டு போயிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மயூவிற்கு மஞ்சள் நீராட்டு விழாவிற்காக சேரில் உட்கார வைக்க கோபி மயூவை பார்த்து ஆச்சரியப்படுகிறார். பிறகு மயூவிற்க்கு ஒவ்வொருவராக நலுங்கு வைத்துக் ஆசீர்வாதம் செய்து கொண்டிருக்கும்போது கோபி நான் குட்டி பொண்ணாக பார்த்தேன். இப்போ மயூ இப்போ இவ்வளவு வளர்ந்து விட்டா என்று ஆனந்த கண்ணீர் விடுகிறார்.
பிறகு ராமமூர்த்தியும் வர அவரும் மயூவை ஆசீர்வாதம் செய்து விட்டு கிளம்ப, கோபி மயூவிற்க்கு ஜூஸ் கொடுக்க, அதை பார்த்து அங்கு இருப்பவர்கள் அனைவரும் ராதிகா கொடுத்து வைத்தவர் என்று பாராட்ட ராதிகா அதை பார்த்து சந்தோஷப்படுகிறார். பிறகு கோபி இனியாவுக்கு போன் செய்து எங்க போயிட்டு இருக்கீங்க எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்கா டிரைவர் நல்லபடியாக கார் ஓட்டுகிறாரா? என்று கேட்க, இனிய டிரைவர் பாதியிலே போய்விட்டதை சொல்லி அம்மா தான் கார் ஓட்டுகிறார் என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.
உடனே காரை ஓரம் கட்டுங்க என்று கோபி கத்த, அதைக் கேட்டு ஈஸ்வரியும் காரை நிறுத்த சொல்ல பாக்கியா காரை ஓரமாக நிறுத்துகிறார். பிறகு கோபி பாக்கியாவை போனில் திட்டிக் கொண்டிருக்க பாக்யா போனை கட் பண்ணி விட்டு திரும்பவும் கார் எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். பாக்யா கார் ஓட்டுவதை பார்த்து ஈஸ்வரி பயந்து காரை எடுக்க வேண்டாம் காரை ஓரமாக நிறுத்தி விடு என்று சொல்கிறார்.
அதற்கு பாக்கியா உங்க மகன் நான் கார் ஓட்டக்கூடாது என்று சொன்ன பிறகு தான் நான் கார் சரியாக ஓட்ட வேண்டும் என்று எனக்கு தைரியம் வருகிறது என்று பாக்யா காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். பிறகு பாக்யா ஒரு ஹோட்டலுக்கு சென்று காரை நிறுத்த, இங்கே எல்லாம் எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று ஈஸ்வரி அடம்பிடிக்க பாக்கியா சமாதானப்படுத்தி சாப்பிட அழைத்து செல்கிறார்.
அதே நேரத்தில் வீட்டில் அமிர்தா சமையல் செய்து கொண்டிருக்க அந்த நேரத்தில் வரும் எழில் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications