மயூக்காக பாக்யா செய்த செயல்.. மனம் மாறும் ராதிகா.. கோபத்தில் ஈஸ்வரி.. பரபரப்பான தருணம்
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆகஸ்ட் 29ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் இரண்டாம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்யா வீட்டிற்கு மீண்டும் கோபி வந்த நிலையில் ஈஸ்வரி திட்டி அனுப்புகிறார்.

அதே நேரத்தில் ராதிகா குடும்பத்திற்காக பாக்யா சொன்ன வார்த்தையை கேட்டு ராதிகா மனம் மாறுகிறார் இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா தான் ட்ரிப் போக வேண்டும் என்பதற்காக கோபியை நம்பி இருந்த நிலையில், கோபி கடைசி நேரத்தில் மயூ வயதிற்கு வந்து விட்டதால் ராதிகா இனியாவுடன் போக கூடாது என்று மிரட்டி வைத்திருக்கும் நிலையில் என்ன முடிவு எடுக்க என்று தெரியாமல் கோபி திணறிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் இனியா கூட ட்ரிப் போனால் அப்படியே போய்விடுங்கள் திரும்பி எங்களை தேடி வராதீர்கள் என்று ராதிகா திட்டி இருக்கும் நிலையில் இனியாவிற்க்கு போன் செய்த கோபி மயூ வயதிற்கு வந்தது பற்றி சொல்லி இருக்கிறார் ஆனால் அதுபோல தன்னால் ட்ரிப்க்கு வர முடியாது என்று சொன்னதை கேட்டதும் இனியா கதறி அழுது இருந்தார்.
அதைத் தொடர்ந்து இனியாவுடன் ராதிகாவும் ஈஸ்வரியும் துணைக்கு போவதாக கூறி இருக்கின்றனர். இந்த நிலையில் இனி வரும் எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி மீண்டும் பாக்யாவின் வீட்டிற்கு வருகிறார். அதை பார்த்து ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு மெதுவாக அம்மாவிடம் அம்மா மயூ பெரிய பொண்ணு ஆகிட்டாமா, நீங்களும் அப்பாவும் வந்துட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லா இருக்குமா என்று சொல்ல, எந்த தைரியத்துல நீ எங்கள அங்க கூப்பிடறடா? என்று அவமானப்படுத்தி அனுப்புகிறார்.

பிறகு கிச்சனில் பாக்கியா வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கு வரும் ஈஸ்வரி எனக்கு என்னமோ அங்க போறது சரின்னு படல என்று ஈஸ்வரி சொல்ல, மயூக்காக நாம இதை செய்யணும் அத்தை என்று பாக்கியா சொல்ல, அடுத்த நாள் பங்க்ஷன் நடக்கும் போது ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் கோபியின் வீட்டிற்கு செல்கின்றனர். அதை பார்த்து மயூ நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் தாத்தா என்று சொல்லி ஆன்ட்டி வந்து இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
பிறகு மயூ பாக்யாவுக்கு போன் செய்து ஏன் ஆன்ட்டி நீங்க வரல என்று கேட்க, அதை கேட்டு ராதிகாவின் அம்மா கோபப்படுகிறார். ஆனால் அதை கண்டுகொள்ளாத மயூ நீங்க கொடுத்து அனுப்பின லட்டு நல்லா இருந்து என்று பாக்கியாவிடம் சொல்ல, நீ எப்போதும் சந்தோஷமா இருக்கணுமா என்று பாக்கியா கூறிக் கொண்டிருக்க ராதிகா சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.

இந்த நிலையில் இனி கோபி இனியாவை கழட்டி விட்டு மயூ பங்க்ஷனில் கலந்து கொண்டதால் இனியா என்ன மாதிரி முடிவெடுக்க போகிறார் என்றும், அதுபோல இனியாவுடன் பாக்யா ட்ரிப் போவதால் கோபி என்ன பிரச்சனை செய்ய இருக்கிறார் என்றும் இனிவரும் எபிசோட்டில் தெரியவரும்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications