அமிர்தாவை தேடி வந்த கணேஷ்க்கு எழில் பற்றி தெரிந்த உண்மை.. அதிர்ச்சி கொடுத்த ஈஸ்வரி.. திடீர் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் 7ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.

அதில் கணேசனுக்கு அமிர்தா எழிலை திருமணம் செய்து இருப்பது தெரிய வருகிறது.

Baakiyalakshmi Serial 7th of October 2023 promo and episode full update

அதே நேரத்தில் வீட்டில் பாக்கியாவை ஈஸ்வரி திட்டுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

இந்த நிலையில் எபிசோடின் ஆரம்பத்தில் ஹாஸ்பிடலில் செழியன் குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கிறார். அப்போது மாலினி போன் செய்து கொண்டிருக்க செழியன் போனை கட் பண்ணி கொண்டு இருக்கிறார். அதை தொடர்ந்து என்ன பாப்பா தூங்கிக்கொண்டே இருக்கு என்று சொல்ல அதற்கு ஜெனி நைட் 2 மணிக்கு வந்து பாரு நல்லா பிரஷா முழிச்சுக்கிட்டு இருக்கும் என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.

அதை தொடர்ந்து பாக்யா எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் என்று சொல்ல அதற்கு ஜெனி உடைய அம்மா முதலில் தயங்குகிறார்.பிறகு பாக்கியா உங்க வீட்டில் உங்க வீட்டுக்காரர் பக்கத்தில் இல்லை. ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் உடனே பார்ப்பதற்கு முடியாது. ஆனால் நாங்க வீட்டில் எல்லாரும் இருக்கிறோம். நாங்க பார்த்துக் கொள்வோம் என்று பேச அதற்கு ஜெனியின் அம்மாவும் சரி என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial 7th of October 2023 promo and episode full update

வீட்டிற்கு வந்த பாக்கியா ஜெனி நம்ம வீட்டுக்கு தான் வரப்போற என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி மட்டும் என்ன இவ்வளவு சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வர போறாளா என்று கேள்வி கேட்க அதற்கு பாக்யா நம்ம கூட இருந்தா எல்லாரும் நல்லா பாத்துக்கலாம் என்று சொல்ல, வீட்டில் இனியா செழியன் அமிர்தா என எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

அதைத்தொடர்ந்து கேன்டீன் காண்ட்ராக்ட் குறித்து கேட்க அதற்கு அந்த காண்ட்ராக்ட் நமக்கு கிடைக்கல என்று சொல்ல, அதற்கு ராதிகா எதுவும் உள்ளே புகுந்து பண்ணிட்டாளா? என்று ஈஸ்வரி கேள்வி கேட்க, இல்லை கோபி செய்த வேலை என்று சொல்ல வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதற்கு ஈஸ்வரி நீ கோபியை விவாகரத்து பண்ணாமல் இருந்திருந்தால் இதுவெல்லாம் நடந்திருக்காது. அவன் கூட இருக்கிற வரைக்கும் நிம்மதியா தானே இருந்தா, என்று பழியை தூக்கி பாக்யா மீது போட பாக்யா அதிர்ச்சி அடைகிறார். அதைத் தொடர்ந்து கணேஷ் அமிர்தாவை தேடி தெருவில் அலைந்து கொண்டிருக்க, அமிர்தாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று அவருடைய பக்கத்து வீட்டில் சொல்ல அதைக் கேட்டு அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்று கணேசன் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அமிர்தாவின் தோழி நீங்க இறந்து போயிட்டீங்கன்னு சொன்னாங்க. அதனால அமிர்தாவுக்கு எழிலுடன் கல்யாணம் முடிந்து விட்டது. அவங்க மாமியார் பேரு பாக்கியா, ஈஸ்வரி புட்ஸ் என ஒரு கேட்டரிங் கம்பெனி நடத்திட்டு இருக்காங்க என்று சொல்ல அதை கேட்டு அதிர்ச்சியான கணேசன் குழம்பிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+