பாக்கியலட்சுமி சீரியல் இப்போதைக்கு முடியாது.. இனி நடக்கப்போவது இதுதான்! ரகசியங்கள் உடைத்த பிரபலம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவு அடையப்போகிறதா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள், ஆனால் இப்போதைக்கு அந்த சீரியல் முடிவு அடைய போவது கிடையாது.. ஆனால் இனி இதுதான் நடக்கப்போகிறது என்றும் சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட்டது. அதுவும் பெண்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு ஏகபோக வரவேற்பு இருக்கிறது. ஒரு குடும்பப் பெண் தன்னுடைய சுய கௌரவம் மற்றும் திறமையை வெளிக்காட்டுவதற்காக பல்வேறு போராட்டங்களையும் அவமானங்களையும் சந்திக்கிறார்.

தன்னை தன்னுடைய குடும்பத்தினரே அவமானப்படுத்தி இருந்தாலும் அதிலிருந்து பாக்யா ஒவ்வொரு இடத்திலும் மீண்டு வந்து கொண்டே இருக்கிறார். இதனால் இந்த சீரியல் பெண்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது ஆனால் சில மாதங்களாக இந்த சீரியலில் கதை சுவாரஸ்யமாக இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
இந்த சீரியலுக்கு தூண் போல இருந்த ராமமூர்த்தியின் இறப்பிற்கு பிறகு கோபி பாக்யாவை பழிவாங்குவதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை செய்கிறார். ஆனால் கோபியை பற்றி எல்லாம் தெரிந்து பாக்கியா பக்கம் திரும்பிய பிள்ளைகள் மற்றும் மாமியார் கூட இப்போது மீண்டும் கோபி புராணம் பாட ஆரம்பித்து விட்டார்கள்.
இது பார்க்கும் ரசிகர்களை கடுப்பாக்கி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோபியாக நடிக்கும் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஐந்து வருடங்களாக பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வந்தீர்கள்.. அதற்கு ரொம்ப நன்றி.
கொஞ்ச நாளா நீங்கள் எதிர்பார்த்து இருந்த நிகழ்வு இப்போ நடக்கப் போகிறது. அது எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது. ஆனாலும் சூழ்நிலை எப்படி இருக்கும் போது அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறி இருந்தார். அதனால் இந்த சீரியல் முடிவடைய போகிறதா? என்ற கேள்விகள் எழுந்து வந்தது.
அதை தொடர்ந்து சதீஷ் அடுத்த நாளே இன்னொரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் இனியாவாக நடிக்கும் நேகா தனக்கு கொடுத்த கேரக்டரை கச்சிதமாக செய்து வருகிறார். அவர் சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் எனக்கு ஒரு பொண்ணுதான். அவர் பேசிய வார்த்தைகள் எல்லாம் கேட்டு போது எனக்கு பீல் ஆகிவிட்டது என்று இனியா நடிப்பை பாராட்டி இருந்தார்.

இப்படியான நிலையில் சமூக வலைதளத்தில் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக கோபி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் சொன்னதை எல்லோரும் தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வராது.
இந்த விஷயத்தை நான் சொன்னதாக எல்லாரும் சொல்லிட்டு இருக்கும்போது சேனல் தரப்பிலும், சீரியல் தரப்பிலும் என்னிடம் சண்டைக்கு வந்துருவாங்க. அதனால் இந்த பிரச்சனையை இத்தோடு விட்டுருங்க சீரியலில் இன்னும் நிறைய திருப்பங்கள் வர இருக்கிறது.
நீங்கள் கொஞ்ச நாட்களாகவே கோபி திருந்துங்க எல்லாரும் ஒன்றாக வாழுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறீங்க. அதுபோலத்தான் இனி நடக்கப் போகிறது. ஆனால் நான் பாக்கியாவோடு வாழப்போவதில்லை. எல்லோரும் சந்தோஷமாக வாழ போகிறோம் என்று சொல்லி இருக்கிறார். இதனால் பழையபடி கோபி மீண்டும் பாக்யா வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோபியை தேடி ராதிகாவும் வருவார். இவர்கள் மீண்டும் ஒரே வீட்டிற்குள் வாழப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications