பாண்டியன் ஸ்டோர் பிரபலங்களை சந்தித்த பாக்கியலட்சுமி கோபி.. திடீர்னு வந்த பிரச்சனை.. ஐடி போயிருச்சு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். இவர் இன்று பெண் ஒருவரோடு தான் செல்ஃபி எடுக்காததால் அவர் தனக்கு செய்வினை வைத்து விடுவேன் என்று மிரட்டுவதாக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அதே நேரத்தில் சதீஷின் இன்ஸ்டாகிராம் ஐடி சுமார் (3 மணி அளவில்) ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.
பொதுவாக வில்லன் என்றால் எல்லோரும் அவரை தான் திட்டி இருப்பார்கள். ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் வரும் கோபி கேரக்டர் மட்டும் வில்லத்தனம் செய்தாலும் பலருடைய பாராட்டுக்கள் மற்றும் அனுதாபத்தை பிடித்து விடுகிறார். பாக்கியாவிற்க்கு துரோகம் செய்துவிட்டு கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் பாக்கியா மீது அவருக்கு இன்னும் பொறாமை தீரவில்லை.

தனக்கு பிடிக்காத பெண்ணை அம்மாவும் அப்பாவும் திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று அந்த திருமணமே வேண்டாம் என்று மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு கோபி அவரை டைவர்ஸ் செய்து விட்டு பிடித்த பெண்ணான ராதிகாவை திருமணம் செய்து இருந்தாலும் இந்த வாழ்க்கையிலும் கோபி நிம்மதியாக இல்லை. கோபிக்கு இரண்டு பெண்களால் சீரியலில் பிரச்சனை இருப்பது போதாது என்று இப்போது நிஜ வாழ்க்கையிலும் பெரிய பிரச்சனை வந்திருக்கிறது.
அதாவது இவர் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கோவிலுக்கு சென்று இருந்த நிலையில் அங்கு ஒரு பெண் இவரோடு செல்ஃபி எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தாராம். ஆனால் அப்போது சதீஷ் மறுப்பு தெரிவித்துவிட்டு வந்துவிட்டாராம். ஆனால் அந்த பெண் வேறு யாரிடமோ செல்போன் நம்பர் வாங்கி சதீஷ்க்கு போன் போட்டு தொந்தரவு செய்வதாகவும் அந்த எண்ணையே இப்போது பிளாக் செய்து விட்டதால் வீட்டு முகவரியை கண்டுபிடித்து வீட்டிற்கு வந்து உங்களுக்கு செய்வினை வைத்து விடுவேன் என்று எலுமிச்சை பழத்தில் குங்குமம் தடவி தன்னை மிரட்டுவதாகவும் அந்த கம்ப்ளைண்டில் சதீஷ் கூறி இருக்கிறார்.
இதுதான் இப்போது இணையத்தில் மீம் கண்டண்டுகளாக மாறி இருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் இவர் கோபியாக பண்ணும் அவஸ்தையை பார்த்து இவரை திட்டியவர்கள் எல்லாரும் இப்போது ஐயோ பாவம் என்று சொல்லி வருகிறார்கள். நடிகர் எஸ்ஜே சூர்யா எப்படி நடிப்பு அரக்கனாக சினிமாவில் இருக்கிறாரோ அதுபோலத்தான் சின்னதிரையில் சதீஷுக்கும் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் பட்டம் கொடுத்து அவரை பாராட்டி வருகின்றனர்.

கடந்த வருடம் விஜய் டிவி அவார்ட் ஃபங்ஷனில் கூட அவருக்கு அவார்டு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அவருக்கு நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு பிரச்சனையா என்பது பலருடைய வருத்தமாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த பிரச்சனை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சதிஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று இரண்டு போஸ்ட் போட்டு இருக்கிறார்.
அதில் ஒரு போஸ்டில் கண்ணதாசன் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு “தமிழ் இருக்கும் வரை உனக்கு மரணம் இல்லை ஐயா, சினிமா அழிந்தாலும் உனக்கு அழிவு இல்லை என்றும் உங்களின் தாசன் நான்” என்று கூறி இருக்கிறார். அதுபோல இன்னொரு பதிவு பாண்டியன் ஸ்டோர் சீரியல் முதல் பாகத்தில் நடித்த கண்ணன் ஜீவா போன்றவர்களோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் பிரபலங்களோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்த நிலையில் சில மணி நேரங்களில் அவருடைய இன்ஸ்டாகிராம் ஐடி ஹேக் ஆகி இருக்கிறது. இது எதனால் ஏற்பட்டது என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications