எனக்கு அந்தப் பிரச்சனை..அதனால் வந்த வினை..இப்படி பண்ணாதீங்க.. பாக்கியலட்சுமி ராதிகாவின் உருக்கம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை ரேஷ்மா ராதிகா கேரக்டரில் நடித்து வருகிறார்.
அவர் சமீபத்தில் தன்னைப் பற்றி எழுந்து வரும் உருவ கேலி குறித்த கமாண்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பலர் என்னுடைய உதட்டை பார்த்து ஆபரேஷன் செய்து இருக்கீங்களா என்று கேட்கிறார்கள் என்றும், அது குறித்த விளக்கமும் அந்த வீடியோவில் ரேஷ்மா கொடுத்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விட்டனர். அந்த வகையில் சமீபத்தில் இந்த சீரியலில் ராதிகாவாக நடித்துக் கொண்டிருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியும் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்திருக்கிறார்.
நெகட்டிவ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தாலும் ராதிகா மீது அனைவருக்கும் அனுதாபம் தான் வருகிறது. கோபியை நம்பி இப்படி ஏமாந்து போய்விட்டாரே என்று பலர் பீல் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் பாக்யா மற்றும் ராதிகா இருவரும் நட்பாக இருக்கும்போது ராதிகா செய்த உதவிகளை கூட பலரும் பாராட்டியுள்ளனர். ஆனால் இப்பொழுது ராதிகாவும், பாக்கியாவும் சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் பலரும் ராதிகா பாவம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் ஒரு சில ரசிகர்கள் இவர் நிஜத்தில் உதட்டில் சர்ஜரி செய்திருக்கிறாரா? அல்லது லிப்ஸ்டிக் போட்டு தான் இவருடைய உதடு வீங்கி போய் விட்டதா? எதற்கு இவ்வளவு பெருசாக இருக்கிறது? அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரேஷ்மா இருக்கும்போது இப்படி எல்லாம் இல்லை. ஆனால் இப்போது ரொம்பவே கவர்ச்சியாக உடல் உறுப்புகள் பெரியதாக தெரிகிறது. அதனால் எல்லாமே இவர் சர்ஜரி செய்து தான் பெரியது ஆக்கியிருக்கிறாரா? என்று தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்கும் வகையில் சமீபத்தில் ரேஷ்மா தன்னுடைய instagram பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் உருவகேலி என்பதை பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள். அது உங்களுக்கு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் அதை கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்க மாட்டீங்களா? நான் பொதுவா எந்த நெகட்டிவ் கமெண்ட் களுக்கும் கவலைப்பட மாட்டேன். ஆனால் சிலர் இந்த மாதிரி தப்பான கமண்டுகளை கேட்டு மனதொடிந்து போய் விடுகிறார்கள்.
எல்லோரும் என்னிடம் நீங்க ஆபரேஷன் செய்து உதட்டை பெருசு பண்ணி இருக்கீங்களா? என்று கேட்கிறார்கள். அப்படி செய்து இருந்தாலும் அது என்னுடைய விருப்பம். எனக்கு பிடித்ததை நான் பண்ணி இருக்கேன். அது உங்களுக்கு என்ன கஷ்டம் வந்தது என்று தன்னைப் பற்றி நெகட்டிவ் ஆக கமெண்ட் போடுபவர்களுக்கு பதிலடி கொடுத்த படியே மேலும் அவர் பேசி இருக்கிறார்.
அதில் இப்போ உள்ள சூழ்நிலையில் சர்ஜரி எல்லாம் பெரிய விஷயமே இல்லை. நடிகைகள் நாங்க பண்றத விட சாதாரண மக்கள் கூட அதிகமாக சர்ஜரி பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஆனால் அது பற்றி வெளியே தெரியவில்லை எனக்கு பிடிச்ச மாதிரி நான் இருக்கிறேன். அவ்வளவுதான் அதோடு நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த மாதிரி இப்ப இல்லை. ரொம்ப வெயிட் போட்டுட்டேன்னு எல்லாரும் சொல்றாங்க. ஆமா, அதுக்கு காரணம் எனக்கு உடம்புல சில பிரச்சினை ஏற்பட்டது.
நான் ரொம்ப பிசியாகவே நடிச்சிட்டு இருக்கேன். தூங்குற நேரம் ரொம்பவே குறைவு. தொடர்ந்து ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் போய்கிட்டு இருக்கிறதுனால என்னால தூங்க கூட முடியல. அதனாலயே எனக்கு உடம்பு கூடிடுச்சி அதை வீட்டில் இருந்து சரி செய்யற அளவிற்கு எனக்கு இப்போதைக்கு நேரம் இல்லை. அதுபோல உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நீங்க சோர்ந்து போய்விடாதீங்க பல காமெடி நிகழ்ச்சிகளை பாருங்க.

நான் என்ன பத்தி அதிகமா நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டு இருந்தாலும் அதை கண்டுக்காமல் இப்படி இருக்கிறதுக்கு காரணமே என்னோட மனசு அடிக்கடி சந்தோஷமா மாத்திக்கிறது தான். சில மாதங்களுக்கு முன்பு நான் ரொம்பவே மனதொடிந்து போயிருந்தேன் அந்த நேரத்தில் தான் எனக்கு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைத்தது.
அந்த இயக்குனர் யாருன்னு கூட மொதல்ல எனக்கு தெரியாது. அவர் என்கிட்ட கால் பண்ணி கேட்கும் போது எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு. பிறகு இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு ரொம்பவே சந்தோஷமா சிரிச்சேன். அதை என்னால மறக்கவே முடியாது. இந்த நிலையில் இப்போது அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வருவது கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு என்றும் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications