பாக்யாவுக்கு மீண்டும் வரும் சிக்கல்.. இனியாவுக்கு போன் பண்ணிய சிவகார்த்திகேயன் மேனேஜர்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 16ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் அமிர்தா மற்றும் எழில் குழந்தை விஷயத்தில் எடுத்த முடிவு பற்றி அமிர்தாவின் அம்மா புது பிரச்சனையை கிளப்பி விடுகிறார்.
மறுபக்கத்தில் விமல் இனியாவின் போன் நம்பரை கண்டுபிடித்து அவரை இம்ப்ரஸ் செய்ய பார்க்கிறார். அதுபோல பாக்கியா சொன்ன வார்த்தையை கேட்டு பழனிச்சாமி ரசித்தபடியே இருக்க போலீஸிடம் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பழனிசாமி தன்னுடைய பிறந்தநாளுக்கு சமைத்ததற்காக பாக்யாவுக்கு பணத்தை கொடுக்க பாக்கியா அதை மறுத்துவிடுகிறார். ஆனாலும் பழனிச்சாமி கட்டாயப்படுத்தி பணத்தை கொடுக்கும் போது பாக்கியா அன்புக்கு விலை பேசாதீங்க சார் என்று சொல்ல அதற்கு கேட்டு பழனிச்சாமி என்ன சொன்னீங்க என்று கேட்க மீண்டும் பாக்யா அன்புக்கு விலை பேசாதீங்க சார் என்று சொன்னதும் வெட்கப்படுகிறார்.
மறுபக்கத்தில் செல்வி இருக்கும் இடத்திற்கு சென்ற விமல் அங்கு அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தபடியே போனை எடுத்து இனியாவின் நம்பரை நோட் பண்ணி கொள்கிறார். பிறகு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதை அடுத்து காரில் செல்லும் பழனிச்சாமி பாக்கியா சொன்ன வார்த்தையை நினைத்தபடியே சொல்ல ரோட்டில் இருக்கும் சிக்னலையும் கவனிக்காமல் காரை ஓட்டி செல்கிறார்.
அப்போது இதை கவனித்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி பைன் கட்ட சொல்ல, போலீஸ் பணத்தை கேட்டதும் பழனிச்சாமி அன்புக்கு விலை பேசாதீங்க சார் என்று சொல்ல, அது புரியாமல் போலீஸ் என்ன என்னவென்று மீண்டும் மீண்டும் கேட்க உங்களுக்கு அதை சொன்னா புரியாது சார் என்று வெட்கப்பட்ட படியே பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து போகிறார்.
அடுத்ததாக இனியாவுக்கு போன் போட்ட விமல் சிவகார்த்திகேயனின் மேனேஜர் பேசுகிறேன் என்று இனியாவை கலாய்க்கிறார். பிறகு அதை நம்பாத இனியா போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து விடுவேன் என்று மிரட்ட, விமல் எதிரே வந்து ஷாக் கொடுக்கிறார். அதோடு நான் சொன்ன மாதிரியே உங்களுடைய போன் நம்பரை கண்டுபிடிச்சிட்டேன், காலேஜையும் கண்டுபிடிச்சிட்டேன் என்று இனியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் அமிர்தாவின் அம்மா பாக்கியா வீட்டிற்கு வருகிறார். அங்கு ஈஸ்வரி அமிர்தாவிடமும், எழிலிடமும் சரியாக பேசாததை கவனித்து அமிர்தாவிடம் ஏன் மாப்பிள்ளையோட பாட்டி சரியா உன்கிட்டயும் மாப்பிள்ளை கிட்டயும் பேச மாட்டேங்கிறாங்க என்று கேட்க, அதற்கு அமிர்தா குழந்தை விஷயத்தை பற்றி சொல்கிறார்.
அதற்கு அமிர்தாவின் அம்மாவும் நானும் இதைத்தான் சொல்லுறேன். நீ ஒரு குழந்தையை பெத்துக்கோ. அப்பதான் உனக்கும் இந்த குடும்பத்துக்கும் ஒரு பிடிப்பு இருக்கும் என்று சொல்கிறார். அதற்கு அமிர்தா அவர்தான் இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்கிறார் என்று ரகசியத்தை உடைக்க இந்த விஷயத்தை ஈஸ்வரி இடம் அமிர்தாவின் அம்மா சொல்கிறார். அதாவது அமிர்தாவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறார். ஆனால் மாப்பிள்ளை தான் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று சொல்லுகிறார் என்று சொல்ல அதை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications