பாக்கியலட்சுமி: ஈஸ்வரி பற்றிய உண்மைகளை உடைத்த எழில்.. பாக்யா இப்படி கண்டிஷன் போட்டுட்டாங்க?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் எழிலுக்கும் ஈஸ்வரிக்கும் வாக்குவாதம் ஏற்பட ஈஸ்வரி எழிலை வீட்டை விட்டுப் போக சொல்ல பாக்கியா முக்கிய கண்டிஷன் போட்டு இருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி மற்றும் எழில் கோபமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். எழிலை எல்லோரும் சமாதானம் செய்ய பார்க்கின்றனர். ஆனாலும் இருவருக்கும் மேலும் வாக்குவாதம் ஏற்படுகிறது. கணேஷ் திரும்பி வந்து என் பொண்டாட்டியையும் குழந்தையையும் அனுப்பிவைன்னு சொன்னா அனுப்பி வச்சுருவியா? இந்த வீட்டுக்குன்னு நீ என்ன பண்ணி வச்சிருக்க? வேலைக்கு போக மாட்ட, குழந்தையும் பெத்துக்க மாட்டேங்குற நீ என்ன வாழ்க்கை வாழுற என்று ஈஸ்வரி கோபப்பட எழிலுக்கு ஆதரவாக பாக்கியாவும் ராமமூர்த்தியும் ஈஸ்வரியிடம் பேசுகின்றனர்.

அதோடு எழிலை சமாதானம் செய்து பாக்கியா கூட்டிட்டு போக ஈஸ்வரி அப்போ எனக்கு மரியாதை அவ்வளவுதானா? என்று கேட்க, ராமமூர்த்தி எழிலுக்கு நேரம் சரியில்ல, இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாயிடும் என்று சொல்ல ஈஸ்வரி நேரம் இவளுக்கு தான் சரியில்லை என்று அமிர்தாவை சொல்கிறார். அமிர்தா ராசி இல்லாதவ அவ வந்ததால் தான் எழில் வாழ்க்கை இப்படி நாசமா போயிடுச்சு, நம்ம சொன்ன பொண்ணை கட்டியிருந்தான்னா இன்னைக்கு வீடு வாசல் காருனு எழில் சந்தோசமா இருந்திருப்பான்.
அமிர்தா வாழ்க்கையில் எதுவுமே உருப்படியா நடக்கல என்று ஈஸ்வரி திட்ட எல்லாரும் ஈஸ்வரியை தடுத்து நிறுத்த முயற்சி செய்ய ஈஸ்வரி இன்னும் கோபமாகி எழிலோட வாழ்க்கை நல்லா இல்லாமல் போக அமிர்தா தான் காரணம் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை கேட்டு கோபமான எழில் அமிர்தா பற்றி தப்பா பேசாதீங்க என்று கோபப்பட இன்னொரு வார்த்தை ஏதாவது பேசுனா நான் ஏதாவது சொல்லிடுவேன் என்று சொல்ல ஈஸ்வரி மேலும் கோபப்படுகிறார்.

அதற்கு எழில் நான் படம் பண்ணாததுக்கு காரணம் அமிர்தா கிடையாது, நீங்க மட்டும் தான் என்று சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி ஆகிறார். நான் காரணமா என்று கேட்க, ஆமா நீங்க தான் காரணம். நான் கதையை சொல்லி படம் எடுக்கும் நேரத்தில் உங்களை தேடி போலீஸ் வீட்டுக்கு வந்தது தான் காரணம். நீங்க கொஞ்ச நேரம் யோசித்து உங்க பிள்ளை கூட போகாம இருந்திருந்தால் நானும் படம் எடுத்திருப்பேன். நீங்க சொன்னது எல்லாம் நடந்து இருக்கும் என்று கோபப்பட்டு பேச, ஈஸ்வரி இதை எல்லாம் கேட்டு அதிர்ச்சியாக நிற்கிறார்.
கடைசியில் பழியை தூக்கி என் மேல போட்டுட்டியா? என்று ஈஸ்வரி கேட்க, நான் யார் மீதும் பழியை போடல நடந்ததை தான் சொல்றேன் என்று சொல்கிறார். நீங்கள் சொன்ன விஷயம் தப்பு கிடையாது அதை சொல்லும் விதம் தான் தப்பு என்று எழில் சொல்ல, அமிர்தா என்னால தான் இங்கே எல்லா பிரச்சனையும் வருது நான் நிலாவை கூட்டிட்டு போயிடுறேன் என்று சொல்ல, ஜெனி நீ ஏன் போகணும் என்று தடுத்து நிறுத்துகிறார்.

இதைப் பார்த்து ஈஸ்வரி, என்னை நீங்க நாடகம் போடுறீங்களா என்று திட்டுகிறார். அதோடு பெரியவர்களின் பேச்சை கேட்டு இருப்பதென்றால் இந்த வீட்டில் இரு அப்படி இல்லை என்றால் இந்த வீட்டை விட்டு போ என்று எழிலிடம் ஈஸ்வரி திட்ட, நான் உண்மையாகவே போயிடுவேன் என்று எழில் சொல்கிறார். ஆனாலும் ஈஸ்வரி பிடிவாதமா நீ இந்த வீட்டை விட்டு வெளியே போனால் தான் வாழ்க்கையே நடத்துவது எவ்வளவு கஷ்டம்னு உனக்கு தெரியும்.
நிலாவுக்கு ஒருவேளை சாப்பாடு கொடுக்க முடியுமா? எல்லா செலவையும் சமாளிக்க முடியுமா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, இதையெல்லாம் பார்த்து கோபமான பாக்கியா நீ இந்த வீட்டை விட்டு போக எழில்... என்று சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications