பாக்கியலட்சுமி: வீட்டை விட்டு போகும் எழில்.. செழியன் பாக்கியாவிடம் சொன்ன வார்த்தை.. கதறி அழுத ஈஸ்வரி
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஈஸ்வரி, எழிலும் அமிர்தாவும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடங்கிய பிரச்சனையில் பாக்கியா எழில் வீட்டை விட்டு போக சொல்ல, அதனால் மொத்த குடும்பத்தினரும் கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் சில தினங்களாகவே அழுகாச்சி நிகழ்ச்சிகள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எழிலும் அமிர்தாவும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி அமிர்தாவை திட்டிக்கொண்டிருந்தார். அதோடு எழில் வாழ்க்கையில் இத்தனை பிரச்சனைகள் நடப்பதற்கு காரணமும் அமிர்தா தான் என்று அமிர்தாவை திட்ட அதனால் கோபமான எழில், ஈஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதை எல்லாம் பார்த்து கோபமான ஈஸ்வரி உன்னால் இந்த வீட்டை விட்டு வெளியே போனால் ஒரு நாள் கூட தாக்கு பிடிக்க முடியாது. நீ இந்த வீட்டில் இருக்கிறதால்தான் இவ்வளவு சொகுசா இருக்கிற என்று திட்டியதால் பாக்யா நீ இந்த வீட்டை விட்டு போய்விடு எழில் என்று சொல்லி இருந்தார். அதற்கு கோவப்பட்ட ஈஸ்வரி நானும் அவனும் பேசிட்டு இருக்கும்போது நீ எதற்காக இடையில் வந்து அவனை வீட்டை விட்டு போக சொல்லுற என்று பாக்கியா மீது கோபப்பட மொத்த குடும்பமும் பாக்கியா எடுத்த முடிவு தவறு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பாக்கியா நமக்குன்னு ஒரு குடும்பம் இருக்கிறதே சந்தோஷத்துக்கு தானே ஆனா எழிலுக்கு இப்போ சந்தோஷமும் இல்ல, நிம்மதியும் இல்லை. அவங்க அவங்க வழியை பார்த்துட்டு போறது தான் சரி என்று சொல்ல ஈஸ்வரி மீண்டும் இத்தனை பிரச்சனைக்கும் காரணம் அமிர்தா தான் என்று அமிர்தா மீது பழியை போட இதனால் பொறுமை இழந்த எழில் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட நான் சொன்னது உனக்கு புரியலையா? எழில் வீட்டை விட்டு போ என்று பாக்யா சொல்கிறார்.

அதற்குப் பிறகு ஈஸ்வரியை ராமமூர்த்தி ரூமுக்குள் அழைத்துச் சென்று கதவை மூடி திட்டுகிறார். அந்த அமிர்தா பொண்ணு மேல எதற்கு அபாண்டமா நீ பழி போடுற என்று சொல்ல, ஏற்கனவே அந்த கணேஷ் வந்து பிரச்சனை பண்ணுனது உங்களுக்கெல்லாம் மறந்து போயிடுச்சா? இவர்களுக்கு இன்னும் ஒரு குழந்தை இல்லன்னா அவன் மீண்டும் வந்து அமிர்தாவைவும் என் குழந்தையும் எனக்கு வேணும்னு கூட்டிட்டு போயிடுவான்.
அதுக்காகத்தான் நான் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கிறேன். ஏற்கனவே எழில் என்னால தான் படம் பண்ண முடியலைன்னு என் மேல பழியை போட்டுட்டான். இப்போ இந்த பாக்கியா எழிலை வீட்டை விட்டு போக சொல்லி அந்த பழியையும் என் மேல போடுறீங்களா என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் எழில் ரூமிற்கு சென்று தன்னுடைய துணிகளை எல்லாம் எடுத்து வைக்க அமிர்தா கோபத்தில் எதுவும் செய்ய வேண்டாம் என்று கெஞ்சி கொண்டிருக்கிறார்.

ஆனாலும் எழில் அம்மாவே சொல்லிட்டாங்க அவங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் நாம இந்த வீட்டை விட்டு போவது தான் சரி என்று உறுதியாக தன்னுடைய முடிவில் இருக்கிறார். மறுபக்கம் பாக்யாவிடம் செழியன், ஜெனி, இனியா என எல்லோரும் எழிலை வீட்டை விட்டு போக வேண்டாம்னு சொல்லுங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பாக்கியா அவன் வீட்டை விட்டு போறது தன் சரியா இருக்கும் அவன் எங்கேயாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார்.
அந்த நேரத்தில் நிலா பாப்பா அங்கே வந்து நாங்க ஊருக்கு போக போறோம் அப்பா டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்காங்க என்று சொல்ல, செழியன், இனியா எல்லாரும் அழுது கொண்டிருக்கின்றனர். பெரியப்பா நீங்களும் வரிங்களா என்று செழியனிடம் நிலா கேட்க செழியன் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். பாக்கியா இதை எல்லாம் பார்த்து கண்கலங்கினாலும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications