பாக்கியலட்சுமி: வீட்டை விட்டு போன எழில்.. தேடி போய் கோபி சொன்ன வார்த்தை.. இனி நடக்கப் போவது இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரைக்கும் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கியா சொன்னதால் வீட்டை விட்டு எழில் கோபமாக வெளியே சென்று இருக்கிறார். இதை தெரிந்து கொண்ட கோபி எழிலை சந்திக்க சென்றிருக்கிறார். அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே எழில் மற்றும் அமிர்தா ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி பிரச்சனை செய்திருந்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட அதில் எழிலை மட்டுமல்லாமல் ஈஸ்வரி அமிர்தாவையும் தரக்குறைவாக பேசுகிறார். அப்போது எழில் அமிர்தாவுக்காக கோவப்பட அது ஈஸ்வரி மற்றும் எழிலிடையே வாக்குவாதமாக வெடிக்கிறது.

Television Baakiyalakshmi Serial vijay TV

இதை பார்த்து கோபமான பாக்கியா எழிலை வீட்டை விட்டு போக சொல்ல, மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். ஆனாலும் பாக்கியா சொன்னதை தட்டாமல் எழில் அமிர்தாவை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார். இத்தனை பிரச்சனைக்கும் காரணமான ஈஸ்வரி இந்த பழியையும் வழக்கம்போல பாக்கியா மீது போட்டு இருக்கிறார். இந்த நிலையில் நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்று வெளியான ப்ரோமோவில் எழில் மற்றும் அமிர்தா ஒரு லாட்ஜில் தங்கி இருக்கின்றனர். அந்த நேரத்தில் கோபி இனியாவிற்க்கு போன் போட்டு பேசுகிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

அப்போது இனியாவின் குரல் சோகமாக இருப்பதை வைத்து வீட்டில் எதுவும் பிரச்சனையா? என்ன ஆச்சு என்று கோபி விசாரிக்க, அப்போது இனியா வீட்டில் நடந்த விஷயத்தை பற்றி சொல்ல, கோபி அதிர்ச்சி ஆகிறார். உங்க அம்மா என்ன நெனச்சி இருக்கா... இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பண்ணுவாளா? என்று கோபப்படுகிறார். பிறகு அமிர்தாவுக்கு கோபி போன் போட, நாம இங்கே இருக்கும் விஷயத்தை பற்றி சொல்ல வேண்டாம் என்று எழில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஹோட்டல் கதவு தட்ட படுகிறது.

Television Baakiyalakshmi Serial vijay TV

வாசலில் கோபி நிற்பதை பார்த்ததும் எழிலும் அமிர்தாவும் அதிர்ச்சி அடைகின்றனர். ரூமிற்குள் வந்த கோபி உங்க அம்மாவுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம பெத்த பையனை வீட்டை விட்டு வெளியே போக சொன்னா வீட்டுல யாருமே தடுக்கலையா? அவ்வளவு பெரிய வீட்டை விட்டு இந்த மாதிரி ஹோட்டலில் வந்து தங்குவதற்கு உங்களுக்கு என்ன தலையெழுத்தா என்று கேட்க, எழில் எதுவும் பேசாமல் நிற்கிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

பிறகு கோபி நிலாவிற்கு சாக்லேட் கொடுத்து பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் இனி எழில் ஈஸ்வரி போல கோபி வீட்டிற்கு போகப் போகிறாரா? அல்லது கோபியை எதிர்த்து பேசி வெளியே அனுப்பி விட்டு தனியாக கஷ்டப்பட போகிறாரா? என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+