பாக்கியலட்சுமி: மீண்டும் வந்த எழிலிடம் ஈஸ்வரி கேட்ட கேள்வி.. கோபத்தில் பாக்கியா.. இப்படி ஆகிடுச்சு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வீட்டை விட்டு வெளியே போன எழில் மீண்டும் பாக்யா குடும்பத்தோடு வந்து சேர்ந்து இருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. கடந்த வாரத்தில் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எழிலிடம் ஈஸ்வரி பிரச்சனை செய்திருந்தார். ஆனால் எழில் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தான் ஒரு படத்தை இயக்கி வெற்றி பெற்ற பிறகுதான் குழந்தை பெற்றுக் கொள்வேன் என்று சொல்லி இருந்தார்.

அதற்கு உன்னுடைய வாழ்க்கையில் எதுவும் சரிப்பட்டு வராததற்கு காரணமே அமிர்தா தான். அமிர்தா வந்த பிறகுதான் உனக்கு தோல்விகள் வந்து கொண்டிருக்கிறது. உன்னால் படம் பண்ண முடியாது, நீ வேறு வேலை பார்க்கப் போ என்று ஈஸ்வரி திட்டி இருந்த நிலையில் அமிர்தா என்னுடைய வாழ்க்கை அழிவதற்கு காரணம் அல்ல, நீங்க தான். நான் கதை சொல்ல போக ரெடியாக இருந்த நேரத்தில் தான் உங்கள் மீது ராதிகாவின் அம்மா போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்.

அப்போது போலீஸ் வீட்டிற்கு வந்ததால் தான் என்னால் கதை சொல்ல முடியாமல் போய்விட்டது என்று எழில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இவர்கள் இருவருடைய வாக்குவாதத்தை பார்த்து பாக்கியா எழிலை வீட்டை விட்டு போக சொல்லி இருந்தார். இதனால் எழில் அமிர்தா மற்றும் நிலாவை கூட்டிக்கொண்டு லாட்ஜ் ஒன்றில் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் எழில் வீட்டிற்கு வரவேண்டும் என்று எல்லோரும் ஆசைப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

ஆனால் பாக்கியா மட்டும் எழில் வெற்றி பெற்ற பிறகு தான் வீட்டிற்கு வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ராமமூர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பாக்கியா ஏற்பாடுகள் செய்திருந்தார். முதலில் ராமமூர்த்தி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்த நிலையில் ஈஸ்வரி அவரை சமாதானம் செய்திருக்கிறார்.
இந்த நிலையில் வரும் நாட்களுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோவிலில் பிரம்மாண்டமாக ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். அந்த நேரத்தில் மட்டும் வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று ஃபீல் பண்ண அப்போது எழில் அமிர்தாவை கூட்டிக்கொண்டு கோவிலுக்கு வருகிறார். அப்போது ஈஸ்வரியை பார்த்து என்ன ஈஸ் வெட்கமா என்று கேட்கிறார்.

அப்போது எழில் முகத்தில் கை வைத்து ஈஸ்வரி ரொம்ப சந்தோசம்டா என்று சந்தோஷப்பட, ராமமூர்த்தி எழிலை கட்டிப்பிடித்துக் கொள்கிறார். இதையெல்லாம் பார்த்து பாக்கியா அதிர்ச்சியில் நிற்கிறார். இதனால் எழில் எதற்காக இந்த வீட்டுக்கு வந்த என்று பாக்யா திட்டப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எழில் வாழ்க்கையில் ஜெயித்த பிறகுதான் வீட்டிற்குள் வருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பாக்கியா எழில் பங்ஷனுக்கு வந்திருக்கும் நிலையில் என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த ப்ரோமோ வெளியானதை பார்த்ததும் ரசிகர்கள் இப்படியே இந்த சீரியலுக்கு சுபம் போட்டால் நன்றாக இருக்கும் என்று கலாய்த்து இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் போனவாரம் தான் எழிலை வீட்டை விட்டு போடா என்று துரத்தி அடித்து விட்டு இப்போ நீ வீட்டிற்கு வந்தது சந்தோஷம் என்று பேசுறாங்க. இவங்களுக்கு வேற கதையே இல்லையா? என்றும் அலுத்துக் கொள்கிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க உங்க கமெண்ட்டை தட்டி விடுங்க.












Click it and Unblock the Notifications