பாக்கியலட்சுமி: போனை பார்த்து அதிர்ச்சியான கோபி.. ஈஸ்வரி கேட்ட கேள்வி.. ரசிகர்கள் நினைத்தது நடந்தது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராமமூர்த்தியின் பிறந்தநாள் ஃபங்க்ஷனுக்கு வந்த கோபி பாக்கியாவை பார்த்து கடும் கோபமடைந்த நிலையில் ஈஸ்வரி கோபியை அசிங்கப்படுத்துகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா ஒரு செயின் வாங்கிக் கொண்டு வந்து ராமமூர்த்தியிடம் கொடுத்து அதை அத்தைக்கு போட்டு விடுங்க என்று சொல்ல, ராமமூர்த்தியும் அப்படியே செய்கிறார். பிறகு எல்லோரும் ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரியிடம் ஆசிர்வாதம் வாங்குகின்றனர். இதை எல்லாம் கூட்டத்தில் நின்றபடி கோபி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது கீழே இருந்த பழனிச்சாமி எழுந்து மேடைக்கு வந்து என்னையும் ஆசீர்வாதம் பண்ணுங்க என்று ஆசீர்வாதம் வாங்க, அதை பார்த்து கோபி கோபப்படுகிறார். பிறகு மேடையில் எல்லோரும் டான்ஸ் ஆடி சந்தோஷமாக இருக்கின்றனர். அவர்களை போட்டோ எடுத்து கொண்டு இருப்பதை பார்த்து கோபி தன்னுடைய ஃபோனில் போட்டோ எடுக்கிறார். அதோடு எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது பாக்யாவின் முகத்தை பார்த்ததும் கோபியின் கோபம் மேலும் அதிகமாக மாறுகிறது.
பிறகு எல்லோரும் வரிசையாக மேடைக்கு வந்து கிப்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி தன்னுடைய தோழி ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மேடைக்கு வந்த கோபி தான் கொண்டு வந்த கிஃப்ட்டை கொடுத்து தன்னையும் ஆசீர்வாதம் பண்ண சொல்ல, ராமமூர்த்தி எழுந்து விடுகிறார். மேலும் நீங்க ஆசிர்வாதம் பண்ணுங்க நான் உடனே போயிடுவேன் என்று கெஞ்ச, அதற்கு ராமமூர்த்தி கோபி கொண்டு வந்த கிப்ட்டை பிடுங்கி தூக்கி எறிந்து விடுகிறார்.

பிறகு ராமமூர்த்தி மேடையில் இருந்து இறங்கி போனதும் ஈஸ்வரி தனியாக மேடையில் நின்று கொண்டிருக்க கோபி அவரிடம் தன்னை மன்னித்து விடும்படி கெஞ்சி ஆசீர்வாதம் செய்ய சொல்ல, அதற்கு ஈஸ்வரி கோபப்படுகிறார். அழகான குருவிக்கூடு மாதிரி இருந்த வீட்டை நீதான் நாசம் பண்ணுன... நீ உன்னுடைய சந்தோசம் தானே முக்கியம்னு போன? நீ எப்பவாவது அம்மா, அப்பா, பிள்ளைகள் யாரையாவது கவனிச்சி இருக்கியா?
நீ இந்த வீட்டை விட்டு வெளியே போன பிறகு எங்களை பொறுப்பா கவனிச்சுக்கிறது பாக்கியா தான். உனக்கு யாரு மேலையும் உண்மையான பாசம் கிடையாது என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். உன்னை நம்பி நான் வந்து பட்ட பாடு போதும். நீ எவ்வளவோ தப்பு பண்ணும் போதும் உன் மேல இருந்த பாசத்தால் நான் எல்லாவற்றையும் மறந்து உன் பக்கம் நின்றேன்.

ஆனால் நீ என்னை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு பண்ணிட்ட. நீ பண்ணுன வேலையால்தான் உன் குழந்தைகள் கூட அவர்களுடைய வாழ்க்கையிலும் கஷ்டப்படுது. எல்லாத்துக்கும் காரணம் நீதான் என்று ஈஸ்வரி திட்டிக் கொண்டிருக்க கோபி எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து நிற்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications