பாக்கியலட்சுமி: செல்வியிடம் ராமமூர்த்தி கடைசியாக சொன்ன வார்த்தை.. எழிலுக்கு தெரிய வந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராமமூர்த்தி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு வீட்டில் எல்லோரிடமும் கண்கலங்க உருக்கமாக பேசுகிறார். அதே நேரத்தில் அமிர்தா மூலமாக எழிலுக்கு பணம் கிடைக்கிறது.
இந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராமமூர்த்தி கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகு எல்லாரையும் உட்கார வைத்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி பேசியது போதும் நேரம் ஆகிவிட்டது போய் தூங்க போங்க என்று எல்லாரிடமும் சொல்ல, அதற்கு ராமமூர்த்தி இன்னும் கொஞ்ச நேரம் பேசணும்னு ஆசைப்படுறேன், ஆனா நீ எல்லாரையும் போக சொல்லுவியா? எல்லாரும் இங்கே இருங்க இன்னும் கொஞ்ச நேரம் பேசணும் என்று எல்லாரையும் பிடித்து வைக்கிறார்.

அப்போது இனியா, நாம ஒரு போட்டோ எடுக்கலாம் தாத்தா என்று முதலில் இனியாவும் தாத்தாவும் போட்டோ எடுக்க, பிறகு ஈஸ்வரி முதலில் திட்டினாலும் அவரும் சேர்ந்து எடுக்கிறார். அதற்குப் பிறகு வீட்டில் எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுக்கின்றனர். ராமமூர்த்தி சந்தோஷமாக இருப்பதை பார்த்து பாக்கியாவும் சந்தோஷப்படுகிறார்.
அப்போது செல்வி நான் வீட்டுக்கு போகிறேன் என்று கிளம்ப, செல்வியிடம் நீ பாக்யாவுக்கு எப்பவும் துணையாக இருக்கணும் அவளை உன்னோட சகோதரியா, நண்பியா பார்க்கிற அதனால நீங்க எப்பவும் ஒன்றா இதுபோலவே இருக்கணும். நீ தான் அவளுக்கு துணையாய் இருக்கணும் என்று சொல்ல, அதற்கு செல்வி அக்கா தான் எங்களுக்கு துணையாக இருக்கிறா... இதுவரைக்கும் இல்லாத வகையில் இன்னைக்கு என்ன இப்படி பேசுறீங்க?

உங்களுக்கு 80 வயசு ஆனதும் அட்வைஸ் கூடிக்கிட்டே போகுது என்று செல்வி கிண்டல் செய்கிறார். பிறகு செல்வி கிளம்பி வீட்டிற்கு போகிறார். அதை தொடர்ந்து எல்லோரும் தூங்க போனதும் ராமமூர்த்தி பாக்யாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நீ ரொம்ப நல்ல பொண்ணு, உங்க அப்பா எனக்கு நல்ல நண்பர். நீ பிறந்ததுமே நீ தான் என் மருமகள்னு முடிவு எடுத்துட்டோம். ஆனா இப்ப உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு.. என்னால்தான் நீ இப்போ கஷ்டப்படுற என்கிற வருத்தம் எனக்குள் இருந்துட்டே இருக்கு.

நீ நல்லா இருக்கணும். மத்தவங்களுக்காக உழைக்காமல் கொஞ்சம் உன்னையும் பாரு என்று எமோஷனலாக பேச அதற்கு பாக்கியா என்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிட்டதுனு நீங்க கவலைப்பட வேண்டியது இல்ல மாமா. எனக்கு கல்யாண வாழ்க்கை செட் ஆகல, என்றாலும் இந்த வாழ்க்கை மூலமாக நீங்க எல்லாம் கிடைச்சு இருக்கீங்க அது எனக்கு மகிழ்ச்சி தான் என்று சொல்ல இறுதியில் ராமமூர்த்தி தூங்க போவதற்கு முன்பு பாக்யாவை ஆசீர்வாதம் பண்ணிவிட்டு செல்கிறார்.

மறுபக்கத்தில் எழில், நிலா, அமிர்தா, மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நிலாவுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பாக்கியா அனுப்பிய பையை எடுத்து அமிர்தா பார்க்க அதில் அடியில் பணம் இருப்பதை பார்த்து அமிர்தா அதிர்ச்சி அடைகிறார். அதற்கு எழில் இது அம்மா தான் வச்சிருப்பாங்க, அம்மாவின் அக்கவுண்ட்ல போட்டு விடு என்று சொல்ல,
அதற்கு அமிர்தா வேண்டாம் நாம அப்படி செஞ்ச அம்மா கஷ்டப்படுவாங்க. இதை நானே வைத்து கொள்கிறேன் என்று அமிர்தா சொல்கிறார். இறுதியாக ராமமூர்த்தி தூக்கம் வராமல் எழுந்து தண்ணீர் குடித்ததோடு நெஞ்சை தடவிக் கொண்டிருக்கிறார். மேலும் ஈஸ்வரி படுத்து தூங்குவதை பார்த்து சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications