பாக்கியலட்சுமி: பாக்யா மீது பழியை போட்ட கோபி.. ராதிகா கொடுத்த அதிர்ச்சி.. சந்தோஷத்தில் ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 6-ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகா தன்னை விவாகரத்து செய்யும்படி கோபியிடம் சொல்ல மொத்த பழியையும் பாக்கியா மீது கோபி தூக்கி போடுகிறார். அதே நேரத்தில் கோபிக்கு ரெஸ்டாரண்டிலும் பிரச்சனை வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் தப்பு செய்யும் கோபி எப்போதும் தனக்கு வரும் கஷ்டத்திற்கு எல்லாம் காரணம் பாக்கியா தான் என்று அவர் மீது ஒவ்வொரு முறையும் பழியை தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் தப்பு மேல தப்பு செய்வது கோபி தான் ஆனால் அதை எல்லாம் அவரே மறந்துவிட்டு பாக்கியாவை குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் இன்றைய எபிசோடிலும் நடைபெற்றது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மயூவை ராதிகா ஸ்கூலுக்கு கூட்டிட்டு போக கிளம்புகிறார். அப்போது கோபி நான் கூட்டிட்டு போறேன் என்று சொன்னாலும் ராதிகா அதை மதிக்காமல் கிளம்பி போக கோபி ராதிகாவிடம் நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கும் கோபத்தை குழந்தை முன்பு ஏன் காட்டணும் என்று கேட்க, ராதிகா கோபப்படுகிறார். இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்கிறது.
அப்போது கோபி என்னுடைய வாழ்க்கையில் உன்னை கல்யாணம் செய்த பிறகு தான் எனக்கு பிரச்சனை மேல பிரச்சனை வந்துகிட்டே இருக்கு. எங்க அம்மா என்ன பிரிஞ்சு போயிட்டாங்க. எனக்கு பல பிரச்சனைகள் வந்ததற்கு காரணம் நீயும் உங்க அம்மாவும் தான் என்று கோபி சொன்னதும் கோபத்தில் ராதிகா அப்போ எதுக்காக இன்னும் இந்த வீட்டில் இருக்கீங்க? டைவர்ஸ் பண்ணிட்டு போக வேண்டியதுதானே? என்று சொன்ன பிறகு கோபி கோபத்தில் வெளியே வந்து காரை துடைத்துக் கொண்டிருக்கிறார்.

எதிர்பக்கத்தில் பாக்யா வீட்டில் கதவை திறந்து வைத்துவிட்டு எல்லோரும் வராண்டாவில் இருந்து நிலாவுடன் பேசி சிரித்துக் கொண்டிருக்கின்றனர். சோகமாக இருக்கும் ஈஸ்வரி கூட நிலா தன்னை போலவே எல்லோரையும் பேசிய அதட்டுவதை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்யாவும் சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்த கோபி என்னை புலம்ப விட்டு விட்டு நீ சிரித்துக் கொண்டிருக்க?
என்னுடைய அம்மா என் மீது இவ்வளவு கோபப்படுவதற்கு காரணமே நீதான் என்று கோபத்தில் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். அங்கு அவர் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு ஒரு ஊழியர் போன் பேசிக்கொண்டு வருவதை பார்த்து கோபி கோபப்பட்டு எல்லா வேலை ஆட்களையும் வரவைத்து அவர்களிடம் கடுமையாக பேசிவிடுறார்.

அதோடு இனி யாரும் லீவு போடக்கூடாது என்று பல ரூல்ஸ்களையும் போட்டு கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபியின் நண்பர் அங்கு வந்து எதற்காக வேலையாட்களிடம் இப்படி கோவமா பேசுற? அவங்க எல்லாம் வேலையை விட்டு போயிருவாங்க என்று மிரட்டி பார்த்தாலும் கோபி திருந்தாமல் இத்தனை பிரச்சனைக்கு காரணம் பாக்கியா தான் என்று பாக்கியா மீது பழியை போடுகிறார்.

ராதிகா என்ன மதிக்கிறது இல்ல.. என்னுடைய அம்மா என்னை பிரிஞ்சிட்டாங்க. எல்லாத்துக்கும் காரணம் பாக்கியா தான். அவா மட்டும் சந்தோஷமா இருக்கா என்று புலம்பி கொண்டு இருக்க நண்பர் கோபியை திட்டுகிறார். மறுபக்கத்தில் பாக்கியா பழனிச்சாமி ரெஸ்டாரண்டில் சந்திக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications