பாக்கியா பிசினஸ்க்கு கோபி வைக்கும் செக்.. எழிலால் உண்டாகும் பிரச்சனை.. பழனிச்சாமி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் இனியா எழுதிய கடிதம் பற்றி பழனிச்சாமியிடம் பாக்கியா சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் பாக்யாவின் பிசினஸை கெடுக்க வேண்டும் என்று கோபி புது முயற்சி எடுத்திருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா பழனிச்சாமியை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இனியா உங்க எல்லாருக்கும் என்னால் கஷ்டம் தான் வந்து கொண்டிருக்கிறது அதனால் நான் வீட்டை விட்டுப் போகப் போறேன் என்று கடிதம் எழுதி வைத்ததை பற்றி சொல்ல பழனிச்சாமி பாக்கியாவிற்க்கு ஆறுதல் சொல்கிறார். அதோடு இப்போ இனியா வீட்டில் எல்லோரையும் பற்றி நன்றாக புரிந்து கொண்டாள். அதனால் இனி அப்படி ஒரு முடிவு எடுக்க மாட்டா என்று சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் எழில் வீட்டிற்கு சோகமாக வந்த அமர ராமமூர்த்தி என்ன ஆச்சு என்று கேட்க ப்ரொடியூசரை பார்க்க முடியவில்லை அதனால் கதை சொல்ல முடியாமல் போய்விட்டது என்று சொல்லி கவலைப்பட அங்கு வந்து ஈஸ்வரி எல்லோரும் கனவு காணலாம் ஆனால் அந்த கனவு நமக்கு நிறைவேறவில்லை என்றால் அதை மூட்டை கட்டி வைத்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று அதற்கான முயற்சி செய்ய வேண்டும். வேறு வேலைக்கு போக வேண்டும் என்று ஈஸ்வரி அறிவுரை கூறுகிறார்.
அதோடு குழந்தை பெத்துக்கிட்டு லைஃப்ல செட்டில் ஆகுற வழிய பாரு என்று பேச அதைக் கேட்டு கோபமாக எழில் எழுந்து போய்விடுகிறார். பிறகு ராமமூர்த்தி ஏன் இப்போ இப்படி பேசின? அவனே கஷ்டத்தில் இருக்கிறான். அந்த நேரத்தில் அவனுக்கு ஆறுதல் சொல்லணும் அதை விட்டுட்டு நீ அவனை மேலும் கஷ்டப்படுத்துற மாதிரி பேசுறியே என்று திட்ட, அதற்கு ஈஸ்வரி நீங்க அவனுக்கு தகுந்த புத்திமதி சொல்லி இருக்கணும்.

அவன் கஷ்டத்தில் இருக்கிறான் என்று நாம எதார்த்தத்தை சொல்லாமல் விட்டால் அதுதான் அவனுக்கு பிறகு கஷ்டமாக வரும் என்று ஈஸ்வரி ராமமூர்த்தியை திட்டி விட்டு எழுந்து போகிறார். பிறகு எழிலுக்கு அமிர்தா ஆறுதல் சொல்ல வருகிறார். அப்போது என்னால் தானே உங்களுக்கு இவ்வளவு கஷ்டம். ஏற்கனவே பார்த்த பொண்ணை நீங்க கல்யாணம் பண்ணி இருந்தா.. சந்தோசமா டைரக்டர் ஆகி இருப்பீங்க என்று சொல்ல அதற்கு எழில் நான் டைரக்டர் ஆகி இருப்பேன், ஆனால் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்திருக்க மாட்டேன் எனக்கு நம்பிக்கை இருக்கு கட்டாயம் நான் டைரக்டர் ஆவேன் என்று அமிர்தாவுக்கு நம்பிக்கை கொடுக்கிறார்.
இதைத்தொடர்ந்து கோபி தன்னுடைய நண்பரோடு பாரில் குடித்துக் கொண்டிருக்க அங்கு கோபியின் நண்பரின் நண்பன் வருகிறார். அவர் தன்னுடைய பிசினஸ் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய ஹோட்டலை தான் பாக்கியா இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல அதைக் கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். அவரிடம் நீங்க அந்த ரெஸ்டாரண்டை மீண்டும் எடுத்து நடத்தலாம் நான் ஏற்கனவே பேங்க் பிசினஸ் பண்ணிக் கொண்டிருந்தேன்.

ஆனால் இப்போ அதை விட்டுவிட்டு ரெஸ்டாரண்ட் பிசினஸ் செய்கிறேன். அது எனக்கு நல்லா வருகிறது உங்களுக்கு அந்த இடம் நல்ல ராசியான இடம். அந்த ரெஸ்டாரண்டில் இருந்து நல்ல வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்றால் அதை நீங்களே நடத்துங்க எதற்காக இன்னொருவரிடம் விட்டுக் கொடுத்திருக்கீங்க என்று கோபி அந்த நபரிடம் சொல்ல இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் கோபியின் நண்பர் செந்தில் அதிர்ச்சியில் இருக்கிறார்.
அதற்கு செந்திலின் நண்பர் இப்போ என்னுடைய ரெஸ்டாரண்டை கவனித்துக் கொண்டிருக்கும் அந்த பெண்ணும் நன்றாக கவனித்து வருகிறார். அதனால் எனக்கு இப்போதைக்கு அதை நான் எடுத்து நடத்த வேண்டும் என்று ஐடியா இல்லை என்று சொல்லிவிட கோபி அவருடைய போன் நம்பரை வாங்கி வில்லத்தனமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது கோபியின் நண்பர் செந்தில் நீ ஏதோ ஒரு பிளான் போடுற, எதற்காக அவனிடம் நம்பர் வாங்குன என்று கேட்க, தன்னுடைய வாழ்க்கையை கொடுத்த பாக்யாவின் பிசினஸை நான் கெடுப்பேன் என்று முழு வில்லனாக சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications