Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்? இதை கவனிச்சீங்களா? அதிரடியாய் களமிறங்கும் புது சீரியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த தகவல் இந்த சீரியல் ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது. கிட்டத்தட்ட பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சமீபத்தில் எல்லா பிரச்சனைகளும் முடிந்து வந்த வண்ணமாக இருக்கிறது.

ஏற்கனவே எழில் மற்றும் அமிர்தா வாழ்க்கைக்கு பிரச்சனையாக இருந்த கணேஷ் பிரச்சனை இப்போது தீர்ந்து இருக்கும் நிலையில் அடுத்ததாக செழியன் மற்றும் ஜெனி சேர்ந்து வாழ வேண்டும் என அதற்கான ஏற்பாடுகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து கோபி மட்டும்தான் இன்னும் திருந்தாமல் இருக்கிறார். அவரும் திருந்தி விட்டால் சீரியலில் அடுத்த கதை இல்லை. ஏற்கனவே இந்த சீரியலில் வந்த கதைதான் ரிப்பீட் ஆகி கொண்டிருக்கிறது.

Baakiyalakshmi Serial coming soon end and new serial entry

சில மாதங்களுக்கு முன்பு கோபி வீட்டை விட்டு வெளியே போயிருந்தார். அதற்கு பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார். அதுபோல ராதிகாவும் வீட்டை விட்டு வெளியே போனார். பிறகு கோபிக்காக அவரும் வீட்டுக்கு வந்திருக்கிறார். இப்படி இதுதான் ரிப்பீட் ஆகி கொண்டிருக்கிறதே தவிர கதையில் எதுவும் புதியதாக இல்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே நேரத்தில் இறந்துபோன கணேஷ் மீண்டும் வந்தது இந்த சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது. ஒரு வழியாக இப்போது அந்த பிரச்சனையை முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். இதை தொடர்ந்து இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் சேனல் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக இது குறித்து பேசவில்லை.

அதே நேரத்தில் இனி இந்த சீரியல் முடிவடைந்தால் இதற்கு பதிலாக "பனிவிழும் மலர்வனம்" என்று சமீபத்தில் தொடங்கி இருக்கும் சீரியல் இதே நேரத்தில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. பனிவிழும் மலர் வனம் என்ற சீரியலில் கதாநாயகனாக விஜய் டிவியில் "ஈரமான ரோஜாவே" சீரியலில் நடித்த நடிகர் "சித்தார்த்" தான் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை "வினுஷா" நடிக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கப்பட்டிருக்கிறது. அதுபோல பனி விழும் மலர்வனம் சீரியலில் ஏற்கனவே ராஜா ராணி சீரியல் மற்றும் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரவி இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதுபோல ரவியின் மகனாக "தமிழும் சரஸ்வதியும்" சீரியலில் அர்ஜுனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் "ரயான்" நடிக்கிறார்.

அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "அண்ணா" சீரியலில் முத்துப்பாண்டி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சத்யாவும் இந்த சீரியலில் நடிக்கிறார். ஏற்கனவே அண்ணா சீரியலில் இவர் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் இவர் வில்லனாக நடிப்பாரா அல்லது பாசிட்டிவ் கேரக்டரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதுபோல தமிழும் சரஸ்வதியும் சீரியல் அர்ஜூன் அந்த சீரியலில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இந்த சீரியலில் பார்ப்பதற்கு பவ்யமாக இருக்கிறார். இதனால் என்ன மாதிரியான கேரக்டர் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கான ப்ரோமோ இன்னும் வெளியாகவில்லை. அதற்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+