பாக்கியலட்சுமி: ஈஸ்வரி போட்ட பிளான்.. வீட்டிற்கே வந்த ராதிகா.. பாக்யாவுக்கு தெரிய வந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 10ஆம் தேதிக்கான எபிசோடில் கோபியை தேடி பாக்கியா வீட்டிற்கு ராதிகா வந்திருக்கிறார். ஆனால் ஈஸ்வரி புதிய பிளான் ஒன்று போட்டு இருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி வீட்டில் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்யாவுக்கு நான் நிறைய அவமானம் பண்ணி விட்டேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரி இடமும் நான் உங்களுக்கு ஒரே பையன் தானே என் அப்பாவுக்கு உடலுக்கு கொள்ளி வைக்க விடாதது என்னை ரொம்ப பாதித்தது என்று எமோஷனலாக பேசுகிறார்.

அதற்கு ஈஸ்வரி ஈஸ்வரி அது அந்த நேரத்தில் அப்படி நடந்துச்சு.. அதற்கு என்னை மன்னிச்சிடு. நான் உங்க அப்பா ஆசையை நிறைவேற்றனும் என்று நினைத்தேன் என்று சமாளிக்கிறார். பிறகு பாக்கியா வாக்கிங் போக அந்த நேரத்தில் கோபி, பாக்கியா வாக்கிங் போனால் இனியாவுக்கு யார் சாப்பாடு கொடுப்பது என்று கேட்கிறார்.
அதற்கு இனியாவும் ஈஸ்வரியும் சிரித்துவிட்டு பாக்கியா காலை சாப்பாடு, மதிய சாப்பாடு எல்லாமே செய்து வைத்துவிட்டு தான் போவா. ஜெனிக்கும் ஆரோக்கியமா சாப்பாடு செய்து வைப்பா. பாக்கியா எத்தனை மணிக்கு எழுந்து செய்வானே தெரியாது. எத்தனை மணிக்கு தூங்குறா என்பதும் யாருக்கும் தெரியாது என்று பாக்யாவை பற்றி பெருமையாக ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்கிறார்.

அதோடு பாக்யா ஒரு அதிசய பிறவி என்றும் ஈஸ்வரி பாராட்டுகிறார். அடுத்ததாக ராதிகா பாக்கியா வீட்டிற்கு வர ஈஸ்வரி கோபியை பார்க்க விடாமல் தடுக்கிறார். ஆனாலும் அங்கு வந்த பாக்கியா ஈஸ்வரியிடம் ராதிகா அவங்களோட கணவரை பார்க்க வந்திருக்காங்க. உங்க மகன் தாலி கட்டின மனைவி அவங்க தான் அவங்க எங்க எப்ப வேணாலும் வந்து அவங்க கணவரை பார்க்கலாம் என்று சொல்கிறார்.
பிறகு ராதிகா உள்ளே போய் கோபியை கூப்பிடுகிறார். அவர் நல்ல தூக்கத்தில் இருக்கிறார். இதனால் ராதிகா வெளியே வந்து விடுகிறார் அப்போது இனி கோபியை பார்க்க வர வேண்டாம் என்று ஈஸ்வரி சொல்லி அனுப்புகிறார். பிறகு கோபி ரூமில் இருந்து தண்ணீர் கேட்க ஈஸ்வரி தூங்குவது போல் நடிக்கிறார்.

கோபி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க பாக்யா வேறு வழியில்லாமல் தண்ணி கொண்டு போய் கொடுக்கிறார். அப்போது கோபி தன்னை காப்பாற்றியதற்காக நன்றி கூறுகிறார். அதோடு இதை எப்போது மறக்க மாட்டேன், உனக்கு போன் பண்ணும் போது கூட நீ கண்டிப்பா வரமாட்ட என்று தான் நினைச்சேன். ஆனா நீ என் உயிரை காப்பாத்திட்ட என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
இதை வெளியே இருந்து மறைந்து இருந்து ஈஸ்வரி கேட்டு சந்தோஷப்படுகிறார். அப்போது செல்வியும் வந்து ஈஸ்வரி நடவடிக்கைகளை கவனிக்கிறார். பிறகு பாக்கியா ரூமில் இருந்து வெளியே வரும்போது ஈஸ்வரி அங்கு நின்று கொண்டிருப்பதை பார்த்து சந்தேகப்படுகிறார்.

அடுத்ததாக செல்வியும் பாக்கியாவும் வாக்கிங் போகின்றனர். அப்போது பாக்யாவிடம் செல்வி அக்கா உன்னையும் கோபி சாரையும் சேர்த்து வைப்பதற்காக உன் மாமியார் பிளான் போட்டு இருக்காங்க என்று போட்டுக் கொடுக்கிறார். இதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications