கோபி பற்றி ராதிகாவுக்கு தெரிய வந்த உண்மை.. பாக்கியா வாழ்க்கையில் புது வில்லன்.. இனி நடப்பது இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமியின் சீரியல் டிசம்பர் 11ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கோபி கடனில் சிக்கி இருக்கும் உண்மை ராதிகாவுக்கு தெரிய வந்திருக்கிறது.
அதே நேரத்தில் கேண்டினில் சந்தோஷமாக இருக்கும் பாக்யாவிற்கு புது வில்லனால் பிரச்சனை வந்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் ராதிகா பழனிச்சாமி இடம் பாக்கியாவை கல்யாணம் பண்ணிக்கோங்க என்று சொல்ல, அதற்கு பழனிசாமி எங்க அம்மா தான் வயசானாங்க அவங்க பொறுப்பில்லாமல் ஏதோ சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனால் நீங்களுமா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ராதிகா சரி என்று பேசிக் கொண்டிருக்கும்போதே பாக்யா இப்போ ஸ்மார்ட் ஆகிக்கொண்டே போகிறார்.
அதனால் கோபி அவரைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறார். அதனால் தன்னுடைய வாழ்க்கை இன் செக்யூர்டாக இருப்பதாக மறைமுகமாக சொல்கிறார். இதை கேட்டு பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்க, பிறகு ராதிகா அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதைத் தொடர்ந்து கேண்டினில் அமோகமாக வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது பாக்கியாவிடம் கேண்டினை கேட்டு வந்த ஆள் பொருள் காட்சி கேண்டினில் கூட்டம் கூடுவதை பார்த்து கடுப்பாகிறார்.
இதனால் அதை காலி செய்ய என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். அதோடு இப்படியே போனா அடுத்த வருடம் இவருக்கே ஆர்டர் கிடைக்கும் அதனால கெட்டுப்போன உணவை வாங்கியதாக சோசியல் மீடியாவில் போட சொல்கிறார். ஆனால் இதை எல்லாம் தெரியாத பாக்கியா முதல் நாள் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டில் செழியன், எழில், ஈஸ்வரி அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது செழியன் அம்மாகிட்ட பேசுனியா என்று கேட்கிறார். அதற்கு எழில் பேசினேன்.. நல்லாவே போனதாக சொன்னார் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து விசிட்டிங் கார்டு அடித்து வைத்து கொடுத்திருக்கலாம் என்று செழியன் ஐடியா கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டிற்குள் வரும் பாக்யா சந்தோஷமாக பேசிவிட்டு ஈஸ்வரி வராதது தான் எனக்கு குறையாக இருந்தது என்று சொல்லிவிட்டு ரூமுக்கு செல்ல அங்கே பாக்கியாவிடம் இனியா சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அதோடு இருப்பதால் பாக்கியா டயர்டாக இருப்பதால் அவருடைய காலை பிடித்து விட்டு இனியா ஐ லவ் யூ அம்மா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக கோபிக்கு கால் வர அவர் பேச வெளியே போகிறார். அங்கு பேங்க் ஆட்கள் நிற்பதை பார்த்து கோபி அதிர்ச்சியடைகிறார். அவர்கள் உங்களுக்கு கொடுத்த டைம் எல்லாம் முடிந்துவிட்டது. எப்போ காச கட்டுவீங்க என்று கராராக மிரட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் ராதிகா அங்கு வந்து கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது. ஏற்கனவே பாக்யாவிற்கு கணேசன் கெடு கொடுத்த நாட்கள் முடியப்போகிறது. அதே நேரத்தில் இப்போது கேண்டினிலும் பாக்கியாவிற்க்கு பிரச்சனை வந்திருக்கிறது. இதனால் அடுத்து என்ன நடக்க போகிறது என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதே நேரத்தில் கோபியின் சுயரூபம் ராதிகாவுக்கு தெரிய வரும்போது ராதிகா என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதையும் பார்க்கலாம்.
-
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications