கோபிக்காக ஈஸ்வரி, ராதிகா எடுத்த முடிவு.. கலங்கி நிற்கும் பாக்கியா.. இனி அப்போ அவ்வளவுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 18ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் கோபி கிரெடிட் கார்டுக்கு பணம் கட்டாமல் இருக்கும் விஷயம் ராதிகாவுக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத செயலை ராதிகா செய்கிறார்.

அதே நேரத்தில் ராதிகாவுக்கு போட்டியாக ஈஸ்வரியும் தன்னுடைய நகைகளை கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial December 18th promo full episode full update

இந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பேங்க் ஆபீஸர்கள் கோபி ஆறு மாசமா கிரெடிட் கார்டுக்கு பணம் கட்டவில்லை என்று சொல்ல, ராதிகா அதிர்ச்சி அடைகிறார். அப்போது ஈஸ்வரி கோபி பணம் கட்ட மறந்து இருப்பான், கட்டாயம் கட்டிடுவான் என்று சொல்ல அதற்கு அவர்கள் அது எப்படி எட்டு மாசமா பணம் கட்ட மறந்து விட்டாரா? என்று கேட்டு திட்டுகின்றனர்.

Baakiyalakshmi Serial December 18th promo full episode full update

அதை கேட்டு ராதிகா, ஈஸ்வரியிடம் என்ன சமாளிக்கிறீங்களா? அவரிடம் இவங்க பலமுறை வந்து பேசிகிட்டு இருக்கிறது நான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு கோபமாக உள்ளே சென்று விடுகிறார். பிறகு ஈஸ்வரி கோபிக்கு போன் பண்ணி வர சொல்கிறார். அப்போது கோபி வர ஈஸ்வரியும் ராதிகாவும் வீட்டில் எதிர் எதிரே அமர்ந்திருக்கின்றனர். அதை பார்த்து கோபி ஏதோ சம்பவம் ஆகி இருக்கிறது என்று நினைத்து என்னவென்று ஈஸ்வரியிடம் விசாரிக்கிறார்.

அப்போது ஈஸ்வரி ராதிகாவுக்கு கிரெடிட் கார்டு பணம் கட்டாத விஷயம் தெரிந்து விட்டது என்று சொல்ல கோபி ராதிகாவிடம் சென்று பேசுகிறார். அதற்கு சீக்கிரமா பணத்தை கட்டிடுங்க என்று அட்வைஸ் பண்ணுகிறார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி தன்னுடைய நகைகளை கொண்டு வந்து கோபியிடம் கொடுக்க அந்த நேரத்தில் ராதிகாவும் செக் எழுதி கொண்டு வந்து கொடுக்கிறார். ஆனால் கோபி இருவரிடமும் எதுவும் வாங்காமல் தானே கிரெடிட் கார்டு பணத்தை கட்டி விடுவதாக சொல்லிவிடுகிறார்.

Baakiyalakshmi Serial December 18th promo full episode full update

பிறகு வீட்டில் எல்லோரும் இருக்கும்போது பாக்கியாவும் செல்வியும் வருகின்றனர். அங்கு வரும் செல்வி கண்காட்சியில் தங்களுடைய கேண்டினுக்கு நிறைய பேர் வந்த விஷயத்தை, பாக்யாவை பற்றியும் புகழ்ந்து பேசுகிறார். அதோடு பாக்கியா புது கார் வாங்கலாம் என்று சொல்ல வீட்டில் இருக்கிறவர்களும் அதற்கு சம்மதிக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் நிறைய பேர் காண்ட்ராக்ட் கேட்டு வருகிறார் என்று பாக்யா பேசிக் கொண்டிருக்க இது எல்லாம் கேட்டு கோபி அதிர்ச்சியாக இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+