பாக்கியலட்சுமி: கோபி பற்றி டாக்டர் சொன்ன வார்த்தை! தாண்டவம் ஆடிய ஈஸ்வரி.. பளார் விட்ட பாக்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகா, கோபியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டபோது கோபிக்கு மீண்டும் நெஞ்சு வலி வந்து விடுகிறது. அதனால் இனியாகவும், ஈஸ்வரியும் ராதிகாவை வீட்டை விட்டு துரத்துகின்றனர்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராதிகா வீட்டை விட்டு போக முடிவெடுத்திருப்பது பற்றி கோபியிடம் நேரில் வந்து பேசுகிறார். அப்போது கோபி இப்போ எதுக்கு வீட்டை விட்டு போகணும் என்று கேட்க, ராதிகா முதலில் நடந்தது முதற்கொண்டு கோபியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது பிரச்சனை நடந்த பிறகு நீங்க போன் எடுக்காததால் உங்களை தேடி நான் அலைஞ்சேன். அது மட்டுமில்லாமல் சர்ஜரி முடிஞ்சதுக்கு அப்புறம் தான் எனக்கு சொன்னார்கள். ஹாஸ்பிடல் வந்தப்பவும் என்னை உள்ளே விடலை, சண்டை போட்டாங்க. உங்க அம்மா முதற்கொண்டு உங்க பொண்ணு வரைக்கும் என்னை அசிங்கப்படுத்தி பேசுறாங்க என்றெல்லாம் வருத்தப்படுகிறார்.
அதோடு என்னால மயூ கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. நீங்களே எனக்கு இல்லனு ஆனா பிறகு நான் இந்த இடத்தில் இருந்து என்ன பிரயோஜனம். நான் மயூவை கூட்டிக்கொண்டு போகப் போறேன் என்று சொல்கிறார். உடனே கோபி டென்ஷனாக பேச அவருக்கு நெஞ்சு வலி வந்து மயங்கி விழுந்து விடுகிறார்.
அதனால் செழியனும், ஈஸ்வரியும் கோபி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகின்றனர். அப்போது ராதிகா நான் வேணும்னு இப்படி பண்ணல. பேசணும்னு தான் வந்தேன் கோபப்படணும்னு பண்ணல என்று சொல்கிறார். அப்போது ஹாஸ்பிடலில் இது மாதிரி எப்பவும் இனி ஆகக்கூடாது நீங்க டென்ஷனாக கூடாது, உங்களுக்கு பெரிய சர்ஜரி நடந்திருக்கு. நீங்க கேர்ஃபுல்லா இருக்கணும் இதனால உயிருக்கு கூட ஆபத்து வரலாம் என்று டாக்டர் சொல்கிறார்கள்.
இதனால் ஈஸ்வரியும், செழியனும் பதறுகிறார்கள். மறுபக்கத்தில் இனியா அழுது கொண்டே இருக்க, நான் வேணும்னே எதுவுமே பண்ணல என்று ராதிகா சொல்கிறார். அதற்கு இனியா கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் எங்க டாடி நல்லா தான் இருந்தாங்க. ஆனா நீங்க பேசுனதுக்கு அப்புறம் தான் இப்படி ஆச்சு. அன்னைக்கு தெரியாம தான் உங்களை திட்டினேன்.

ஆனால் இன்னைக்கு தெரிஞ்சே சொல்றேன். உங்களால தான் எங்க வீட்டுல பிரச்சனை நடக்குது என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா இனியாவை அதட்டுகிறார். ஆனால் இனியா ராதிகாவிடம் நீங்க எங்க டாடி கிட்ட பேசிட்டு இருக்கக் கூடாது, இப்போ, இல்ல.. எப்பவுமே.. என்று சொல்ல பாக்கியா கோபப்படுகிறார். ஒரு கட்டத்துக்கு மேல் இனியா பேசிக் கொண்டே இருக்கும் போது இனியாவை பாக்கியா அடித்து விடுகிறார்.
ராதிகா எனக்காக உங்களுக்குள் சண்டை வேண்டாம் என்று சொல்ல அதற்கு இனியா, இப்ப இல்ல நீங்க எப்போ எங்க டாடி வாழ்க்கையில வந்தீங்களோ அப்பவே சண்டை வந்திருச்சு என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா அமைதியா இருக்கிறதா இருந்தா இரு இல்லனா ரூமுக்கு போ என்று இனியாவை திட்டுகிறார். அந்த நேரத்தில் ஹாஸ்பிடலுக்கு போனவர்கள் வீட்டுக்கு வருகிறார்கள்.

அப்போது ராதிகா கோபியிடம் இப்ப எப்படி இருக்கு கோபி என்று கேட்க, ஈஸ்வரி அவரை எதுவும் பேச விடாமல் படுக்க வைக்க அழைத்துச்சென்று விடுகிறார். செழியன் வெளியே வரவும் அவரிடம் ராதிகா விசாரிக்கிறார். அப்போது ஈஸ்வரி நீ எப்போ என் பையனுக்கு டைவர்ஸ் கொடுக்கப் போற? அவனை சாகடிக்காம விட மாட்டியா? என்றெல்லாம் பேசுகிறார்.

அதோடு உனக்கு இந்த வீட்டு பக்கம் வராதேனு சொன்னா புரியாதா? இன்னொரு வாட்டி வந்தேன்னா நான் மனுஷியா இருக்க மாட்டேன் என்று திட்டுகிறார். இதனால் ராதிகா எதுவும் பேசாமல் அமைதியாக போய்விட பாக்கியா, இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கொடுமை எல்லாம் பார்க்க போறேன்னு தெரியல.
இவங்க பையன் மேல இருக்கிற பாசத்தால அவங்கள அசிங்கப்படுத்துறாங்க. இவங்க ரெண்டு பேரும் தான் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அது எப்படி அவங்கள மட்டும் குறை சொல்ல முடியும் என்று கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications