கணேஷை பார்த்து அதிர்ந்த அமிர்தா.. குடும்பத்தோடு முக்கிய முடிவு எடுத்த பாக்யா.. எழிலின் எதிர்பாராத செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 27ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கணேஷ் மீண்டும் உயிரோடு வந்த விஷயத்தை பற்றி பாக்கியா வீட்டில் இருப்பவர்கள் அனைவரிடமும் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதே நேரத்தில் அமிர்தா முன்பு கணேஷ் வந்து நிற்க அதை பார்த்து அமிர்தா அதிர்ச்சி அடைகிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்..

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா எழிலையும் அமிர்தாவையும் கோவிலுக்கு அவசர அவசரமாக அனுப்பி வைக்கிறார். அதை பார்த்துக் கொண்டிருந்த ராமமூர்த்தி என்னம்மா ஏதாவது பிரச்சனையா? என்று கேட்க அதற்கு ஆமாம் மாமா பெரிய பிரச்சனைதான் என்று பாக்கிய சொல்ல, அதற்கு என்னவென்று சொல்லுமா வயித்துல புளி கரைக்கிறது என்று ராமமூர்த்தி சொல்கிறார்.
அதற்கு பாக்கியா எல்லோரும் வரட்டும் மாமா,மொத்த பேருக்கும் சேர்த்து சொல்கிறேன். அதுவரைக்கும் என்ன எதுவும் கேட்காதீங்க என்று உள்ளே சென்று விடுகிறார். ஏற்கனவே பல மாதங்களாக அமிர்தா விஷயத்தை வீட்டில் சொல்லி விட வேண்டும் என்று முயற்சி செய்த பாக்கியா இன்றும் சொல்வாரா இல்லையா என்பது நமக்கு ஆர்வமாக இருந்த நேரத்தில் அமிர்தாவும் எழிலும் கோவிலுக்கு கிளம்பி போகும் நேரத்தில் அங்கு கணேஷ் வந்து விடுகிறார்.

அவசரமாக பாக்யா செய்யும் செயல்களை எல்லாம் பார்த்துக் கொண்டு என்னை பார்க்க கூடாது என்பதற்காக அமிர்தாவை வெளிய அனுப்பி வைக்கிறீர்களா? இன்னைக்கு இருக்கு என்று எழில் பைக் பின்னாடி கோவிலுக்கு கணேசன் வருகிறார். மறுபக்கத்தில் வீட்டில் பாக்யா எல்லாரையும் கூப்பிட்டு உட்கார வைத்து ஒவ்வொரு உண்மைகளாக சொல்கிறார்.

அதாவது அமிர்தாவுக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்தது எல்லாருக்கும் தெரியும் தானே என்று கேட்டு, அதற்கு கோபி ஆமாம் அந்த பொண்ணுக்கு ஒரு கல்யாணம் முடிஞ்சு அந்த கணவர் கூட இறந்து போயிட்டாருன்னு சொன்னியே, பாவம்... அதனால் தான் எழில் அந்த பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு சொல்லி இருக்க என்று சொல்ல, அதற்கு பாக்கியா இப்போ அந்த கணேஷ் உயிரோடு வந்து அமிர்தாவையும் நிலாவையும் கேட்பதாக சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதுவரைக்கும் மூன்று மாதங்களாக கணேஷ் தன்னை பாலோ பண்ணியது எல்லாவற்றையும் பாக்கியா சொல்ல, அதற்கு பிறகு கோபி ஆமா என்னிடமும் வீட்டு வாசலில் வைத்து நிலாவின் அப்பா என்று சொல்லி ஒரு பையன் வந்தானே அந்த பையன் கிட்ட கூட நீ தனியா பேசிகிட்டு இருந்தியே அவன் தானா என்று கோபி கேட்க, ஆமாம் என்று சொல்கிறார்.

அதை தொடர்ந்து ராமமூர்த்தியும் தன்னிடம் பார்க்கில் நிலாவோடு விளையாடிய விதத்தை பற்றியும் சொல்கிறார். இப்படியாக எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் கோவிலில் அமிர்தா எழில், நிலா மூவரும் சாமி கும்பிட்டு கொண்டு இருக்கும்போது எழிலுக்கு தன்னை ஒருவர் பின் தொடர்வது போன்று தோன திரும்பி திரும்பி பார்த்தபடியே வருகிறார்.

அதற்கு அமிர்தா என்னவென்று விசாரிக்க ஒன்றும் இல்லை என்று சமாளித்தபடி இருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து அமர்ந்திருக்கின்றனர். அப்போது கணேஷ் இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க, அமிர்தா நிலாவிற்காக ஒரு பரிகாரம் பண்ணனும் அதை பற்றி கேட்டுவிட்டு வருகிறேன் என்று கோவிலுக்கு எழுந்து செல்ல அங்கு கணேஷ் வந்து எதிரில் நின்று அமிர்தா என்று கூப்பிட அமிர்தா திரும்பிப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications