பாக்கியாவை சுற்றும் அடுத்தடுத்த பிரச்சனை.. கோபிக்கு வந்த சிக்கல்.. முடிவுக்கு வருகிறதா சீரியல்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் இரண்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் செழியன் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் கணேஷ் பாக்கியாவை இன்னும் உங்களுக்கு 12 நாள் தான் இருக்கிறது என்று பிளாக்மெயில் செய்கிறார்.
அதே நேரத்தில் கோபிக்கு பேங்கில் இருந்து மிரட்டல் விடுகின்றனர். ஆக மொத்தம் பாக்கியா மற்றும் கோபி இருவருமே பிரச்சனையில் இருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் பழனிசாமியும் பாக்கியாவும் ஹோட்டலில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா பழனிச்சாமி இடம் மன்னிப்பு கேட்கிறார். அதற்கு பழனிச்சாமி எவ்வளவு தான் நெருங்கிய நட்பா இருந்தாலும் சொல்லாமல் வந்து நேரடியா பார்த்தால் பிரச்சனை வரும் என்பதை நான் தெரிஞ்சுக்கிட்டேன் என்று சொல்கிறார்.
அதற்கு பாக்கியா இல்ல சார், அப்படி நடந்து இருக்க கூடாது என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கோபி தன்னுடைய நண்பர் செந்தில் இடம் புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது ராதிகாவும் பாக்கியாவும் தனக்கு தொல்லை தருகிறார்கள். அதுபோல கிரெடிட் கார்டு ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து பாக்யா அரசு அலுவலகம் சென்று பொருட்காட்சி குறித்து விசாரிக்க போகிறார். அங்கு இருப்பவர்கள் பல மாவட்டங்களில் இருந்து வந்திருப்பதாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பியூன் நாளைக்கு நடக்கும் மீட்டிங்கில் தான் இது குறித்து முடிவெடுப்பாங்க என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து பாக்யா தெருவில் வந்து கொண்டிருக்கிறார்.
அப்போது முகத்தினை மூடிக்கொண்டு ஒருத்தர் வழிமறிக்க செயின் திருடன் என்று பாக்யா பயந்து விடுகிறார். பிறகு அவர் முகத்தில் சுற்றி இருந்த துணியை எடுக்கவும், அது கணேஷ் என்று தெரிகிறது. அதோடு நீங்க பிரச்சனையை முடிக்க 30 நாள் டைம் கேட்டிருந்தீங்க. இன்னும் 12 நாள் தான் இருக்கு. அதுக்கு பிறகு நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது என்று மிரட்டி விட்டு போகிறார்.
அடுத்ததாக காண்ட்ராக்ட் வாங்கியவரை சந்திக்கும் பாக்கியா பொருள்காட்சி ரத்து செஞ்சிட்டா கவர்மெண்ட் உங்களுக்கு கொடுக்கும் ஒரு லட்சம் காச தருவீங்களா? என்று கேட்கிறார். அதற்கு அவர் தர முடியாது. அது எனக்கு கொடுக்கும் காசு. நான் உங்ககிட்ட காண்ட்ராக்டை கொடுத்துட்டேன். லாபமோ நஷ்டமோ அதை நீங்கதான் அனுபவிக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்.
அதனால் செல்வி என்னக்கா இப்படி சொல்லிட்டாரு என்று கேட்கிறார். அதற்கு பாக்யா எப்படியோ நாம துணிந்து இறங்கிட்டோம். இனி நடக்கிறதை சமாளித்து தானே ஆகணும் என்று பாக்கியா சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications