பாக்கியலட்சுமி: கோபிக்கு பாக்யா வீட்டில் கிடைத்த அதிர்ச்சி! இனியா கேட்ட கேள்வி! இது தேவையா ஈஸ்வரி?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 9ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியா வீட்டிற்கு வந்த கமலா ஈஸ்வரியிடம் வாக்குவாதம் செய்கிறார். அதே நேரத்தில் கோபியிடம் இனியா கேட்ட கேள்வியால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கமலா கோபமாக பாக்யா வீட்டிற்கு வருகிறார். பாக்கியா வீட்டு வாசலில் நின்று கொண்டு இருப்பதை பார்த்ததும் பாக்யாவை வாய்க்கு வந்தபடி திட்டுகிறார். இதனால் கோபமான பாக்கியா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அத்தை உள்ளே இருக்காங்க போய் அவங்க கிட்ட பேசுங்க என்று சொல்கிறார்.

இதனால் கமலா வீட்டிற்குள் கத்திக்கொண்டே வர, அப்போது செழியன் எதற்காக எங்க வீட்டுக்கு வந்தீங்க என்று கேட்கிறார். அப்போது கமலா என் மாப்பிள்ளையை நீங்க கடத்திட்டு வந்துட்டீங்களா? என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி யாரும் அந்த மாதிரி இங்க பண்ணல. ஏற்கனவே உன் பொண்ணை கல்யாணம் பண்ணி அவனுக்கு பேனிக் அட்டாக் வந்தது.
ஆனால் இப்ப ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு. இதுக்கு மேலயும் உங்க கிட்ட விட முடியாது. உங்ககிட்ட விட்டா என் பையனை சாகடித்து விடுவீங்க என்று சொல்ல, கமலா நான் போலீசுக்கு போவேன் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி நீ போலீசுக்கு போகணும்னா போ, உனக்கு மட்டும் தான் சட்டம் தெரியுமா? எனக்கும் தெரியும். கோபி ஒன்னும் குழந்தை கிடையாது.

அவன் விருப்பப்பட்டு வரணும்னு சொன்னான். அதனாலதான் அவன் இங்கே இருக்கிறான். நீ இப்ப வெளிய போறியா இல்ல கழுத்தை புடிச்சு தள்ளவா என்று கேட்க, இப்ப நான் போறேன் ஆனா இந்த விஷயத்தை சும்மா விட மாட்டேன் என்று திட்டி விட்டு கமலா கிளம்பி போகிறார்.
அடுத்ததாக பாக்கியா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஈஸ்வரி கோபிக்கு சாப்பாடு செய்யுமாறு மறைமுகமாக சொல்கிறார். ஆனால் பாக்யா நான் அப்படி அவருக்காக எதுவும் செய்யமாட்டேன் என்று சொல்லி விடுகிறார். இதனால் ஈஸ்வரியே கோபிக்கு இடியாப்பமும் தேங்காய் பாலும் செய்கிறார்.

அதைத் தொடர்ந்து கோபியை சாப்பிட வைத்து அழகு பார்க்கிறார். மறுபக்கத்தில் ராதிகா கோபியை நினைத்து கவலைப்பட்டு இருக்கிறார். அதற்கு கமலா உனக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று சொல்ல, குழந்தை இல்லாததுதான் நல்லது இல்லை என்றால் அந்த பிள்ளையை வைத்து நான் தான் கஷ்டப்படணும் என்று ராதிகா வருத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக கோபி தன்னுடைய வீட்டில் எல்லோரிடமும் சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது எப்படி உனக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்தது என்று ஈஸ்வரி கேட்க, அன்னைக்கு இனியா பேசியதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டேன் என்று கோபி சொல்கிறார். இதை கேட்ட இனியா அப்படி என்றால் என்னால் தான் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததா? என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications