முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி முதல் பாகம்..2வது பாகத்தில் இவர்கள் தான் நடிக்கிறார்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் முதல் பாகம் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் வயதான தோற்றத்தில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யோசிக்க முடியாமல் இருக்கும் பல பரபரப்பான தருணங்கள் இந்த வாரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் பற்றி பல அதிர்ச்சிகரமான செய்திகளும் வெளியாகி இருக்கிறது.
இன்றைய எபிசொட்டில் ஜெனி தவறி கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டு வயிற்றுவலியில் துடிக்கிறார். இதே நேரத்தில் இனி ஜெனியை மருத்துவமனையில் ராதிகா தான் சேர்க்க இருக்கிறார் என்ற பிரமோவும் வெளியாகி இருக்கிறது. வீட்டில் யாரும் இல்லாததால் ஜெனியை ராதிகா தான் கொல்ல முயற்சி செய்து விட்டார் என்று இனி ஈஸ்வரி புது பிரச்சனையை கிளப்ப இருக்கிறாராம்.
ஏற்கனவே கோபி மற்றும் ராதிகா செய்யும் பிரச்சனைகளுக்கு பெரிய அளவில் பாக்கியா எந்த பதிலும் கொடுக்காமல் இருந்து வருகிறார். இதனால் இனி பாக்கியா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. கோபி எப்படியாவது ராதிகாவை வீட்டை விட்டு கிளம்பி மீண்டும் பழைய வீட்டிற்கு போகவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் ராதிகாவை மட்டும் அனுப்பி வைத்துவிட்டு கோபியை மீண்டும் பழையபடி தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி ஒரு பக்கமாக ஆசையோடு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ராதிகா மீது ஈஸ்வரி சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுகளை கோபி எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் இனி கோபி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வயதான ரூபத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இதுதான் வயதான கோபி என்று பதிவிட்டு இருக்கிறார். ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன வரப்போகிறது என்பது பற்றி ஃக்ளூ அடிக்கடி கொடுத்து வருபவர். அதனால் இனி இந்த சீரியல் முதல் பாகம் முடிவடைந்து விரைவில் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது என்று கன்ஃபார்ம் ஆகி இருக்கிறது.

ஏற்கனவே இந்த சீரியலில் இருந்து தான் 10, 15 எபிசோட்டில் விலகப் போவதாக கோபி தெரிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து ராதிகாவும் நானும் இந்த சீரியலில் இனி இருப்போமா இல்லையா என்பது தெரியாது என்றும் கூறியிருந்தார். அதனால் இனி இரண்டாவது பாகத்தில் ராதிகா கேரக்டர் இருக்காதா? அப்போ கோபி மட்டும் இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இரண்டாவது பாகத்தில் இனி கோபி மட்டும் கன்ஃபார்ம் ஆகி இருக்கிறது. அதே நேரத்தில் பாக்யா இனி எப்படி இருப்பார் என்றும் பலர் எதிர்பார்க்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications