பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரியாகும் "தாடி பாலாஜி”.. கதையே மாறிப்போச்சு.. இப்படி ஒரு முடிவா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று எபிசோடில் நடிகர் தாடி பாலாஜி அறிமுகம் ஆகி இருக்கிறார்.
பழனிச்சாமியின் நண்பனாக தாடி பாலாஜி அறிமுகம் ஆகி இருப்பதால் இனி அடுத்து என்ன பிரச்சனை வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
தாடி பாலாஜி பாக்யாவின் சபதத்தை ஜெயிக்க விடுவாரா? இல்லையா? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் கதை இப்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. பாக்கியாவிடம் இந்த வீட்டில் உனக்கு உரிமை இல்லை இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்று கோபியும் ராதிகாவும் திட்டியதால் பாக்கியா கோபியிடம் மீண்டும் சபதம் போட்டிருக்கிறார்.
ஏற்கனவே கோபி இந்த வீட்டை என்னிடம் விற்க போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறேன். ஆனால் இன்னும் ஒரு மாதத்திற்குள் மீதம் இருக்கும் 18 லட்சம் ரூபாயும் நான் முகத்தில் தூக்கி எறிந்ததும் கோபியும் அவருடைய குடும்பமும் இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்று பாக்யா சொல்லி இருக்கும் நிலையில் இந்த சவாலுக்கு கோபியும் தயார் என்று கூறியிருக்கிறார்.
அதே நேரத்தில் பழனிச்சாமி தன்னுடைய நண்பர் இல்ல திருமண பங்ஷனுக்கு சமையல் செய்ய வேண்டும், மூன்று நாட்கள் பெரிய அளவில் 5000 பேருக்கு சமைக்க வேண்டும் என்று சொன்னதற்கு ஆரம்பத்தில் முடியாது என்று சொன்ன பாக்கியா கோபியிடம் தான் போட்ட சவாலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அதை ஏற்றுக் கொண்டு சமையல் செய்வதற்காக பாண்டிச்சேரிக்கு வந்து இருக்கிறார்.
இந்த நிலையில் பழனிசாமியின் நண்பராக பாண்டிச்சேரியில் நடிகர் தாடி பாலாஜி இன்றைய எபிசோடில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதே நேரத்தில் பாக்யா தான் இங்கே சமையல் செய்யப் போகிறார் என்று பழனிச்சாமி சொன்னதும் தாடி பாலாஜிக்கு பிடிக்கவில்லை இவர் எப்படி மூன்று நாட்களுக்கு மூன்று நேரம் சாப்பாடும் செய்ய முடியும் என்று சந்தேகப்படுகிறார்.

ஆனாலும் பழனிச்சாமி என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? பாக்கியா நல்லா சமைப்பாங்க அதனால தான் அவங்கள வர சொல்லி இருக்கிறேன் என்று சொல்ல, முழு மனதாக தாடி பாலாஜி சம்மதம் தெரியவில்லை. இதே நேரத்தில் அதே கல்யாணத்துக்கு கோபியும் ராதிகாவும் வருகின்றனர். இந்த நிலையில் பாக்யாவை ஜெயிக்க விடாமல் வைப்பதற்காக ராதிகா தாடி பாலாஜியோடு சேர்ந்து எதாவது பிளான் போட போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
ஆனாலும் பாக்கியாவிற்கு கோபியும் ராதிகாவும் பாண்டிச்சேரியில் தான் சமையல் செய்யப் போகும் ஃபங்ஷனுக்கு தான் வர போகிறார்கள் என்பது தெரியாது. அது போல கோபிக்கும் ராதிகாவிற்கும் நான் தாங்கள் போகும் பங்க்ஷன் வீட்டிலிருந்து பாக்கியா தான் சமைக்கப் போகிறார் என்பது தெரியாது. இதனால் கோபியோ அல்லது ராதிகாவோ பாக்யாவிற்கு பிரச்சனை செய்ய இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications